உடல் ஒரு பொருள்... அப்போ உணர்வு?

- செல்வராஜ் ராமன்
Body and Feelings
Body and Feelings
Published on

வாழ்க்கை வாழ ; ஆனந்தம் எனும் பூங்காற்று வீச...

“To be where life is, to be as life is, to move as life moves"

உண்மை என்று ஒன்று இந்த உலகத்தில் இருக்குமானால்...

ஏன் இந்த உலகம் ஒன்றாக இல்லாமல் பிளவு பட்டு சண்டைகள், போர்கள், இழப்புகள் போன்றவை நடந்தேறி அதில் இருந்து திருந்தாமல், திரும்பவும் அதே சக்தியில், சாக்கடையில் மாட்டிக் கொண்டு பிறகு அமைதி ,பேச்சு என்று அலப்பறித்துக் கொண்டிருக்கிறது?

நம் உடலே ஒரு உலகம் . இந்த உலகத்தில் பல தேசங்கள் (உறுப்புகள்) தங்களை காப்பாற்றிக் கொள்ள போராடிக் கொண்டிருக்கின்றன.

இதயத்தை யார் இயக்குகிறார்கள்? பதில் இல்லை !

ஆனால் தானாக இயங்குகிறது. அதற்கு வேண்டிய சக்தியை யார் கொடுக்கிறார்கள்?

தெரியாது !

"அதில் உள்ள பிராணவாயுவை யார் கடத்துகிறார்கள்"? என்று நமக்குத் தெரியும் .

ஆனால் அது ஏன் காலம் ஆக ஆக தன் சக்தியை இழந்து மெதுவாக நின்று விடுகிறது?

வயது ஆகிறது! - ஏன்?

தெரியவில்லை!!

உடல் உறுப்புகள் வளர்கின்றன. - ஏன்?

தெரியவில்லை!!

இந்த உடல் உருவாகுவதற்கு வேண்டிய எல்லா சக்திகளும் இந்த பூமியில் இருந்து தான் பெறப்படுகிறது. இருந்தாலும் நாம் தான் அதை பாடாய் படுத்துகிறோம்.

எப்படி என்று எனக்கு தெரியும்; ஏன் என்று தெரியாது; என்பதுதான் விஞ்ஞானம்.

ஏன், எப்படி என்று எல்லாவற்றையும் புரிய முயற்சிக்க முடியுமா என்று ஆராய்வது தத்துவம்.

இதையும் படியுங்கள்:
பளபளப்பான முகத்திற்கு கிராம்பு ஜெல் தயாரிக்கும் முறை மற்றும் பயன்கள்!
Body and Feelings

மெய்யியலும், அறிவியலும் ஒன்று சேரும் இடம் தான் மெய்ஞானம்.

உடல் ஒரு பொருள்

உயிர் என்பது உணர்வு.

உணர்வை பார்க்க முடியும், விளக்க முடியும், உணர முடியும், கேட்க முடியும் , பேச முடியும் , கடத்த முடியும். உலகம் உருவாவதற்கு உணர்வே காரணம்.

அதில் ஏன் முரண்கள்?

முரண் இன்றி அரண் அமைய அறம் செய்ய விரும்பு என்று சொல்லி வைத்தார்கள். அது அமைய வேண்டி வந்தது தான் அறிவின் விளக்கமும், ஆன்மீக தேடலும்.

நம்மை அறிவோம். பிரபஞ்சம் புலப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com