செவ்வாய், வெள்ளி கட்டாயம் இதை செய்யாதீர்கள்!

Tuesdays &  Friday
Tuesdays & Friday
Published on

இந்து சாஸ்திரத்தின் படி சில விஷயங்களை நம் முன்னோர்கள் ஒரு சில நாட்களில் செய்யலாம், ஒரு சில நாட்களில் செய்யக்கூடாது என்று கூறியிருப்பார்கள். மேலும் ஆன்மீக ரீதியாக பார்த்தோமேயானால் சில கிழமைகள் முக்கிய கிழமைகளாக கருதப்படுவதுண்டு. மேலும் ஒவ்வாெரு கடவுளுக்கும் ஒவ்வாெரு கிழமை உகந்ததாகவும், அந்த நாட்களில் நாம் என்ன செய்ய வேண்டும் எனவும் வகுத்து வைத்திருப்பார்கள். அந்த வகையில் வெள்ளி, செவ்வாய் முக்கிய கிழமைகளாக பார்க்கப்படுகின்றன.

இந்த இரு கிழமைகளும் மங்களகரன கிழமைகளாகவும், கடவுளை வழிபடுவதற்கான உகந்த கிழமைகளாகவும் உள்ளன. வீடுகளில் பலர் செவ்வாய், வெள்ளி விளக்கேற்றி வழிபடுவார்கள். நல்ல விஷயம் செய்யவும், பேசவும் இந்த இரு கிழமைகளில் செய்வார்கள். ஒரு சிலர் செவ்வாய் கிழமையில் சில செயல்கள் செய்ய தயங்குவதும் உண்டு.

இந்நிலையில் செவ்வாய், வெள்ளி அன்று வீடு துடைத்தால், வீட்டில் உள்ள ஐஸ்வர்யம் துடைத்து கொண்டு போய்விடும் என பலர் கூறி நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் இந்த இரு கிழமைகளில் வீடு துடைக்கலாமா? பூஜை அறை சுத்தம் செய்யலாமா? என நாம் இந்த பதிவில் காண்போம்.    

ஏன் செவ்வாய் வெள்ளி வீடு துடைக்க கூடாது?   

செவ்வாய், வெள்ளி இறைவழிபாட்டிற்கு உகந்த நாட்களாக பார்க்கப்படுவதால், மற்ற வேலைகளை செய்யாமல் முழுமையாக இறைவனை வழிபடுவதற்கு நேரத்தை ஒதுக்க வேண்டும்.

மேலும் இந்த இரு நாட்களில் வீடு துடைத்தால் வீட்டில் உள்ள லட்சுமி நம்மை விட்டு போய்விடும் என கூறுவதற்கு காரணம், இந்த இரு கிழமைகளும் லட்சுமி தேவிக்கு உகந்த நாட்களாக பார்க்கப்படுகின்றன. எனவே வீட்டை சுத்தம் செய்யும் போது தவறுதலாக ஏதேனும் பொருள் தொலைந்துவிட்டால் கண்டுப்பிடிப்பது கடினம். எனவே தான் செவ்வாய், வெள்ளி சுத்தம் செய்ய கூடாது என கூறுவார்கள்.

இதையும் படியுங்கள்:
வரலட்சுமி நோன்பு முதலில் தோன்றிய தலம் எது தெரியுமா?
Tuesdays &  Friday

மேலும் வீடு துடைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. சற்று கடினமான வேலை தான். எனவே அன்றைய தினம் கடுமையாக வேலை செய்யும் போது உடல் சோர்வு ஏற்படும். மேலும் காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மன கஷ்டம் உண்டாகி இறை வழிபாட்டில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும்.

செவ்வாய்க்கிழமைக்கு முதல் நாள் திங்கட்கிழமையும், வெள்ளிக்கிழமைக்கு முதல் நாள் வியாழக்கிழமையும் வீட்டை துடைத்து விட்டால், இந்த இரு கிழமையும் வேலை சுலபமாகி விடும். மேலும் தவிர்க்க முடியாத காரணங்களால் செவ்வாய், வெள்ளி வீடு துடைப்பவர்கள் காலை 6.30 க்கு முன்பாக துடைக்கலாம்.

அமாவாசை, பெளர்ணமி போன்ற திதி நாட்களில் வீடு மற்றும் பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டாம் எனவும் கூறப்படுகிறது. இந்த இரு நாட்களுக்கு முன்பாக வீடு துடைப்பவர்கள் சிறிது கல் உப்பை நீரில் சேர்த்து துடைக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com