
சிவபெருமான் அந்த காசுரனுடன்போர் புரிந்து வெற்றி அடைந்தார். அப்போது சிவனின் நெற்றியிலிருந்து வியர்வைகள் ஒன்று சேர்ந்து பூமியில் விழுந்தன. அதிலிருந்து ஒரு பூதம் பயங்கர தோற்றத்துடன் வெளி வந்தது. அதற்கு மிகவும் பசியாக இருந்ததால் போரில் கீழே விழுந்த அனைத்தையும் உண்டது. அப்போதும் அந்த பூதத்திற்குப் பசி தீரவில்லை. அதனால் அது சிவனை நோக்கி தவம் செய்ய ஆரம்பித்து. அதன் தபஸை மெச்சிய சிவபெருமான் அதற்கு என்ன வேண்டும் என்று கேட்க அது, "இந்த பூமி முழுவதும் எனது கண்காணிப்பில் இருக்க வேண்டும். அழிக்கும் சக்தியும் வேண்டும்" என வரம் கேட்டது.
இதைக் கவனித்த பிரம்மா மற்றும் தேவர்கள் அனைவரும் அந்த பூத்தைக் குப்புறப் தள்ளி விட்டனர். குப்புற விழுந்தவுடன் அது எழுந்திருக்க விடாமல் அனைவரும் அதன் மீது உட்கார்ந்தனர். அந்த பூதம் "எனக்கு பசிக்கிறது" என்றது. அதற்கு பிரம்மா "பூமியில் பிராம்மணர்கள் செய்யும் வைவஸ்த ஹோமத்தில் கொடுக்கும் பொருட்களை நீ உண்டு கொள். மேலும் பூமியில் வீடு கட்டுபவர்கள் உனக்கு ஹோமம் செய்வார்கள். வாஸ்து பூஜை செய்வார்கள். அதை நீ சாப்பிட்டுக் கொள்" என்றார்.
பிரும்மாவும் மற்றவர்களும் அவனுக்கு வாஸ்து புருஷன் என்று பெயரிட்டனர். இவ்வாறு வாஸ்து புருஷன் தோன்றினான்.
வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை நீக்க சில குறிப்புகள்:
கஷ்டங்கள் தீர தீபம் ஏற்றுவது நல்லது. தீபம் இருக்குமிடத்தில் தெய்வ அனுக்கிரகம் நிறைந்திருக்கும். வீட்டில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.
சிவன் பார்வதி விநாயகர் முருகர் படம் ஒன்றை கிழக்கு பார்த்து மாட்டி வைத்தால் வாஸ்து குறை நீங்கும்.
செவ்வாய் வெள்ளி ஆகிய தினங்களில் பூஜைஅறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும்
நமது வலது உள்ளங்கையில் மகாலக்ஷ்மி இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும். இது துவாதச தரிசனம் என அழைக்கப்படுகிறது.
அமாவாசை மாதப்பிறப்பு ஜன்ம நட்சத்திர தினங்களில் எண்ணை தேய்த்துக் குளிக்கக் கூடாது.
நெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை ஐந்தும் கலந்து 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால் தேவியின் அருளும் மந்திர சக்தியும் கிடைக்கும்.