
நம் விரலில் அணியக்கூடிய மோதிரங்கள் அழகுக்காக மட்டுமில்லாமல் அதனால் பலவிதமான பயன்களும் நமக்கு ஏற்படுகிறது. எந்த மாதியான மோதிரத்தை எந்த விரலில் அணிய வேண்டும் என்பதைப் பொருந்து நம் வாழ்க்கையை ஏற்றம் இருக்கும். இதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
நம் கைகளில் இருக்கும் ஐந்து விரல்கள் நவகிரகங்களில் குறிப்பிட்ட சில கிரகங்களையும், பஞ்ச பூதத்தில் குறிப்பிட்ட சிலவற்றையும் குறிப்பதாக இருக்கும். அதற்கு ஏற்றவாறு நம் விரல்களில் மோதிரம் போடும் போது முன்னேற்றம் ஏற்படும். தப்பான மோதிரத்தை தப்பான விரல்களில் போடுவது நமக்கு பிரச்னையை தரும். சரியான விரலில் சரியான மோதிரத்தை போடுவது மூலமாக நம் வாழ்வில் நன்மை நிகழும்.
கட்டை விரல் நவகிரகங்களில் சுக்கிர பகவானை குறிக்கிறது. இது மிக பெரிய செல்வாக்கையும், வலிமையையும் குறிக்கக்கூடிய விரலாக கருதப்படுகிறது. பஞ்ச பூதத்தில் நெருப்பைக் குறிக்கும். இந்த விரலில் மோதிரம் அணிவதின் மூலமாக உறவுகளிடம் நல்ல நெருக்கம் ஏற்படும், தலைமைத்துவ பண்பு, நீண்ட ஆயுள் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கட்டை விரலில் வெள்ளியால் ஆன மோதிரத்தை அணிய வேண்டும். Granet, red jasper போன்ற மோதிரத்தை அணிய வேண்டும்.
ஆல்காட்டி விரல் நவகிரகங்களில் குருவையும், பஞ்ச பூதத்தில் காற்றையும் குறிக்கும். வாழ்க்கையில் மிக பெரிய லட்சியத்தை வைத்திருக்கும் பிரச்னைகளை சரிசெய்ய ஆள்காட்டி விரலில் மோதிரம் அணிவது நன்மையைத் தரும். ஆள்காட்டி விரலில் ஆசிரியர்கள், தலைவர்கள், மத போதகர்கள் போன்றவர்கள் மோதிரம் அணியலாம். அவ்வாறு ஆள்காட்டி விரலில் மோதிரம் அணியும் போது தன்னை சார்ந்து இருக்கும் தொண்டர்கள், பக்தர்களுக்கு நல்ல வழிக்காட்டியாக அவர்கள் இருப்பார்கள். இந்த விரலில் தங்கத்தில் புஷ்பராகம் கல் அணிவது சிறந்தது.
நடுவிரல் சனிபகவானைக் குறிக்கும். பஞ்ச பூதத்தில் ஆகாயத்தைக் குறிக்கும். நடுவிரலில் மோதிரம் அணிவதால் உறுதி, விடாமுயற்சி கிடைக்கும். நீதித்துறையை சார்ந்தவர்கள், போலீஸ், ஜட்ஜ் போன்றவர்கள் நடுவிரலில் மோதிரம் அணியலாம். சனிபகவானின் நீலகல்லை இதற்கு பயன்படுத்தலாம். வெள்ளி அல்லது தங்கத்தில் மோதிரம் செய்து அணியலாம்.
மோதிர விரல் நவகிரகங்களில் சூரிய பகவானைக் குறிக்கும். பஞ்ச பூதத்தில் பூமியைக் குறிக்கும். உறவுகளிடம் நல்ல ஒற்றுமை ஏற்படும், அழகாக நல்ல உடல்வாகோடு இருப்பீர்கள். வாழ்வில் சந்தோஷமும், மகிழ்ச்சியும் கிடைக்கும். ஓவியத்துறையில், கலைத்துறையில் இருப்பவர்கள் அணியலாம். மாணிக்க கல், சன் ஸ்டோன் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
சுண்டுவிரல் புதன் பகவானைக் குறிக்கும். பஞ்சபூதத்தில் நீரைக் குறிக்கும். அதிகமாக பயணம் செய்யக்கூடியவர்கள், Finance, bankingல் இருக்கக்கூடிய நபர்கள் அணியலாம். இதை அணிவதால் ஒரு விஷயத்தை நன்றாக ஆழமாக அறிந்துக் கொள்ளும் அறிவு கிடைக்கும். தங்கம் மற்றும் வெள்ளியில் முத்து, மரகதம், moon stone பயன்படுத்தி அணியலாம். இதை அணிவதால் பணம் சம்மந்தமான மாற்றம் வாழ்வில் ஏற்படும்.