

இவருக்கு குழந்தைப் பருவத்திலேயே தியானம் செய்வது மிகவும் பிடிக்கும். மேலும், எதுவாக இருந்தாலும் யோசித்து, சோதனை செய்தே உண்மையை ஏற்பார். சிறு வயதில் ஒரு மரத்தில் நண்பர்களுடன் தொங்கிக்கொண்டு இருக்கும்போது…
அங்கே வந்த பெரியவர், சிறுவர்கள் விழுந்து விடுவார்களோ என எண்ணி ஒரு பொய்யைச் சொன்னார்.
அதாவது, அந்த மரத்தில் பேய் ஒன்று இருப்பதாகவும் அது அவர்களைத் தின்றுவிடும் என்றும் சொன்னார். மற்ற நண்பர்கள் மரத்தில் இருந்து இறங்கிவிட்டார்கள். ஆனால், இவர் இறங்க மறுத்து விட்டார்.
“பேய்,.. இருப்பது உண்மையானால் அது என்றோ என்னைத் தின்று இருக்க வேண்டும்" என்று சொன்னார். அந்த பகுத்தறிவு சிறுவன்தான் நரேந்திரன். ஆம்... விவேகானந்தர்.
சிறு வயதிலிருந்தே ஏழைகளுக்கு உதவும் மனப்பான்மை இருந்தது. தன் வீட்டின் மாடியில் இருந்து கீழே போகும் பிச்சைக்காரர்கள், சன்யாசிகளுக்கு எதையாவது போடுவார். தாய் திட்டியும் அவர் அவரது கொள்கையை விடவில்லை.
அவர் கொல்கத்தாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணன் என்று ஒரு சாமியார் இருப்பதை அறிந்து வைத்து இருந்தார். அவரைச் சந்திக்க வேண்டும் என்று ஆசை. ஒரு நாள் நண்பருடன் ஸ்ரீ ராமகிருஷ்ணனை சந்திக்கச் சென்றார். அவரை பார்த்து பைத்தியம் என்றே நினைத்தார். ஆனால், எதோ ஒரு சக்தி இருக்கலாம் என்று எண்ணினார்.
ஒரு நாள் போயிருந்தபோது தனது காலால் ஸ்ரீ ராமகிருஷ்ணர் நரேனைத் தொட்டார். பெரிய ஷாக் அடித்த மாதிரி இருந்தது. நரேன் பயந்துவிட்டார். உடல் முழுக்க மெய் சிலிர்த்தது.
அதற்கு பிறகுதான் ஸ்ரீ ராமகிருஷ்ணரை குருவாக ஏற்றுக்கொண்டார். நரேனை அழைத்து, "இவ்வளவு காலத்திற்கு பிறகு வருகிறாய். நீ செய்ய வேண்டிய காரியம் நிறையவே இருக்கு.." என்றார். அவருக்கு விவேகானந்தர் என்ற பெயர் வந்தது.
அப்போது அமெரிக்காவில் உலக மதங்கள் மாநாடு நடைப்பெற இருந்தது. ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஆசி கிடைத்தது. தென் தமிழ்நாட்டில் ஒரு இளவரசர் பணம் கொடுத்து உதவினார். நாம் போய் என்ன செய்ய முடியும் என்று நினைத்தார். ஆனால், ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவருக்கு இந்து வாழ்க்கை முறை, வேதாந்தம் என எல்லாவற்றையும் பேசச் சொன்னார்.
கடைசியாக பேச வந்தார். அவர் சரஸ்வதியை தியானித்து ஆரம்பித்தார்.
“அன்புள்ள சகோதர சகோதரிகளே..!“ என்று ஆரம்பித்தார். அவர் தொடங்கியபோது மக்கள் 3 நிமிடங்கள் கரவொலி எழுப்பினர். பின்னர் நடந்தது எல்லாம் சரித்திரம் ஆனது.
ஒரு முறை காசியில் ஒரு குரங்கு கூட்டம் துரத்தியது. இவர் பயந்து ஓடினார். அப்போது ஒரு சன்னியாசி “ஓடாதே….திரும்பு... திரும்பி, நீ குரங்கு கூட்டத்தைத் துரத்து” என்று சத்தமிட்டுக் கூறினார். விவேகானந்தர் நின்று திரும்பினார். குரங்குகள் அச்சம் அடைந்தன. குரங்குகள் பின் திரும்பி ஓடின. அது அவருக்கு நல்ல படிப்பினையாக இருந்தது.
மக்களுக்குச் சோறு போடாத மதம் எனக்குத் தேவை இல்லை என்று ஆணித்தரமாக சொன்னார். ஒரு சமயம் சில சன்னியாசிகள் பேசிக்கொண்டு இருந்தனர். விவேகானந்தர் மக்கள் பிரச்சனை பற்றி பேச, காலம் ஓடியது. அந்தச் சன்னியாசிகள், "நாம் மக்கள் பிரச்சனை பற்றி பேச நேரம் அனாவசியமாக போய்விட்டது" என்று சலித்துக்கொண்டார்கள். விவேகானந்தர் கோபம் கொண்டார். "மக்கள் சேவை மகேசன் சேவை. மக்கள் பிரச்சனையைப் பற்றி பேசுவதைவிட எந்த தத்துவ, சித்தாந்தம் பேசுவதும் வீண்" என்று சாட்டையடி கொடுத்தார். அவர் சன்னியாசியாக இருந்தாலும் இந்த ஏழை, பணக்காரன் சமுதாயத்தை வெறுத்தார். சமதர்ம சமுதாயம் வர வேண்டும் என்று சொன்னார்.
அவரது சாதனை:
இந்து வாழ்க்கை முறையை எங்கும் பரப்பினார். வேதாந்த அர்த்தங்களைத் தெளிவாகச் சொல்லி மக்கள் மனதில் இடம் பெற்றார்.
பேலூரில் ஸ்ரீ ராம கிருஷ்ணர் மடம் ஆரம்பித்தார். ஒரு பத்திரிகையும் ஆரம்பித்தார்.
விவேகானந்தர்போல நாட்டை 100% விரும்பும் ஒரு சன்னியாசி பிறக்கவில்லை.
வாழ்க விவேகானந்தர்…! வளர்க அவரது சேவை… !!
விழிப்போம்… … !
எழுவோம்… … … !!
புதிய பாரதம் காண்போம்…!!