எண்ணிலடங்கா பலன்களைக் கொண்ட கோரோசனை!

Enniladanga Palangalai Konda Korosanai
Enniladanga Palangalai Konda Korosanaihttps://ricardoalpoim.com
Published on

கோயில்களில் பூஜைக்குப் பயன்படுத்தப்படும் மிகவும் புனிதமான பொருட்களில் கோரோசனையும் ஒன்றாகும். கோரோசனை என்பது பசுவில் இருந்து எடுக்கப்படும் பொருளாகும். இது பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். சித்தர்கள் இந்த கோரோசனையை ஆன்மிகம் மற்றும் மருத்துவத்திற்குப் பயன்படுத்தி வந்தனர். முன்பெல்லாம் கோரோசனையை பாலில் சிறிது கலந்து குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள். இதை தீட்டு மற்றும் தோஷம் நீங்க வேண்டும் என்பதற்காக செய்தனர். இந்த கோரோசனையை கஸ்தூரி என்னும் மானிடமிருந்து கூட எடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பசு என்பது எத்தகைய தெய்வத்தன்மை பொருந்தியது என்பதை அறிவோம். அத்தகைய பசுவின் பித்தப்பையில் இருந்துதான் இந்த கோரோசனை எடுக்கப்படுகிறது. இதை மாடு இயற்கையாக இறந்த பிறகு அதிலிருந்து எடுத்து காய வைத்து நம் முன்னோர்கள் பயன்படுத்தினார்கள்.

கோயில்களில் அபிஷேகத்திற்கு கோரோசனையை பயன்படுத்துவார்கள். இதை தானமாகக் கொடுப்பதால் குலவிருத்தி ஏற்படும். கோரோசனையை தினமும் பயன்படுத்துவதால், சர்வமும் வசியமாகும், ஈர்ப்பு சக்தியும் வசீகரத் தோற்றமும் கொடுக்கக்கூடியது கோரோசனையாகும். நேர்மறை எண்ணங்கள் நமக்கு உருவாகும். தோல்விகள், அவமானம் நம்மிடம் நெருங்காது. இதை நெற்றியில் வைத்துக்கொண்டு தொடங்கும் காரியம் நிச்சயம் வெற்றி பெறும்.

இதை பூஜையறையில் வைத்து தீப தூபம் காட்டி வழிபடுவது சிறந்ததாகும். வியாழக்கிழமையில் பூச நட்சத்திரம் வரும் நாளில் கோரோசனையை வெள்ளி தட்டில் வைத்து தூப தீபம் காட்டுவதால் வீட்டில் செல்வம் பெருகும். மேலும், வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வாள் என்று நம்பப்படுகிறது.

பூஜையறையில் இருக்கும் விபூதி, குங்குமம், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றில் இந்த கோரோசனையை சிறிதளவு கலந்து வைத்துக்கொண்டு பன்படுத்துவது சிறப்பாகும். வெள்ளிக்கிழமை அன்று பன்னீர் அல்லது கோமியத்தில் சிறிது கோரோசனை பொடியை சேர்த்து கலந்து வீடு முழுக்க தெளிப்பதால், வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை சக்திகள் நம் இல்லத்தில் நிலைக்கும்.

இதையும் படியுங்கள்:
தகிக்கும் வெயிலில் இருந்து பறவைகளைக் காப்போம்!
Enniladanga Palangalai Konda Korosanai

இந்த கோரோசனையை நாட்டு மருந்து கடைகளில் வாங்கலாம். விலை சற்று அதிகமாக இருப்பதை வாங்கிக்கொண்டால் கலப்படம் இல்லாமல் இருக்கும். சித்தர்கள் கூறிய பாடலில் கோரோசனை பற்றிச் சொல்வது,

‘தேனாம் வெள்ளி ஞாயிறதில் திங்கள் வியாழம் நெய்யாகும்

பானாம் செவ்வாய் புதன் பாலாம் பகரு முடவன் நீராகும்

ஆனால் ஆவின் புல்லுருவி அதிலே குழைத்துத் திலர்த்தமிட

வானோ ரெல்லாம் வசமாவார் மண்ணில் சர்வ வசியமிதே’

வெள்ளி மற்றும் ஞாயிறு கிழமைகளில் இந்த கோரோசனையை திலகமாக தேனுடன் குழைத்து வைக்க வேண்டும். திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் நெய்யுடன் சேர்த்து திலகம் வைத்துக்கொள்ள வேண்டும். செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் பாலோடு சேர்த்து கோரோசனையை குழைத்து திலகமிட்டுக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் சகலமும் வசியமாகும் என்பது இந்தப் பாடலின் பொருள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com