
இன்றும் முழுமையாக கண்டறியப்படாத ஒரு மர்மப் பிரதேசம் எது என்றால், அது மனித மூளை தான். ஆறடி மனிதனின் உச்சி முதல் பாதம் வரை இயங்கும் எல்லா உறுப்புகளுக்கும் கட்டளையும், ஆற்றலையும் தருவது மனித மூளை தான். அதனைப் பற்றிய அதிசயத்தக்க தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் அவ்வப்போது வெளியிட்டு நம்மை வியக்க வைக்கிறார்கள். சமீபத்திய கால கட்டத்தில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள மூளை பற்றிய சில முக்கியமான தகவல்கள்:
இரவு தூங்கும் போது மூளை பெரிய அளவில் வேலை செய்வதில்லை என்று தான் பலரும் நினைக்கின்றனர். ஆனால், இரவில் நாம் தூங்கும் போது தான் மூளை மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்கிறது. மூளை இரவில் தூங்குவதே இல்லை.
மூளையை பற்றிய மிகவும் விந்தையான உண்மை, நீங்கள் நம்புவது கூட கடினம். ஆனால், உண்மை அது தான் மனித மூளையால் வருங்காலத்தை கணிக்க முடியும் என்ற உண்மை. நாம் தூங்கும் போது, நம் கனவில் நடக்கும் சம்பவங்கள் நிஜ வாழ்க்கையில் கூட நடக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். நமது மூளையில் இருக்கும் "டோபமைன்" எனும் அமைப்பு. இது வரை நடக்காத சம்பவங்களைப் பற்றி உங்களுக்கு அறிகுறிகளை அளிக்கும். அதன் மூலம் வருங்காலத்தை நாம் கணிக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ஒரு விஷயத்தில் முடிவுகள், தீர்மானங்கள் எடுக்கும் போது, பெண்கள் பெரும்பாலும் தடுமாறுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஆண்கள் விஷயத்தில் அப்படி இல்லை என்கிறார்கள். ஆண்கள் பயன்படுத்துவதை விட பெண்கள் மூளையை சற்று குறைவாகவே பயன்படுத்துகிறார்கள். சொல்லப்போனால் ஆண்களைவிட பெண்கள் 10 சதவீதம் குறைவாகவே பயன்படுத்துகிறார்கள்.
மூளையின் அளவு ஒரே மாதிரியான அளவில் இருப்பதில்லை. பெரிய அளவு மூளையை கொண்டவர்கள், தீர்வு காண்பதிலும், வெளிப்புற நிகழ்வுகளை புரிந்து கொள்வதற்குரிய சிறந்த திறன்களை கொண்டிருப்பார்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். டீனேஜ் பருவத்தில் உள்ளவர்களின் மூளை முழு வளர்ச்சியடைந்தவை அல்ல. அவர்களின் மூளை தொடர்ந்து வளரும் நிலையில் இருக்கிறது என்கிறார்கள். அதனால் தான் இந்த பருவத்தில் இருப்பவர்களை இரண்டான் கெட்ட வயது உடையவர்கள் என்கிறார்கள்.
நமது நினைவுகள் எல்லாம் நமது மூளையில் ரசாயன பதிவுகளாக சேமிக்கப்படுகின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் நினைப்பதை விட அதிகமானவற்றை கற்று நினைவில் வைத்துக் கொள்ள வசதியாகவே மூளை படைக்கப்பட்டுள்ளது.
மனிதனுக்கு உள்ள சிறப்பம்சங்களில் ஒன்று, அவனது நீளமான, ஆழமான ஞாபகத்திறன். ஆனால் ஓர் உண்மை தெரியுமா? மனித மூளையின் செல்களில் 96 சதவீதம், ஞாபக சக்தி தொடர்பான பணிகளில் ஈடுபடுவதில்லை. மனிதன் தனக்குள்ள மொத்த நினைவாற்றல் திறனில் 4 சதவீதத்தை தான் பயன்படுத்துகிறான். உலக மக்களில் ஒரு சதவீதத்தினரே தங்களின் ஞாபகசக்தியை திறமையுடன் பயன்படுத்துகின்றனர் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு தான் பசி அதிகம் இருக்கும் என்று, இது வரை நிலவிய கருத்துக்கு மாறாக மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் நபர்களுக்கும் பசி உணர்வு அதிகரிக்கும் என்கிறார்கள் அமெரிக்க லாவல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
மூளைக்கு வேலை கொடுக்க கொடுக்க, அது புத்துணர்ச்சி பெற்றுக் கொண்டே இருக்கிறது என்கிறார்கள் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். குறிப்பிட்ட வயதுக்கு மேல் மூளைக்கு வளர்ச்சி சாத்தியமில்லை என்று இது வரை நம்பப்பட்டு வந்தது தவறு என்று நிரூபிக்கின்றன இந்த ஆய்வுகள். 80 வயதிற்கு மேல் புதிய மொழியைக் கற்றுக் கொள்ளும் போதோ, புதிய இசைக் கருவியை இசைக்கக் கற்றுக் கொள்ளும் போதோ, மூளையின் செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன என்கிறார்கள்.