இந்த விஷயங்களை செய்தால் அடுத்த தீபாவளிக்குள் உங்கள் வீட்டில் செல்வம் கொழிக்கும்!

Diwali Parikaram
Diwali festival
Published on

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி ஜாதி, மதம், மொழி வேறுபாடின்றி கொண்டாடும் ஒரு பண்டிகை என்றால் அது தீபாவளிதான். அன்று நாம் சந்தோஷமாக இருப்பதோடு, நம்மை சுற்றியுள்ள எளிய மக்களையும் சந்தோஷப்படுத்திப் பார்த்தால் அந்த மகிழ்ச்சியே தனிதான்.

* தீபாவளியன்று சில வழக்கங்கள், பழக்கங்கள் நம்மிடையே உண்டு. அதை கடைபிடிக்க நல்லவை நடக்கும். வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். தீபாவளியன்று அதிகாலை எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது, குளிக்கின்ற நீரில் சில துளிகள் தூய்மையான பசும்பால் விட்டு நன்கு கலந்து பிறகு குளிப்பதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறையும். நம்மை பீடித்திருக்கும் தரித்திரம் நீங்கும்.

இதையும் படியுங்கள்:
தீபாவளி பண்டிகையை வித்தியாசமாகக் கொண்டாடும் குஜ்ஜார் மக்களின் விநோதம்!
Diwali Parikaram

* தீபாவளியன்று வீட்டில் பூஜை செய்யும் சமயம் மகாலட்சுமி படத்திற்கு முன்பு 11 கோமதி சக்கரம், 11மஞ்சள் நிற சோழிகள், குங்குமப்பூ, மஞ்சள் கிழங்கு, சந்தனக் கட்டை ஆகியவற்றோடு வெள்ளி நாணயங்கள் வைத்து பூஜை செய்ய, நம் வீட்டில் எல்லா காலங்களிலும் மிகுந்த பொருள் வரவு இருந்துகொண்டே இருக்கும்.

* தீபாவளியன்று பொருளாதார வசதி குறைந்த குடும்பங்களை சார்ந்த பெண் குழந்தைகளுக்கு புத்தாடைகள், இனிப்புகள் போன்றவற்றை வாங்கிக் கொடுத்து அவர்களை மகிழ்விக்க, லட்சுமி கடாட்சம் நிறைந்து இல்லம் சிறக்கும்.

* தீபாவளி திருநாளில் பசுக்கள் மற்றும் குரங்குகள் சாப்பிட பழங்களைக் கொடுப்பது, நம்முடைய எப்பேர்ப்பட்ட பாவங்களையும் போக்கும். இதனால் கர்மவினை நீங்கி, வீட்டில் மகிழ்ச்சி மேலோங்கும்.

இதையும் படியுங்கள்:
கண்ணன் இசைத்த புல்லாங்குழல்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
Diwali Parikaram

* கோயில்களுக்குச் சென்று இறைவனை வணங்கி விட்டு அங்கிருக்கும் திருக்குளத்தில் உள்ள மீன்களுக்கு பொரி மற்றும் கோதுமை உருண்டைகளை உணவாகப் போடுவது நல்லது.

* தீபாவளியன்று சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் லட்டுகள் செய்து குபேரன் மற்றும் மகாலட்சுமி தேவியை வழிபடுபவர்களுக்கு மகாலஷ்மி மற்றும் குபேர சம்பத்து கிடைக்கப்பெற்று, எடுக்கும் அத்தனை முயற்சிகளிலும் மிகுந்த தன லாபத்தைப் பெறும் யோகம் உண்டாகும்.

* வீட்டில் முடிந்தளவு நிறைய தீபங்கள் ஏற்றி வைத்து ஒளியேற்றிட மகிழ்ச்சியை கொடுப்பதோடு, லட்சுமி கடாட்சம் நிறைந்து முன்னோர்கள் ஆசியும் கிட்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com