

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் தாமிரபரணி கரையில் அமைந்த 850 ஆண்டு பழமையான ஆதிவராகப் பெருமாள் கோவில், குபேரன் பிரதிஷ்டை செய்த திவ்யஸ்தலமாக விளங்குகிறது. பத்மபீடத்தில் அமர்ந்த பெருமாள் மடியில் பூமாதேவி அருள்பாலிப்பது, தாமிரபரணி நீரால் மட்டுமே திருமஞ்சனம் செய்வது, ஸ்ரீதேவி–பூதேவிக்கு தனித்தனி சன்னதிகள் இருப்பது போன்றவை இக்கோவிலின் சிறப்புகள் ஆகும். ஆதிவராகப் பெருமாள் பூமாதேவியை தன் மடியில் அமர்த்திய நிலையில் அருள்பாலித்து வருகிறார்
மூலவர் பெருமாள் பத்ம பீடத்தில் அமர்ந்து தனது இடது மடியில் பூமாதேவியை தாங்கியபடி காட்சி தருகிறார். இக்கோவிலில் உள்ள மூலவருக்கு அருகில் உள்ள தாமிரபரணி நீரால் மட்டுமே திருமஞ்சனம் செய்யப் படுகிறது அதாவது அபிஷேகம் செய்யப்படுகிறது கருவறைக்கு மேல் உள்ள விமானத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள் சயனகோலத்துடன் காட்சியளிக்கிறார்
மற்ற பெருமாள் கோவிலை போல் அல்லாமல் தாயார் ஆண்டாள் தனித்தனி சன்னதிகள் உள்ளது. திருநெல்வேலியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும் அம்பாசமுத்திரத்திலிருந்து 3 கிலோமட்டர் தொலைவில் கல்லிடைக்குறிச்சி அமைந்துள்ளது.
திருமணம் நடைபெறவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் அதிக அளவில் பக்தர்கள் இங்கு வருகை தருகிறார்கள்
புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர் முத்துசாமி தீட்சிதர் ஆதிவராக பெருமாள் மீது பல கீர்த்தனைகளை இயற்றி உள்ளார்.
வைகாசி பிரமோற்சவம் ஆணி பிரம்மோற்சவம் வைகுண்ட ஏகாதசிஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆதி காலத்தில் குபேரன் ஆதிவராக பெருமாளை இந்த இடத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாறு. அவ்வாறு பிரதிஷ்டை செய்யும்போது யாக பாத்திரங்கள் கல்லாக மாறியது. அதனால் இந்த ஊர் சிலா சாலி குறிச்சி என அழைக்கப்பட்டது.
யாகப்பாத்திரங்கள் அனைத்தும் கல்லாக மாறியதால் கல்லிடைக்குறிச்சி எனவும் அழைக்கப்பட்டதாக கூறுகிறார்கள்.
மற்றொரு காரணம் கல்லிடைக்குறிச்சிக்கு அருகில் உள்ள சிங்கம்பட்டி பாறை மற்றும் அம்பாசமுத்திரம் பாறை இரண்டுக்கும் இடையில் கல்லிடைக்குறிச்சி அமைந்துள்ளதால் கல் இடை குறிச்சி என அழைக்கப்பட்டு, பின்னர் கல்லிடைக்குறிச்சியாக மாறியதாக அறிஞர்கள் கூறுகிறார்கள்.
பெருமாள் அமர்ந்த கோலத்தில் இருப்பது இந்த கோவிலில் உள்ள சிறப்பு அம்சமாகும். அவரது மடியில் அமர்ந்திருக்கும் பூமாதேவி பெருமாள் திருமுகத்தை பார்த்தபடி அமர்ந்து இருக்கிறார். உற்சவர் லட்சுமிபதி என்ற திருநாமத்துடன் தாயார் பூமாதேவி உடன் காட்சி தருகிறார். பெரும்பாலும் எல்லா பெருமாள் கோவில்களிலும் பூதேவி ஸ்ரீதேவி இருவரும் சேர்ந்து காணப்படுவார்கள். ஆனால் இங்கு ஸ்ரீதேவி பூதேவிக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.
தனித்தனி சன்னதிகள் இருபுறமும் இருப்பது சிறப்பாக கருதப்படுகிறது.
பெருமாள் எப்போதும் தாயாருடன் சேர்ந்து காணப் படுவதால் அவருக்கு நித்திய கல்யாண பெருமாள் என்ற பெயரும் உண்டு. இங்குள்ள பெருமாள் திருமண வரம் அளிப்பதால் இந்த ஊருக்கு முற்காலத்தில் கல்யாணபுரி என்ற பெயரும் இருந்து வந்தது.
நிலப்பிரச்னை கடன் பிரச்னை தீரவும் திருமணம் நடைபெறவும் இந்த கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகை தருகிறார்கள். அவ்வாறு பக்தர்கள் கோரிக்கை நிறைவேறினால் பெருமாளை கருட வாகனத்தில் எழுந்தருள செய்வதாக வேண்டிக்கொள்கின்றார்கள்.
அதனால் இங்கு அடிக்கடி கருட சேவை நடைபெறும். கோவிலில் உள்ள மேல்புற சுவரில் கருடாழ்வார் வீற்றிருக்கிறார். ஆடி மாதம் சுவாதி நட்சத்திரம் அன்று உள்ள பெருமாளுக்கு விசேஷத் திருமஞ்சனம் நடைபெறும். பெருமாளின் தசாவதார வடிவங்கள் சன்னதி பின்புறம் சிலா ரூபமாக உள்ளது.
சித்ரா பௌர்ணமி 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும் ஒவ்வொரு நாளும் சப்பரம் சிம்மவாகனம், அனுமன் வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், யானை வாகனம், பூம் பல்லாக்கு, குதிரை வாகனம், இவற்றில் வீதி உலா நடைபெறும். பத்தாம் நாள் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறும்.
இந்தத் தலத்தின் வரலாற்றையும் வழிபாட்டு முறைகளையும் அறிந்துகொள்வதன் மூலம், உங்கள் வாழ்வில் தொடரும் தீராத கடன் பிரச்சினைகள், சொத்து மற்றும் நிலக் கோளாறுகளுக்கு உடனடி ஆன்மீகத் தீர்வுகளைப் பெற்று மனநிம்மதியையும் செல்வச் செழிப்பையும் அடைவீர்கள்.