இறைவனை அடைய எளிய மார்க்கம்!

Iraivanai Adaiya Eliya Maarkkam
Iraivanai Adaiya Eliya Maarkkamhttps://www.vallamai.com

ம் வாழ்வில் எப்படியாவது இறைவனை அடைய வேண்டும் என்ற எண்ணம் இளமையில் இல்லாவிட்டாலும் நமக்கு எப்போதாவது ஒரு சூழ்நிலையின் தோன்றும். அப்படி இறைவனைத் தேடி அடைய நினைத்தவனின் கதையை இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஆசிரமத்தில் ஒரு குரு தன் சீடர்களுக்கு ஞானத்தைப் போதித்துக் கொண்டிருந்தார். அந்த குருவைப் பற்றிக் கேள்விப்பட்ட ஒருவன் ஞானம் பெறுவதற்காக அவரிடம் சீடனாகச் சேர்ந்து சில காலம் ஞானக் கல்வி பெற்றுக் கொண்டிருந்தான். அப்போது ஒரு நாள் குரு புதிதாகச் சேர்ந்த சீடனிடம், “ஆன்மிகத்தின் நோக்கமென்ன?“ என்று கேட்டார்.

அதற்கு அவன், “இறைவனை அறிவதும், அடைவதும்தான்” என்றான் சீடன். என்னுடன் சேர்ந்து இத்தனை காலம் பயணிக்கிறாயே, தொடர்ந்து இத்தனை நாள் ஆன்மிக சாதகம் செய்கிறாயே. இறைவனை அடைந்து விட்டாயா?” என்று கேட்கிறார்.

அதற்குச் சீடன், “இல்லை முயன்று கொண்டிருக்கிறேன்” என்றான்.

“உனக்கு இறைவனை அறிந்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?” என்று கேட்டார் குரு.

உடனே சீடன், “நம்பிக்கை உள்ளது. ஆனால், பலரும் பலவிதமாகச் சொல்கிறார்கள். அதனால் கொஞ்சம் குழப்பமாக உள்ளது” என்றான்.

“சரி, நீ இறைவனை அடைய எளிமையான மாற்று வழி கற்றுத் தருகிறேன். இப்போது நீ பயணித்துக் கொண்டிருக்கும் இந்த வழியில் இறைவனை அடைய முடியாது. நான் கூறும் எளிய வழியைப் பின்பற்றினால் இறைவன் தானே உன்னை வந்து அடைவான்” என்றார் குரு.

சீடனும் குழப்பத்துடன், “அது எப்படி?” என்று கேட்கிறான்.

“பல்லாயிரக்கணக்கான வருடத்திற்கு முன்பு ஒரு ராஜா இருந்தான். உனக்கே தெரியும், அரசன் என்றால் அவரை நெருங்குவதோ, பேசுவதோ, அறிந்து கொள்வதோ சுலபமில்லை என்று. ஆனால், அந்த ஊரில் வாழ்ந்த ஒருவனுக்கு அரசரை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்று ஒரு ஆசை இருந்தது. அதனால் ராஜாவை சந்திக்க வேண்டும் என்று நினைத்து ஊரில் உள்ள அனைவருக்கும் நற்காரியங்களிலும், மக்கள் தேவைகளிலும், அரசியல் பயன்பாடுகளிலும் பயனுள்ள வகையில் இருக்கிறான். இதை மக்கள் வழியாக அறிந்த ராஜா, ஒரு நாள் அவனைச் சந்திக்க வருகிறார். இதேபோல், மற்றவர்களின் தேவைகளை உணர்ந்து செயலாற்றினால் ராஜாவைப் போல் இறைவனும் ஒரு நாள் உன்னைத் தேடி வருவார். அவரை நீ அறியலாம். இதுதான் இறைவனை அடைய எளிய வழி” என்றார் குரு.

இதையும் படியுங்கள்:
ராஜகிரகம் சூரியனின் சிறப்புகள் என்ன தெரியுமா?
Iraivanai Adaiya Eliya Maarkkam

சீடன் தெளிவடைந்து குருவுக்கு நன்றி கூறி தான் வந்ததன் நோக்கம் நிறைவடைந்தது என்று விடைபெறுகிறான்.

இந்த சீடனைப் போல் இறைவனை அடைய கோயில்களும் குளங்களும் மட்டும் தேடிச் செல்லாமல், குரு கூறியது போல் இருக்கின்ற இடத்திலேயே அனைவருக்கும் பயனுள்ள வகையில் வாழ்ந்தால் இறைவனைத் தேடி நாம் போகத் தேவையில்லை. இறைவனே நம்மைத் தேடி வருவார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com