யுகாதி முதல் குடி பாட்வா வரை: வசந்த காலத்தை வரவேற்கும் இந்தியாவின் புத்தாண்டு விழாக்கள்!

New Year Celebrations
New Year Celebrations
Published on

ன்று குடி பாட்வா (Gudi Padwa) மகாராஷ்டிரா மாநிலத்தில் கொண்டாடப்படும் புத்தாண்டு பண்டிகை. விவரமாக பார்க்கலாமா...

குடி பாட்வா(Gudi Padwa) என்று அழைக்கப்படும் இந்த பண்டிகை ஆழமான கலாச்சார மற்றும் பருவகால முக்கியத்துவத்துடன் கொண்டாடப்படும் பாரம்பரிய மராத்தி மற்றும் கொங்கணி இனத்தினரின் புத்தாண்டைக் குறிக்கிறது. அதாவது இன்று மார்ச் 19 ந் தேதி , இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. தெலுங்கு தேசத்தை சேர்ந்தவர்களுக்கும் இன்றுதான் புதுவருடம் தொடங்குகிறது. அவர்கள் இந்த நன்னாளை யுகாதி என்றழைக்கிறார்கள்.

இந்த குடி பாட்வா பண்டிகையும் புதுப்பித்தல், வெற்றி மற்றும் வசந்த காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. அதாவது புதிய தொடக்கங்கள், செழிப்பு மற்றும் பருவகாலத்தை புதுப்பித்தல் ஆகியவற்றை பிரதிபலிக்கிறது.

குடி பாட்வா பண்டிகையின் முக்கிய சின்னம்:

மகாராஷ்டிராவில் நடைபெறும் இந்த குடி பாட்வா கொண்டாட்டத்தில் குடி அதாவது வெற்றிக்கொடி முக்கிய பங்கை வகிக்கிறது.

"குடி" என்றால் பிரம்மாவின் கொடி "பத்வா "அல்லது "பாட்வா" என்றால் சந்திரனின் பிரகாசமான கட்டத்தின் முதல் நாள். இயற்கை பேரழிவினால் அனைத்து மக்களும் அழிந்த பிறகு பிரம்மா உலகை மீண்டும் உருவாக்கியதாக கூறப்படுகிறது. காலம் மீண்டும் தொடங்கியது. ஆகவே இந்த நாளில் பிரம்மனை வழிபடுவது இந்த பண்டிகையின் மிக முக்கியமான சிறப்பம்சமாகும்.

இதையும் படியுங்கள்:
கிருஷ்ணரின் கையில் சுழலும் 'சுதர்சன சக்கரம்': அதன் ரகசியங்களும் அபார சக்திகளும்!
New Year Celebrations

நான்கிலிருத்து ஐந்து அடி உயரமுள்ள ஒரு மூங்கில் கம்பத்தில், மஞ்சள், சிவப்பு அல்லது பச்சை போன்ற பிரகாசமான பட்டுத் துணியால் போர்த்தப்பட்டு, மா மற்றும் வேப்ப இலைகள், பூக்கள், சர்க்கரைப் படிகங்கள் (கத்தி) ஆகியவற்றால் மாலையிடப்பட்டு, அதன் உச்சியில் தலைகீழாக வைக்கப்பட்ட வெள்ளி அல்லது செப்புக் கலசம் (குடம்) வைக்கப்பட்டிருக்கும். நுழை வாயில்களில் போடப்படும் ரங்கோலி கோலங்கள் நேர்மறை ஆற்றலை வரவேற்கிறது,

அதிகாலையில் உப்டான் (மஞ்சள், சந்தனம் மற்றும் பால் ஆகியவற்றால் ஆன கலவை) எனற சொல்லக் கூடிய மூலிகை நீரால் குளித்த பிறகு அனைத்து சடங்குகளையும் செய்ய ஆரம்பிக்கிறார்கள்.

வீடுகளைச் சுத்தம் செய்து, ரங்கோலி வரைந்து, குங்குமம், மஞ்சள், அரிசி, பூக்கள், அகல் விளக்கு, ஊதுபத்தி மற்றும் பழங்களுடன் ஒரு பூஜை தட்டையும் தயார் செய்கிறார்கள்.

வெற்றியின் ஆற்றலைப் பெருக்கும் வகையில், மேளதாளங்கள் மற்றும் ஆரவாரங்களுடன், பிரதான நுழைவாயில் அல்லது பால்கனியின் வலது பக்கத்தில் குடி ஏற்றப்படுகிறது.

குடி பாட்வாவில் செய்யபடும் பாரம்பரிய உணவுகள்:

குடி பாட்வா பண்டிகைக் கொண்டாட்டங்களில் மகாராஷ்டிரா மாநிலத்தின் பாரம்பரிய உணவுகள் முக்கிய பங்கை வகிக்கின்றன.

அதாவது பூரண் போளி, ஸ்ரீ கண்ட், ஆம்ரஸ், சாபுதானா கிச்சடி, கனோலா, மோதகம், போன்ற உணவுகளை செய்து குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்ச்சியாக உண்கிறார்கள். இந்த உணவுகள் பருவகால விளைபொருட்களையும், மகிழ்ச்சிக்கான இனிமையையும், ஆரோக்கியத்திற்கான சத்துக்களையும் முன்னிலை படுத்துகின்றன

குடி பாட்வா பண்டிகையின் முக்கியத்துவம்:

மகாராஷ்டிராவில் இந்த குடி பாட்வா மிகவும் உயிரோட்டமானதாகவும், ஆழமான கலாச்சாரத்தை கொண்டதாகவும் விளங்குகிறது. இந்தப் பண்டிகை முக்கியமாக மகாராஷ்டிரா, கோவா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளிலும் அனுசரிக்கப்படுகிறது. இந்த பண்டிகை ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் கொண்டாடப்படும் உகாதி பண்டிகையை ஒத்திருக்கிறது.

இதையும் படியுங்கள்:
தம்பதியர் ஒற்றுமை பெருகவேண்டுமா? உத்தரகோசமங்கைக்கு ஒருமுறை சென்று வாருங்கள்!
New Year Celebrations

இந்த நாள், தீமையின் மீது நன்மையின் வெற்றியையும், துன்பத்தின் மீது செழிப்பின் வெற்றியையும் பிரதிபலிக்கும் நாளாக கருதப்படுகிறது. விஷ்ணு, பிரம்மா மற்றும் லட்சுமி தேவியின் வழிபாட்டால் இல்லங்களில் வளம் பெருகிறது. அதே சமயம் பருவ காலப் புதுப்பித்தல் மூலமாக இயற்கையின் வளர்ச்சிச் சுழற்சியும் பிரதிபலிக்கிறது.

குடி பாட்வாவின் முக்கியத்துவம் சடங்குகளுக்கு அப்பாற்பட்டது. இந்த பண்டிகையானது, குடும்பப் பிணைப்பையும், அறுவடைக்கான நன்றியுணர்வையும், செழிப்புக்கான தீர்மானங்களையும் ஊக்குவிக்கிறது. மேலும், ஆன்மீகம், விவசாயம் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தை இணைக்கும் விதத்தில் இந்த பண்டிகை கொண்டாடப் படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com