
கன்னியா பூஜை என்பது இளம் பெண்களை துர்க்கை தேவியின் வடிவங்களாக மதிக்கப்படும் விழாவாகும். இந்த சிறப்புக்குரிய நாளில் சிறுமிகளுக்கு பரிசுகள் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்குவது வழக்கமாக உள்ளது. ஆனால் பரிசு பொருட்களில் சில பொருட்கள் வழங்குவது துரதிருஷ்டமாக கருதப்படுகிறது. அந்த வகையில் கன்னியா பூஜையின் போது இளம் பெண்களுக்கு கொடுக்கக் கூடாத 5 பரிசுப் பொருட்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. தோல் பொருட்கள் :
தோலை மூலப்பொருளாக கொண்டு செய்த பொருட்களான லெதர் பெல்ட், பை போன்ற பொருட்களை கன்னியா பூஜையின் போது பெண்களுக்கு பரிசாகக் கொடுக்கக் கூடாது. அஹிம்சை, தூய்மை மற்றும் சாத்வீக வாழ்க்கையை விழாக்கள் வலியுறுத்துகின்றன. ஆகவே தோல் பொருட்களை பரிசாக கொடுப்பது முரணாக கருதப்படுவதால் இவற்றை தவிர்க்க வேண்டும்.
2. கருப்பு நிற பொருட்கள் :
கருப்பு நிறம் எதிர்மறையுடன் தொடர்புடையதாகவும் அசுபமாகவும் சடங்குகளின் போது கருதப்படுகிறது. ஆகவே கன்னியா பூஜையின் போது கருப்பு நிற ஆடைகள், அணிகலன்கள் மற்றும் பொம்மைகளை பரிசளிப்பதை தவிர்த்து அதற்கு பதிலாக சிவப்பு நிற பொருட்களில் பரிசுகளைக் கொடுக்கலாம்.
3. கூர்மையான பொருட்கள் :
கூர்மையான பொருட்களான கத்தரிக்கோல், ஊசி, கத்தி போன்ற பொருட்களை கன்னியா பூஜையின்போது பரிசளிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை உறவுகளில் விரிசல் மற்றும் எதிர்மறையை ஏற்படுத்தும் என்று நம்பப்படுவதால் கூர்மையான பொருட்களை தவிர்ப்பது நல்லது.
4. பழைய அல்லது பயன்படுத்திய பொருட்கள் :
கன்னியா பூஜை மரியாதை மற்றும் பக்திக்கானதாக இருப்பதால், பூஜையின் போது பயன்படுத்திய அல்லது பழைய பொருட்கள் பரிசளிப்பது மரியாதை மற்றும் அக்கறையின்மையை காட்டுவதால், அவற்றைத் தவிர்த்து புதிய மற்றும் சுத்தமான பொருட்களை நற்சிந்தனையுடன் பரிசளிக்க வேண்டும்.
5.எதிர்மறை சின்னங்கள் :
திகில் மற்றும் துக்கத்தை சித்தரிக்கும் கார்ட்டூன்கள் அடங்கிய புத்தகங்கள், இருண்ட வன்முறை அல்லது மோசமான கருப்பொருளைக் கொண்ட பரிசு பொருளாக இருப்பதால் கன்னியா பூஜையின் போது அவற்றை தவிர்த்து அதற்கு பதிலாக மகிழ்ச்சி, ஆன்மீகம் கலாச்சார வடிவமைப்புகள் கொண்ட பொருட்களை பரிசாக கொடுக்கலாம் .
சிறு குழந்தைகளுக்கான விழாவாக கன்னியா பூஜை இருப்பதால் வளையல்கள், சிவப்பு நிற துப்பட்டாக்கள், இனிப்புகள் மற்றும் பருவ கால கிளிப், ரிப்பன் போன்ற முடி ஆபரணங்கள் பேனா, பென்சில், கதை புத்தகங்கள்சிறிய பணப்பை அல்லது தண்ணீர் பாட்டில் போன்ற பரிசுகளை குழந்தைகளுக்கு தருவது மகிழ்ச்சியாகவும் புனிதமாகவும் கருதப்படுகிறது.