எறிபத்த நாயனார்: சிவனடியாருக்காக பட்டத்து யானையையே வீழ்த்திய வீரத் தொண்டர்!

eripatha-nayanar-history
eripatha-nayanar-history
Updated on

றிபத்த நாயனார் கரூரில் வாழ்ந்து வந்தார். இவ்வூரில் சிவபெருமான்  ஆனிலையப்பர் என்ற நாமத்தில் அருள் பாலிக்கின்றார். எறிபத்த நாயனார் தம் வாழ்வில் சிவன் மீது கொண்ட பற்றினால் சிவன் மற்றும் சிவனடியார் களுக்கு துன்பம் இழைப்பவர்களை தண்டித்து வந்தார். இவர் கையில் எப்பொழுதுமே “பரசு” என்று ஆயுதம் இருக்கும்.

இது சிவபெருமானின் ஆயுதங்களில் ஒன்று சிவனடியார் களுக்கு துன்பம் இழைப்பவர்களை அவ்வாய்தத்தை எறிந்து அவர்களுக்கு துன்பத்திலிருந்து விடுதலை அளிப்பார். இவ்வாறு எறிபத்த நாயனார் தம்முடைய சிவதொண்டை வாழ்நாள் முழுவதும் ஆற்றி வந்தார். அதே கரூரில் சிவகாமிஆண்டார் என்ற வயது முதிர்ந்த சிவனடியார் வாழ்ந்து வந்தார். இவர் சிவபெருமானுக்கு மலர்களை பறித்து பூமாலை தொடுத்து சிவனுக்கு அலங்காரம் செய்து வரும் பணியைற்றி வந்தார்.

நாள்தோறும் காலையில் விழித்து ஆற்றில் குளித்துவிட்டு பூக்களை பறிக்கும்போதும் தன்னுடைய வாயைத் துணியினால் மூடிக்கொள்வார் தன்னுடைய சுவாசம் பட்டு மலர்கள் பரிசுத்த மற்றவையாக மாறிவிடக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர். இவ்வாறு சிவன் மீது அதீத பற்றும் பக்தியும் கொண்டவர்.

கரூரில் அப்பொழுது புரட்டாசி அஷ்டமி அன்று திருவிழா  கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. திருவிழாவிற்கு புகழ் சோழ சக்கரவர்த்தி என்ற மன்னரின் பட்டத்து யானை அமராவதி ஆற்றில் குளித்துவிட்டு அலங்காரத்துடனும்    ஐந்து பாகர்களுடனும்  கோவிலுக்கு சென்று கொண்டிருந்தது. அப்பொழுது அந்த யானைக்கு மதம் பிடித்து சிவகாமி ஆண்டார் கையில் வைத்திருந்த பூ கூடைகளை தும்பிக்கைகளால் தரையில் தட்டிவிட்டு ஓடியது. சிவகாமி ஆண்டார் அதனால் மனம் வருந்தி அழுத சத்தத்தை கேட்ட எறிபத்த நாயனார் அங்கு வந்து எதைப் பற்றியும் விசாரிக்காமல் அந்த யானையின் தும்பிக்கையை துண்டித்துடன் யானையுடன் இருந்த ஐந்து பேரையும் கொன்றார்.

இதையும் படியுங்கள்:
அம்பலப்புழா கிருஷ்ணன்: பக்தர்களின் குறையறுக்கும் ‘பால கோபாலன்’!
eripatha-nayanar-history

இதனை அறிந்து அங்கு வந்த புகழ் சோழ மன்னர் யானையை கொன்றது யார் என்று கேட்டபோது எறிபத்த நாயனார் அங்கு வந்து சிவனடியாருக்கு அந்த யானை துன்பம் விளைவித்ததால் நான் அதன் தும்பிக்கையே துண்டித்து ஐந்து பேரையும் கொன்றேன் என்றார்.

இதனைக்கேட்ட புகழ்ச்சோழர் யானை என்னுடையது இந்த தவறுக்கு நானே பொறுப்பு என்று வாலை எறிபத்த நாயனாரின் கையில் கொடுத்து தம்மை கொள்ளுமாறு ஆணையிட்டார்.

இதனைப் பார்த்த எறிபத்த நாயனார் புகழ்ச்சோழரின் தர்மநிலை தவறாத பண்பை கண்டு மனம் வருந்தி நடந்த இந்த இன்னலுக்கு தானே காரணம் என்று தன்னுடைய தலையை தானே துண்டிக்க வாலை உயர்த்திய போது சிவபெருமான் அசரீதியாக ஒழித்து “எறிபத்தா நீ என் மீதும் சிவனடியார் மீதும்  கொண்ட பற்றினை உலகிற்கு உணர்த்தவே இந்த நாடகம் நடைபெற்றது “இறந்த யானை மற்றும் ஐந்து பேரும் உயிர் பெற்று வருவர். எறிபத்த நாயனார் தம் வாழ்நாள் முழுவதும் சிவனுக்கும் சிவ அடியார்களுக்கும் தொண்டு செய்து இறுதியில் சிவனடி சேர்ந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com