புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி சாரதா நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. துர்க்கையின் 9 வடிவங்களை வழிபடும் திருவிழாவான நவராத்திரியில் அம்பாளின் பாதுகாப்பும், வலிமையும், பரிபூரண அருளும் கிடைக்கும் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கையாக உள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி துவங்கி அக்டோபர் 2ம் தேதி வரை இருக்கும். இந்த நவராத்திரி காலத்தில் வெற்றியும், அதிர்ஷ்டமும் கிட்ட வாங்க வேண்டிய 7 பொருட்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
துர்கா தேவியின் சக்திகள் நிறைந்தது துர்க்கை எந்திரம் ஆகும். இந்த யந்திரத்தை நவராத்திரியின் போது வைத்து வழிபட்டால் வாழ்க்கையில் வெற்றி கிடைப்பதோடு, வீட்டிலும் வேலை மற்றும் தொழிலிலும் நேர்மறை ஆற்றல்கள் அதிகரித்து நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் இந்த யந்திரத்தை தினமும் வழிபட்டு வந்தால், நம்பிக்கை அதிகரிப்பதோடு அதிர்ஷ்டமும் பெருகும்.
குடத்தில் தண்ணீர் நிரப்பி, மாவிலை, தேங்காய் வைத்து சாரதா நவராத்திரியின் போது தயாரிக்கப்படும் கலசத்தை தயாரித்தோ அல்லது புதிதாகவோ நவராத்திரி காலங்களில் வாங்கி வைக்கலாம். ஏனெனில் கலசம் என்பது பெருக்கம், நிறைவு ஆகியவற்றை குறிப்பதாக இருப்பதால் வீட்டில் கலசம் வைத்து வழிபட்டால் செல்வம் பெருகுவதோடு ஆன்மீக முன்னேற்றம் ஏற்படும்.
3. சிவப்பு ஆடை
சிவப்பு நிறம் பலம், செல்வம், வளம் ஆகியவற்றை குறிப்பதாக இருப்பதாலும், அதிர்ஷ்டத்தை தர வேண்டியும் நவராத்திரியின் போது சிவப்பு நிற ஆடைகள் அணிவது, தானம் செய்வது, வாங்குவதைச் செய்யலாம். துர்கைக்கு விருப்பமான நிறமாக சிவப்பு இருப்பதால், பல நன்மைகளையும் இது அளிக்க வல்லது.
நன்றி செலுத்தி ஆசிகளைப் பெற நவராத்திரியின் போது துர்கைக்கு பழங்கள், உலர் பழங்கள் படைத்து வழிபடுவது சிறப்பாகும். மேலும் நவராத்திரியின் போது பழங்கள் வாங்குவது அதிர்ஷ்டம் மற்றும் வாழ்க்கை நன்மைகளை அதிகம் தரக்கூடியதாகவும் இருக்கின்றன.
அன்பு மற்றும் மரியாதையின் அடையாளமாக இருக்கும் சாமந்தி, தாமரை, ரோஜா ஆகியவற்றை அம்பிகைக்கு படைத்து வழிபடுவது நவராத்திரியின் போது மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். அழகிய, வாசனை மிகுந்த மலர்களால் அலங்கரித்து, அம்மனை நவராத்திரி காலங்களில் அர்ச்சனை செய்து வழிபடுவதால் அம்பாளின் மனம் மகிழ்ந்து பல்வேறு வரங்களை அருளுவாள்.
மங்கள ரூபிணி அம்பிகை என்பதால் நவராத்திரி காலத்தில் குங்குமம் வாங்கி அம்பிகைக்கு படைத்து வழிபடுவதும், நெற்றியில் வைத்துக் கொள்வதும், மற்றவர்களுக்கு வழங்குவதும் அம்பிகையின் அருளை பெற்றுத் தரும். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு திருமணமான பெண்கள் எப்போதும் நெற்றியில் குங்குமம் அணிந்து இருக்க வேண்டும். வளர்ச்சி, அமைதி, அதிர்ஷ்டத்தை பெற பூஜையில் குங்குமம் வாங்கி வைத்து வழிபடுவது சிறப்பாகும் .
ஒளிமயமான எதிர்காலம் அமைய நவராத்திரி பூஜையின் போது ஒரே ஒரு நெய் விளக்காவது ஏற்றி வைத்து வழிபடுவது சிறப்பாகும் என்பதோடு அறிவு, ஆன்மீக விழிப்புநிலையும் ஏற்படும். தெய்வீகத்தின் அடையாளமாக நெய் விளக்கு இருப்பதால், இதை ஏற்றி வைத்து வழிபடும் போது அம்பிகை அதில் எழுந்தருளி ஆரோக்கியம், செல்வம், வெற்றியை தருவாள் என்பது நம்பிக்கை. தெய்வீக சக்தி எப்போதும் வீட்டில் நிறைந்திருக்க காலை, மாலை வேளைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகும் .