உங்கள் வீடு தெற்கு பார்த்ததா? அப்போ உங்களுக்கு அடிச்சது ஜாக்பாட்!

South facing house vastu benefits
South facing houseCredits: AI image
Published on

வாஸ்து சாஸ்திரப்படி, நான்கு திசைகளிலும் நான்கு விதமான தேவர்கள் வீற்றிருந்து அருள் புரிவதாகக் கூறப்படுகிறது. செல்வத்தையும் செல்வாக்கையும் அதிகம் தரக்கூடிய திசை வடக்கு திசையாகும். வடக்கு திசையில்தான் செல்வத்தின் அதிபதியான குபேரன், மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமி இருப்பதாக ஐதீகம். இதனாலேயே, வடக்கு பார்த்த வீடுகளில் செல்வம் அதிகம் சேரும் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

தெற்கு திசையின் சிறப்புகள்;

பலருக்கும் தெற்கு திசை (South facing house) என்றாலே ஒருவித அச்சம் உண்டு. ஏனெனில், இது எமதர்மன் வசிக்கும் திசையாகவும், எமலோகம் இருக்கும் இடமாகவும் கருதப்படுகிறது. மேலும், இது செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற இடமாகும்.

இருப்பினும், தெற்கு பார்த்த வீட்டில் வசிப்பவர்களுக்கு எமதர்மனின் ஆசி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக:

  • ஆரோக்கியம்: தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தெற்கு பார்த்த வீட்டில் வசித்தால், வியாதிகள் குணமாகும். நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெருகும்.

  • பாதுகாப்பு: தெற்கு பார்த்த வீட்டில் இருப்பவர்களுக்கு எதிரிகள் தொல்லை இருக்காது. உயிர் போகும் அளவிற்கான விபத்துக்கள் ஏற்படாது என்று நம்பப்படுகிறது.

  • தைரியம்: செவ்வாய் பகவானின் ஆதிக்கம் இருப்பதால், இங்கு வசிப்பவர்கள் மிகுந்த தைரியசாலிகளாகத் திகழ்வார்கள்.

  • பித்ருக்களின் ஆசி: முன்னோர்களின் (பித்ருக்கள்) உலகம் தெற்கு திசையில் இருப்பதால், வரக்கூடிய ஆபத்துகளை முன்னரே சமிஞ்சைகளாக (Signs) உணர்த்தும் யோகம் இவர்களுக்கு உண்டு.

  • புகழ் மற்றும் அதிகாரம் (Fame and Authority)

    வாஸ்து புருஷ மண்டலத்தின்படி, தெற்கு திசை என்பது யமனுக்கு உரியது மட்டுமல்ல, அது ஒருவரின் சமூக அந்தஸ்து மற்றும் புகழைத் தீர்மானிக்கும் இடமாகும்.

    சரியான வாஸ்து அமைப்பில் தெற்கு பார்த்த வீடு இருந்தால், அந்த வீட்டில் உள்ளவர்கள் சமூகத்தில் பெரிய பதவிகளையும், கௌரவத்தையும் பெறுவார்கள். அரசியல்வாதிகள் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு இது ஒரு "Power House" ஆக அமையும்.

தெற்கு மனை வாங்குவோர் கவனிக்க வேண்டியவை;

நீங்கள் தெற்கு பார்த்த வீட்டு மனை வாங்கப் போகிறீர்கள் என்றால், கீழ்க்கண்ட வாஸ்து விதிகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்:

  1. உயரம்: தெற்கு பார்த்த மனையில், தெற்கு மூலையானது வடகிழக்கு மூலையை விட உயரமாக இருக்க வேண்டும். இது மிகுந்த அதிர்ஷ்டத்தைத் தரும்.

  2. கழிவுநீர் தொட்டி: கழிவுநீர் தொட்டி (Septic Tank) தென்மேற்கு அல்லது தென்கிழக்கு பகுதிகளில் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை அங்கு இருந்தால், அந்த வீட்டில் உள்ள பெண்களுக்குக் கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்:
தீய சக்திகளை விரட்டி வெற்றியைத் தரும் வெள்ளெருக்கு விநாயகர்!
South facing house vastu benefits

3. பீரோ வைக்கும் இடம்: வீட்டில் பணப் பெட்டி அல்லது பீரோவை தென்மேற்கு மூலையில் வைக்கவேண்டும். அதைத் திறக்கும்போது வடக்கு அல்லது கிழக்கு திசையை நோக்கி இருக்குமாறு அமைப்பது செல்வத்தைப் பெருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com