
நம் வீட்டில் பல விதமான மரங்களை அதிர்ஷ்டத்திற்காகவும், அழகுக்காகவும் வளர்ப்போம். அந்த வகையில் நெல்லிக்காய் மரம் என்பது வீட்டிற்கு எந்த விதமான அதிர்ஷ்டத்தையும், பலனையும் கொடுக்கும் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
நெல்லிக்காய் மரம் மருத்துவ ரீதியாக பல்வேறு விதமான பலனைத் தருவதோடு மட்டுமில்லாமல், சாஸ்திர ரீதியாகவும் வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருகிறது.
சாஸ்திரத்தில் நெல்லிக்காய் மரத்தை லக்ஷ்மி கடாக்ஷம் என்று சொல்கிறார்கள். மகா விஷ்ணுவின் அம்சமாக கருதப்படுகிறது. ஆகவே, நெல்லிக்காய் மரம் வளரத்தால் வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.
நெல்லிக்காய் மரம் வளர்ப்பதால் வீட்டில் தீய சக்தி அண்டாது. கண் திருஷ்டி ஏற்படாது என்று சொல்லப்படுகிறது.
நெல்லிக்காய் மரத்தை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வழிப்பட்டால், நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
நெல்லிக்காய் மரத்தை வடகிழக்கு திசையை நோக்கி வைத்தால் மிகவும் சிறப்பு.
காட்டு நெல்லிக்காய் புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு மூன்று சுவையும் கொண்டது. இதை சாப்பிடுவதால் உடல் சூட்டைக் குறைக்கக்கூடியத் தன்மை உண்டு.
கண்களுக்கு குளிர்ச்சி தரக்கூடியத் தன்மை இதற்கு உண்டு.
செரிமானத்தை தூண்டும், குடல் வாயுவை சரி செய்ய உதவும்.
இதில் கால்சியம் அதிகமாக உள்ளதால் எலும்பு சம்மந்தமான பல்வேறு நோய்களை குணமாக்கும்.
நெல்லிக்காயில் மூன்று ஆப்பிள்களுக்கு சமமான சத்துக்கள் இருக்கின்றது. இதில் வைட்டமின் சி, கால்சியம் அதிகம் உள்ளது.
நெல்லிக்காய் தலைமுடியை கருமையாக்கவும், சிறப்பாக வளர வைக்கவும் உதவும்.
தினமும் ஒரு நெல்லிக்காயை உண்பதால் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியும் என்று சொல்லப்படுகிறது.
காலையில் இஞ்சி சாறுடன் நெல்லிக்காயை சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் உடலில் தேவையில்லாத கொழுப்பை குறைத்து சரியான எடையை நமக்கு கொடுக்கும்.
ஒரு நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி உள்ளது. எனவே, இது வயிற்றில் உள்ள புண்களைக் குறைத்து குணமாக்கும்.
நெல்லிக்காய் நோய்த்தொற்றை தடுக்கும் என்று சொல்லப்படுகிறது.
இத்தகைய சிறப்புகளைக் கொண்ட நெல்லிக்காய் மரத்தை நம் வீட்டில் வளர்ப்பதால் அதிர்ஷ்டத்துடனும், ஆரோக்கியத்துடனும் வாழலாம்.