தியானம் வாழ்க்கைக்கு எப்படிப் பயனளிக்கிறது?

How Meditation Benefits Life
How Meditation Benefits Lifehttps://jothidaveenai.com

தியானம் வாழ்க்கைக்கு பயனளிக்கும் என்று நம் முன்னோர்கள் நமக்கு கற்பித்து இருக்கிறார்கள். சாந்தமாய் இருந்து ஒரே சிந்தனையுடன் தன்னிலும் தன்னைச் சுற்றி உள்ள எல்லாவற்றிலும் குடிகொள்ளும் ஜீவசக்தி, இறைவன் அருளும் சக்தி என்றும் மனதில் கொண்டுள்ள ஆராதனையே தியானம்.

யுகங்கள் கழியும்போது நிகழவிருக்கும் மனதின் சுத்திகரிப்பு இந்த ஜன்மத்திலேயே பரிணமிக்கும் சாதனை என்று தியானத்தை சிறப்பிக்கலாம்.

தியானத்தின் பயன்களை நவீன அறிவியல் அங்கீகரித்துள்ளது. மனதும் புத்தியும் சக்தி பெற ஒரே ஒரு பாதையை மட்டுமே நவீன விஞ்ஞானம் உபதேசிக்கின்றது. அதுதான் தியானத்தின் பாதை. மனதை ஒரு நிலைப்படுத்தி, ஒரு தனிப்பட்ட புள்ளியில் மையப்படுத்தி, தியானம் செய்தால் அதன் மூலம் அனைத்து சிந்தனைகளிலிருந்தும் விடுதலை பெறலாம்.

தியானத்தின் ஆழமான நிலையில் செல்லும்போது மூளையில் உள்ள பீடா அலைகள், ஆல்ஃபா, காமா, டெல்டா, தீட்டா என்ற அலைகளாக மாறுதல் அடைகின்றன என்று அறிவியல் கற்பிக்கின்றது. இவ்வலைகள் மூளையை அநேக மடங்கு விருத்தி அடையச் செய்து செயல்பட வைக்கும் என்பது ஆராய்ச்சியின் வாயிலாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
தடைகளை நீக்கி ஐஸ்வர்யம் பெருக்கும் குத்து விளக்கு பூஜை!
How Meditation Benefits Life

மேலும், நாம் தியானம் செய்ய ஆரம்பிக்கும்பொழுது, அருட்பேராற்றல் இரவும் பகலும் அனைத்து நேரங்களிலும், எல்லா இடங்களிலும், எல்லா தொழில்களிலும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் வழிநடத்தியுமாக அமைகிறது!

நாம் அமர்ந்துள்ள இடத்தைச் சுற்றிலும் நல்ல தெய்வீக ஆற்றலே நிறைந்துள்ளன. தாய்க்கு வணக்கம், தந்தைக்கு வணக்கம், குருவுக்கு வணக்கம் என்று கூறிவிட்டு மனதை ஒருநிலைப்படுத்தி தியானத்தில் ஆழ்ந்தால், மனம் அமைதி அடையும்; சாந்தம் நிலவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com