மதுரை சித்திரைத் திருவிழா: அழகர் ஆற்றில் இறங்குவதற்குப் பின்னால் இருக்கும் 'சாப விமோசன' ரகசியம்!

madurai-chithirai-festival
madurai-chithirai-festival
Updated on

துரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்  ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம்  சித்ரா பௌர்ணமியில் நடைபெறுகிறது.

சித்திரை திருவிழாவையொட்டி அழகர் கோயிலில் இருந்து மதுரை நோக்கி புறப்படும் கள்ளழகர், மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை மட்டும் காண அங்கு வருவதில்லை. மண்டூகமுனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காகவும் வருகிறார் என்கிறது புராண வரலாறு.

மண்டூக வரலாறு

அழகர்மலை உச்சியில் வற்றாத நூபுர கங்கை நதி ஓடுகிறது. இதில் ஒருநாள் சுதபஸ் என்ற முனிவர் தண்ணீரில் மூழ்கி நீராடி மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த துர்வாச முனிவர் தனது சீடர்களுடன் கோபுர கல்விக்கு வந்தார். அவரை சுதபஸ் முனிவர் கவனிக்கவில்லை நீண்ட நேரம் கழித்து பூஜைகள் செய்த பின்னரே சுதபஸ் முனிவரை வரவேற்றார்.

இதனால் துர்வாச முனிவர் கோபம் கொண்டு, மரியாதை தெரியாத "மண்டூகமான நீ மண்டூகமாகவே போ" என சாபம் விட்டாார்

மண்டூகம் என்றால் தவளை என்று பொருள். சாபம் பெற்ற சுதாபஸ் முனிவர் கண்ணீர்விட்டு, தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு கை கூப்பி துர்வாசரே,   பெருமாளின் நினைப்பில் இருந்ததால் தங்கள் வருகையை கவனிக்கவில்லை. எனவே எனக்கு தாங்கள் சாப விமோசனம் தந்தருள வேண்டும் என வேண்டினார்.

அதற்கு துர்வாச முனிவர், "வேதவதி" என்ற வைகை ஆற்றில் தவம் செய், சித்திரை மாதம் பவுர்ணமிக்கு,. அழகர் கோவிலில் இருந்து பெருமாள் வருவார். அப்போது உனக்கு  பாப விமோசனம் கிடைக்கும் என்று கூறினார். சுதாபஸ் அதன்படியே செய்ய அவருக்கு பாப விமர்சனம் கிடைத்தது. இதுவே நூபுர கங்கையில் நடந்த ஆன்மீக வரலாறு.

இதையும் படியுங்கள்:
யோகம் தரும் ஏலக்காய் மற்றும் கிராம்பு மாலை!
madurai-chithirai-festival

ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் கண்டாங்கி சேலை உடுத்தி தங்க பல்லக்கில் கிளம்பி வைகை ஆற்றில் இறங்க  மதுரைக்கு வருவார்.சித்ரா பௌர்ணமி தினத்தில் தல்லாகுளத்தில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்துகொண்டு தங்கக்குதிரை வாகனத்தில் ஏறி வந்து வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவார்.

கள்ளழகர் அழகர் மலையில் இருந்து இறங்கி வந்து அலங்காநல்லூர் வழியாக வைகை  ஆற்றில் இறங்கி தேனூர் சென்று வைகை ஆற்றில் தவமிருக்கும் மண்டூகமுனிவருக்கு சாப விமோசனம் கொடுப்பார்.

இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வைகை ஆற்றில் கள்ளழகர் கண்டாங்கி பட்டு உடுத்தி தங்ககருட  வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி இன்றும் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு ஒரு முக்கிய புராண பின்னணியாக நடந்து வருகிறது.

இதையும் படியுங்கள்:
ஹம்பியில் உள்ள ஊசி துவார கேமரா அமைப்புள்ள விருபாக்ஷர் ஆலய அதிசயம்!
madurai-chithirai-festival

இந்த சம்பவத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வைகை ஆற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு  சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதைப் பார்க்க லட்சக்கணக்கான பத்தர்கள் பங்கேற்று கள்ளழகரை தரிசனம் செய்து அருள் பெறுவர்.

அதன் பின் மாலை தசாவதாரம்  நிகழ்வு மண்டபத்தில் நடைபெறும். இந்த நிகழ்வை மதுரை சென்று  சித்ரா பௌர்ணமி நாளில் தரிசனம் செய்யலாம்.

Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News

Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook

Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram

Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter

Add KalkiOnline as a preferred source on Google... Click Here

logo
Kalki Online
kalkionline.com