தீராத நோய்களைத் தீர்க்கும் சக்தி வாய்ந்த நாராயணீய மந்திரம்

Shree Narayana
Shree Narayana
Published on

புகழ் பெற்ற நாராயணீயம் கிபி 16 ஆம் நூற்றாண்டில் கேரளாவைச் சேர்ந்த நாராயண பட்டத்திரி என்பவரால் குருவாயூரப்பன் சன்னதியில் இயற்றப்பட்ட அருங்காவியம். இது பாகவதபுராணத்தின் சுருக்கமாக அமைந்துள்ள ஸ்லோகங்களின் தொகுப்பு.. நாராயணீயம் 100 தசகங்களைக் கொண்டுள்ளது, ஒவ்வொன்றிலும் சுமார் 10 ஸ்லோகங்கள் அடங்கியுள்ளன.

நாராயணீயம் இயற்றிய நாராயண பட்டத்திரி குருவின் வியாதியை தான் வாங்கிக் கொண்டு குருவுக்கு அந்நோயிலிருந்து விடுதலையளித்து குரு தன் பணியைத் தொடர உதவினாராம். ஆனால் அவர் ஏற்றுக் கொண்ட வாத நோய் அவரை மிகவும் வருத்தியது.

பட்டத்திரியின் துன்பத்தைக் காணப் பொறுக்காமல், சிலர் ஒரு ஜோசியரிடம் சென்று பரிகாரம் கேட்டபோது ஜோசியர், அவர்களிடம் நாக்கில் மீனை வைத்துக் கொண்டு குருவாயூரப்பன் கோயிலில் அவரை பாடச் சொல் என்றாராம். அதன் பொருளை புரிந்து கொண்டார் பட்டத்திரி. 'திருமாலின் தசாவதாரங்களின் தொடக்கமான மத்ஸ்ய அவதாரம் முதற்கொண்டு தசாவதார பெருமைகளை எடுத்துரைக்கும்படியாக எழுதிடுக’ என்பதே குருவாயூரப்பனின் ஆணை..

பட்டத்திரி குருவாயூரப்பன் சன்னதியில் ஒவ்வொரு லீலையை பாடி முடித்தவுடன் குருவாயூரப்பனே தலையை அசைத்து அங்கீகாரம் செய்ததாக சொல்லப்படுகிறது. கடைசி தசகத்தைப் பாடி முடித்தவுடன் குருவாயூரப்பனின் அருளால் கொடிய வியாதியிலிருந்து குணமாக்கப்பட்டார்.

நாராயணீயம் 1036 ஸ்லோகங்களைக் கொண்ட அருங்காவியம். அதில் தசகம் எட்டில் உள்ள குறிப்பிட்ட 13 வது ஸ்லோகம் காஞ்சி ஸ்ரீ மஹாபெரியவா அவர்களால், கடுமையான நோய்களால் குறிப்பாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த ஸ்லோகத்தை நம்பிக்கையுடன் தொடர்ந்து சொல்லி வந்த உறவினர் ஒருவர் புற்றுநோயிலிருந்து முழுவதுமாக குணமடைந்தார் என்பது அதிசய உண்மை.

இதையும் படியுங்கள்:
ஸ்ரீ ராம நாமம் - மிக எளிய மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம்!
Shree Narayana

என் தங்கையின் நெருங்கிய உறவனர் ஒருவர் சில வருடங்களுக்கு முன் குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவர் குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி கொண்டவர். அவருக்கு தொடர்ந்து கீமோ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. சிகிச்சையின்போது உறவினர் இடைவிடாமல் நாராயணீயம் எட்டாவது தசகத்தில் உள்ள 13 வது ஸ்லோகத்தை பக்தியுடனும் நம்பிக்கையுடனும் ஜபிக்கலானார்.

அவர் கீமோ சிகிச்சையை எதிர்கொள்ளும் மன வலிமையும், உடல் வலிமையும் பெற்றது, அவர் வணங்கும் குருவாயூரப்பனின் அருளால் தான். மேலும் கீமோ சிகிச்சையின் போது பக்கவிளைவாக ஏற்படும் சோர்வு, பலவீனம், தலைமுடி உதிர்வு போன்றவை கூட இல்லாமல் இருந்தது மருத்துவர்களுக்கே வியப்பை அளித்தது.

சிகிச்சை முற்றிலும் முடிந்து செக்அப் செய்த போது எல்லாமே அவருக்கு நார்மல் என ரிப்போர்ட் வந்தது. அடுத்து வந்த ஆண்டுகளில் செய்த மருத்துவ பரிசோதனைகளிலும் நார்மல் ரிப்போர்ட் தான். இப்போதும் இந்த சக்தி வாய்ந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வருகிறார்.

ஸ்ரீ மஹா பெரியவா பரிந்துரைத்த அந்த நாராயணீயம் எட்டாவது தசகம் 13வது ஸ்லோகம் இதுதான்.

அஸ்மிந் பராத்மந் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தா பிதபத் மயோநி: ।

அனந்தபூமா மம ரோகராஸிம்

நிருந்தி வாதாலயவாஸ விஷ்ணோ

அற்புதமான பலன்களைத் தரும் மேற்கூறிய ஸ்லோகத்தை பக்தியுடனும் நம்பிக்கையுடனும் ஜபித்து நோய் தாக்கத்திலிருந்து விடுபட்டு குருவாயூரப்பனின் அருளைப் பெறலாம்..

ஹரே கிருஷ்ணா!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com