அனுமன் சாலிசா மகிமை: பயம் போக்கி பலம் தரும் கவசம்!

Glory of Hanuman Chalisa
Glory of Hanuman Chalisa
Published on

க்த துளசி தாசரால் 40நாட்கள் சிறைச்சாலையில் அவர் இருந்த போது இயற்றி பாடியது அனுமன் சாலிசா. துளசி தாசர் அவாதி என்ற மொழியில் இந்த நாற்பது பாடல்களை பாடினார்.

அனுமன் சாலிசாவின் ஒவ்வொரு 40 பாடல்களும் ஒரு குறிப்பிட்ட வரத்தை வழங்குகின்றது, பக்தரின் பக்தி அல்லது சிரத்தையைப் பொறுத்து, ஒவ்வொரு பாடலின் பலனையும் பெறுவார்கள் எனக் குறிப்பிடுகின்றது.

முகாலய மன்னன் துளசிதாசரை, தான் அவதிமதிக்கப் பட்டதாக நினைத்து சிறையில் அடைத்தான். சிறையில் 40அனுமன் சாலிசா பாடல்களை இயற்றி அவற்றை பாடியும் வந்தார். ஆச்சரியமாக வானரங்களின் கூட்டம் நகரில் அதிகமானது.

அதை சமாளிக்க முடியாமல் மன்னன் துளசிதாசரை பார்க்க வந்தான். ராமர் வருவார் என கூறிய வரை மன்னன் தன் தவறை உணர்ந்து விடுவித்தான்.

பல பெருமைகள் கொண்ட அனுமன் சாலிசாவை காலை, மாலை என தினமும் படித்து வர பல நன்மைகள் உண்டாகும். கெட்ட கனவுகள், தீய சக்திகள் நம்மிடமிருந்து விலக அனுமன் உதவுவான். இரவு தலையணை அடியில் அனுமன் சாலிசாவை வைத்துக் கொள்ளலாம்.

அனுமன் சாலிசாவை தினமும் பாராயணம் செய்வதால் வாழ்வில் வரும் அனைத்து தடைகளையும் அனுமன் அகற்றி விடுவார். குறிப்பாக தாழ்வு மனப்பான்மை சிந்தனைகள் அகலும்.செய்யும் செயலில் ஈடுபாடு மற்றும் தெளிவு கூடும்.

இதையும் படியுங்கள்:
இறைவனோடு இணையும் இனிய பயணம்: பக்தி மார்க்கம்!
Glory of Hanuman Chalisa

உள் வலிமையை கூட்டும். நோய்வாய்பட்டவர்களின் முன் படிக்க அவர்கள் ஆரோக்கியம் மேம்படும். விபத்தை தவிர்க்க பயணத்தின்போது, பயணத்திற்கு முன் அனுமன் சாலிசா படித்துவிட்டு செல்லலாம்.

பஜ்ரங்பலி என அழைக்கப்படும் அனுமனை நம்பினோர் கெடுவதில்லை. சனிதோஷம் நீங்க அனுமன் சாலிசா படிக்கலாம். வீட்டில் சண்டை, சச்சரவுகள், மனச்சோர்வு போன்றவை அகலும். வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் பெருக அனுமன் சாலிசா படித்து பாராயணம் செய்து மேன்மையடையலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com