மகாளய பட்ச காலத்தில் செய்யக் கூடியவையும் செய்யக் கூடாதவையும்!

Mahayala patcham
Mahayala patcham
Published on

முன்னோர் வழிபாட்டுக்கு மிக உகந்த காலமாகக் கருதப்படுவது மகாளய பட்சம். பதினைந்து நாட்களைக் கொண்ட இக்காலத்தில் விண்ணுலகில் இருந்து முன்னோர்கள் நம் இல்லம் தேடி வருவதாக ஐதீகம். இக்காலத்தில் நமது வாழ்க்கை முறையை முன்னோர் வழிபாட்டோடு கூடிய இறைவழிபாட்டு காலமாக மாற்றிக்கொள்ள வேண்டியதுஅவசியம். மகாளய பட்ச காலத்தில் செய்யக் கூடிய மற்றும் செய்யக் கூடாத சில விஷயங்களைக் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

மகாளய பட்சம் காலத்தில் செய்யக்கூடியவை:

* மகாளய பட்சம் கடைபிடிக்கப்படும் பதினைந்து நாட்களும் நம்முடைய வீட்டினை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

* மகாளய பட்ச காலங்களில் தினமும்  குளிக்க வேண்டியது அவசியம்.

* மகாளய பட்ச பதினைந்து நாட்களும் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.

* முன்னோர்களை வழிபட்ட பிறகுதான் மற்ற பூஜைகளைச் செய்ய வேண்டும்.

* தினமும் பூஜை அறையில் விளக்கு ஏற்ற வேண்டும்.

* கிடைக்கும் நேரங்களில் நாம ஜபங்களை செய்து வர வேண்டும்.

* மகாளய பட்சம் காலத்தில் முன்னோர்கள் நம்மோடு இருப்பதால் வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும்.

* மகாளய தானம் மகத்தான தானம் என்பார்கள். இந்த நாளில் வஸ்திர தானம், அன்ன தானம், குடை, காலணி. போர்வை ஆகியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் நம் இல்லத்தில் இல்லாமை நீங்கி, செல்வ வளம் சேரும்.

* பசுக்களுக்கு உணவு வழங்குவது கோ தானம் செய்வது நம்முடைய தீராத பிரச்னைகளுக்கு தீர்வாக மாறும்.

* மகாளய பட்சம் காலத்தில் நம்மால் முடிந்த தானங்களை அவசியம் செய்ய வேண்டும்.

மகாளய பட்சம் காலத்தில் செய்யக் கூடாதவை:

* வீடுகளில் குப்பைகளை சேகரித்து வைத்திருக்கக் கூடாது.

* மாமிச உணவுகளை சாப்பிடக் கூடாது.

* மகாளய பட்சம் விரதம் இருப்பவர்கள் தாம்பத்திய உறவில் ஈடுபடக் கூடாது.

* உணவில் வெங்காயம், வெள்ளைப் பூண்டு உள்ளிட்டவற்றை சேர்க்கக் கூடாது.

* தேவையற்ற பேச்சுக்கள், வீண் சண்டைகளைத் தவிர்க்க வேண்டும். வீட்டில் அழுகை கூடாது.

* மகாளய பட்சம் காலத்தில் பதினைந்து நாட்கள் முன்னோர்களுக்கு உணவளித்து விரதம் இருப்பவர்கள் முடிவெட்டக் கூடாது. அதோடு நகங்களையும் வெட்டக் கூடாது.

* மகாளய பட்சம் காலத்தில் வீட்டில் எந்தவித சுப காரியங்களையும் செய்யக் கூடாது அது மட்டுமல்லாமல். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களையும் வாங்கக் கூடாது.

* மகாளய பட்சத்தில் நம் முன்னோர்கள் நம்மோடு இருப்பதால் கேளிக்கை நிகழ்ச்சிகளைத் தவிர்த்து முன்னோர்களை மட்டுமே நினைக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
கர்ப்பப்பை இறக்கம்: காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள்!
Mahayala patcham

மகாளய பட்சத்தில் பதினைந்து நாட்களும் நம் உணவில் அன்றாடம் சேர்க்க வேண்டிய, சேர்க்கக் கூடாத காய்கறிகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

சேர்க்கக் கூடாத காய்கறிகள்: முட்டைகோஸ், நூல்கோல், முள்ளங்கி, கீரை, பீன்ஸ் உருளைக்கிழங்கு, கேரட், கத்திரிக்காய் வெண்டைக்காய், காலிபிளவர், புரோக்கோலி, பட்டாணி, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி கத்திரிக்காய், வெள்ளை பூசணி, மஞ்சள் பூசணி முருங்கைக்காய், கோவைக்காய், பீட்ரூட்.

சேர்க்க வேண்டிய காய்கறிகள்: அவரைக்காய், புடலங்காய், பயத்தங்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, வாழைக்காய். சர்க்கரைவள்ளி கிழங்கு, சேனை கிழங்கு சேப்பங்கிழங்கு, பிரண்டை, மாங்காய், இஞ்சி, நெல்லிக்காய், பாகற்காய், பச்சைமிளகு, கறிவேப்பிலை, மிதிபாகற்காய், கொத்தவரங்காய், கறிவேப்பிலை, நார்த்தங்காய், கருணைக்கிழங்கு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com