
தினமும் கோவிலுக்கு போவது, இஷ்ட தெய்வத்தை கும்பிடுவது, விரதம் இருப்பது போன்றவற்றை விடாமல் செய்யும் போது நம் வீட்டில் தெய்வத்தின் சக்தி நமக்கு துணையாக இருக்கிறதா இல்லையா? என்பதை எப்படி அறிகுறிகள் மூலம் தெரிந்துக்கொள்வது என்பதை பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
தெய்வத்தின் சக்தி நம்முடன் இருக்கிறது என்றால் முன்கூட்டியே ஏதேனும் ஆபத்து வரும்போது அதை தெரிவிக்கும் அறிகுறிகளை நமக்கு காட்டும். தெய்வசக்தி இருக்கும் போது செல்வ செழிப்புடன் இருப்போம்.
1.நம் வீட்டிற்கு பறவைகள், காகம், சிட்டுக்குருவி, குளவி போன்ற நேர்மறையான ஆற்றலைக் கொண்ட சின்ன அதிர்வலைகளைக் கூட உணரக்கூடிய உயிரினங்கள் அடிக்கடி உங்கள் வீட்டிற்கு வந்தால், தெய்வீக சக்தி இருப்பதாக அர்த்தம். அதுமட்டும் அல்லாமல் முன்னோர்களின் ஆசியும் நிறைந்திருப்பதாக பொருள். இந்த உயிரினங்கள் நேர்மறையான ஆற்றல் இருந்தால் மட்டுமே வீட்டிற்கு வரும்.
2.காமதேனு, மகாலக்ஷ்மியின் அம்சம் என்று பசுமாட்டை சொல்வார்கள். அத்தகைய பசு மாடு எல்லோர் வீட்டிற்கும் உணவிற்காக செல்லாது. சிலர் வீட்டிற்கு மட்டுமே பசுமாடு உணவு கேட்டு செல்லும். அப்படி பசுமாடு உங்கள் வீட்டிற்கு வந்தால், கண்டிப்பாக உங்கள் வீட்டில் நேர்மறையான ஆற்றல் தெய்வீக சக்தி நிறைந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.
3.நீங்கள் வீட்டிற்குள் செல்லும் போது அந்த வீட்டில் இருக்கும் சூழ்நிலை உங்களுக்கு மனநிறைவு, சந்தோஷம் அமைதி ஆகியவற்றை தரும். அதை நீங்கள் மனப்பூர்வமாக உணர முடியும். உங்கள் வீட்டில் நல்ல நறுமணம் வீசும். அது பூஜையறையில் இருந்து வரும் மணமாக இருக்கலாம் இல்லை சமையலறை போன்ற இடத்திலிருந்து வரும் நறுமணமாக இருக்கலாம். அவ்வாறு இருந்தால் அந்த வீட்டில் தெய்வசக்தி இருப்பதாக பொருள்.
4.வீட்டில் விளக்கேற்றும் பழக்கம் இருந்தால், நீங்கள் பூஜையறையில் ஏற்றும் விளக்கு நீங்களாக அணைக்கும் வரை பிரகாசமாக நன்றாக எரியும். நடுவிலே தானாக விளக்கு அணையாது. அப்படி இருந்தால் அந்த வீட்டில் நேர்மறையான சக்தி இருப்பதாக பொருள்.
5.உங்கள் வீட்டில் ஒரு தெய்வத்தின் பெயரை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டேயிருக்கிறீர்கள். ஒரு தெய்வம் சம்மதமான விஷயங்களை பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் அந்த தெய்வத்தின் சக்தி அந்த வீட்டில் நிறைந்திருப்பதாக பொருள். ஒரு வீட்டில் தெய்வீக சக்தி நிறைந்திருந்தால் அந்த தெய்வத்தை பற்றிய எல்லா விஷயங்களும் அந்த வீட்டில் தொடர்ந்து நடந்துக் கொண்டேயிருக்கும். எந்த ஒரு பிரச்னையும் வராது. அந்த வீட்டில் நிம்மதி, அமைதி நிறைந்திருக்கும். சண்டை, சச்சரவு வராது. வாழ்க்கையில் மென்மேலும் உயர்ந்துக் கொண்டே போவீர்கள்.