அயோத்தி ஸ்ரீராமர் கோயிலுக்கு விஜயம் செய்த காஞ்சி காமகோடி பீடாதிபதி!

அயோத்தி ஸ்ரீராமர் கோயிலுக்கு விஜயம் செய்த காஞ்சி காமகோடி பீடாதிபதி!
Published on

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகள் கடந்த 1.10.2023 அன்று முதல் அயோத்யா நகரில் முகாமிட்டு இருந்தார்கள். ஏகாதசி புண்ணிய தினமான நேற்று (25.10.2023) காலை தமது நித்திய சந்திரமௌலீஸ்வர பூஜை போன்றவற்றை முடித்துக்கொண்டு, மாலை 4.30 மணி அளவில் ஸ்ரீராம ஜன்ம பூமி க்ஷேத்ரத்தில் அருளும் ஸ்ரீராமர் கோயிலுக்கு விஜயம் செய்தார்கள். அங்கு குழந்தை வடிவில் அருள்பாலிக்கும் ராம்லல்லாவுக்கு அஷ்டோத்ர நாமாவளி அர்ச்சனை, தீப, சாமர உபசாரங்கள் போன்றவை செய்து வழிபட்டார்கள்.

அதன் பிறகு, மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவரும் ராம் மந்திர் கட்டட திருப்பணிகளை பார்வையிட்டு அங்கிருந்த உயர் அதிகாரிகள், பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் ஆசி வழங்கிவிட்டு முகாம் திரும்பினார்கள்.

முன்னதாக, பூஜ்யஶ்ரீ ஜகத்குரு சங்கராச்சார்ய ஸ்வாமிகளை ஸ்ரீ ராம ஜன்ம பூமி தீர்த்த க்ஷேத்ர டிரஸ்டிகளும் நிர்வாகிகளும் பூரண மரியாதை கொடுத்து வரவேற்று உபசரித்தனர்.

ஸ்ரீராம ஜன்ம பூமியில் ஶ்ரீராமருக்கு ஆலயம் நிர்மாணிப்பதில் முழு மனதாக ஈடுபட்ட பூஜ்யஶ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஜன்ம தினமான கடந்த 20.8.2020 அன்று, ராம் மந்திருக்கு பாரதப் பிரதமர் பூமி பூஜை  செய்திட சங்கு, வெள்ளி செங்கல், தங்கம், வெள்ளி காசுகளும், கோயில் விவரங்கள் அடங்கிய தங்க தாமிரப் பட்டயங்கள் முதலியனவற்றை ஶ்ரீ ஸ்வாமிகள் காஞ்சியிலிருந்து அனுப்பி வைத்ததை உடன் இருந்தவர்கள் நினைவு கூர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com