அனைத்தும் அறிந்தவர்... இங்கிதம் காத்த இறைப்பெரியவர்!

காஞ்சி மகாபெரியவர், இன்றைக்கும் பல குடும்பங்களின் கண்கண்ட தெய்வம்! வாழ்ந்த போதும், வாழ்க்கைக்குப் பிறகும் பல பேரின் வழிகாட்டி.
காஞ்சி பரமாச்சாரியார்
காஞ்சி பரமாச்சாரியார்
Published on

காஞ்சி மகாபெரியவர், இன்றைக்கும் பல குடும்பங்களின் கண்கண்ட தெய்வம். வாழ்ந்த போதும், வாழ்க்கைக்குப் பிறகும் பல பேரின் வழிகாட்டி. அவர், தன் வாழ்வையே பாடமாக்கி, வாழ்ந்து காட்டியவர்!

அது, 'பிராமணர்கள் கடல்கடந்து செல்வது ஆச்சாரமாகாது!' என்று நம்பிய காலம்!அவ்வாறு சென்று வந்தவர்களுக்கு, மகாபெரியவர் தன் கையால் தீர்த்தம் வழங்குவதில்லை என்ற நிலை பாட்டினைக் கொண்டிருந்தார்! ஒரு நாள் பெரியவர் தீர்த்தம் வழங்கிக் கொண்டு இருந்த நேரத்தில், திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கணவர் திரு சதாசிவம் வந்து வரிசையில் நின்று விட்டார். அவரும், அவர் மனைவியும், கச்சேரிக்காக வெளிநாடு சென்று விட்டு அப்பொழுதுதான் திரும்பியிருந்தனர்! அவருக்குப் பெரியவரின் சாத்திர முறைகள் தெரியவில்லை! பெரியவரின் கையால் தீர்த்தம் வாங்கும் ஆனந்தத்தில் அவர் சந்தோஷமாக நிற்கிறார்!

சற்றே பின்னால் வந்து வரிசையில் சேர்கிறார் திரு ரா.கணபதி. இவர் சிறந்த எழுத்தாளர். பெரியவர் சொல்லக்கேட்டு 'தெய்வத்தின் குரல்' என்ற புத்தகத்தை எழுதியவர் இவர்தான். ஆச்சார, அனுஷ்டானங்களை நன்கு அறிந்தவர். கணபதி, சதாசிவத்தை வரிசையில் பார்த்ததும் அதிர்ச்சி அடைகிறார். கணபதிக்கோ, சதாசிவத்திடம் சொல்லவும் முடியவில்லை... அதே சமயம் பெரியவருக்கு அவர் வெளிநாடு சென்று வந்தது தெரியுமோ...தெரியாதோ? என்ற சந்தேகம் வேறு!

சதாசிவமும் ஏமாற்றப்படக் கூடாது; அதே சமயம் பெரியவரின் அனுஷ்டானத்திற்கும் பங்கம் வந்து விடக்கூடாதே என்று அவர் தவிக்கிறார். மனதுக்குள் ஏதேதோ நினைத்துப் பார்த்தாலும் அவருக்கு ஒரு வழியும் புலப்படவில்லை. குழப்பம் ஒன்றே மிஞ்சி அவருக்கு சிறிதான மயக்கமே வந்து விடும் போலாகி விட்டது!

சதாசிவமோ பெரியவரை நெருங்கி விட்டார்! பெரியவர் என்ன செய்யப் போகிறாரோ என்று கணபதி மயங்கிய நேரம்... பெரியவர் அனைத்தும் அறிந்தவராயிற்றே! எந்தப் பதற்றமும் இல்லாமல் தீர்த்தப் பாத்திரத்தைக் கீழே வைத்துவிட்டு, பக்கத்தில் கிடந்த தேங்காயை எடுத்துத் தரையில் அடித்து உடைத்து, அதன் நீரை சதாசிவத்தின் கையில் ஊற்றிக்கொண்டே, 'இன்று சதாசிவத்திற்கு சிறப்புத் தீர்த்தம்' என்று கூறிக் கொண்டே, கணபதியைப் பார்த்து அர்த்தமுடன் புன்முறுவல் பூக்க, கணபதி அப்படியே நெகிழ்ந்து போகிறார்!

என்ன இங்கிதம்! சதாசிவமும் மகிழ்ந்தார்... அனுஷ்டானமும் காப்பாற்றப் பட்டது! கணபதியும், கலவரம் நீங்கப் பெற்று அமைதி ஆனார்!

உலகுக்கும் ஓர் உயர்ந்த பாடம் கிடைத்தது!

இதையும் படியுங்கள்:
‘அம்பாள் வேறு மகாபெரியவர் வேறு கிடையாதே!’
காஞ்சி பரமாச்சாரியார்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com