
அன்றாடம் நாம் பூஜைக்கு பலவித பூக்களை உபயோகிக்கிறோம். அவை வாடியதும் குப்பைக்கு சேர்த்து விடுகிறோம்.
வாடிய பூக்களை சேகரித்துக் கொண்டே வாருங்கள். சேர்ந்ததும் அவற்றை நன்கு காய விடவும்.
காய வைத்த மலர்களை நன்கு பவுடராக்கி கொள்ளவும். இதனுடன் சந்தனத் தூள், ஜவ்வாது, கற்பூரம் நுணுக்கியதை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
இதை நமக்கு பிடித்த வடிவத்தில் தட்டி கோனாகவோ, வில்லைகளாகவோ செய்து வைக்கவும். நன்கு நிழலில் காய்ந்ததும் டப்பாவில் போட்டு வைக்கவும்.
பூஜையின் போது இதை ஏற்றி வைக்க நறுமணத்தில் வீடே கமகமக்கும். கெமிக்கல் இல்லாத நாமே தயாரித்த இந்த இன்ஸ்டன்ட் கோன் சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தாது.
வாசனை வேண்டுமெனில் சாம்பிராணி, தசாங்கம் ஆகியவற்றை சேர்த்து தயாரிக்கலாம். பயனுள்ள விதத்தில் நம் வீட்டில் வீணாவதை வாசனை பொருளாக மாற்றி, உபயோகிக்கும் போது மனநிறைவாக இருக்கும்.
நான் செய்து பார்த்து உபயோகிப்பதை அனுபவத்தில் எழுதியுள்ளேன்.