கணவரின் ஆயுள் காக்கும் காரடையான் நோன்பு: தாலி சரடு மாற்ற உகந்த நேரம் எது?

காரடையான் நோன்பு எப்போது வருகிறது, இந்த நாளில் என்ன செய்ய வேண்டும், எப்படி நோன்பு கடைபிடிக்க வேண்டும் என்பது பற்றிய விபரங்களை தெரிந்துகொள்ளலாம் வாங்க...
காரடையான் நோன்பு
காரடையான் நோன்பு
Published on

தமிழர்களின் பாரம்பரியத்தில் மிகவும் முக்கியமான விரத நாட்களில் ஒன்றாக கடைபிடிக்கப்படுவது காரடையான் நோன்பு. காரடையான் நோன்பு என்பது சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காகவும், கன்னிப் பெண்கள் நல்ல கணவரை அடைய வேண்டி கைகளில் மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டும், குடும்பத்தில் ஒற்றுமை, செல்வ வளம் பெருகவும் சுமங்கலி பெண்கள் மாசி - பங்குனி மாதப் பிறப்பில் (மார்ச் 14, 2026) அனுசரிக்கும் புனிதமான விரதமாகும். எனவே சுமங்கலி பெண்கள் மறந்தும் கூட இந்த நாளை தவறவிடாமல் விரதம் இருப்பது புண்ணியத்தை தேடித்தரும்.

இதை மாங்கல்ய நோன்பு என்றும், சுமங்கலி நோன்பு, சுமங்கலி விரதம், காஞ்சி காமாட்சி அம்மன் விரதம் என பல பெயர்களில் குறிப்பிடுவார்கள். ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மன் இந்த விரதத்தை அனுஷ்டித்ததால், இந்த நோன்புக்கு காமாட்சி அம்மன் விரதம் என்று பெயர் வந்ததாக கூறுவார்கள்.

இந்தாண்டு காரடையான் நோன்பு எப்போது வருகிறது, இந்த நாளில் என்ன செய்யவேண்டும், எப்படி நோன்பு கடைபிடிக்க வேண்டும் என்பது பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க...

இதையும் படியுங்கள்:
காரடையான் நோன்பு சாவித்திரி பெற்ற வரம்!
காரடையான் நோன்பு

2026ம் ஆண்டில் காரடையான் நோன்பு வரும் மார்ச் 14-ம்தேதி (நாளை)சனிக்கிழமை அன்று கடைபிடிக்கப் படுகிறது. மார்ச் 14-ம்தேதி (நாளை)காலை 06.48 மணி துவங்கி, மார்ச் 15-ம்தேதி (நாளை மறுநாள், ஞாயிற்று கிழமை) அதிகாலை 01.08 வரை இந்த விரதத்தை கடைபிடிக்க வேண்டும். மாசி மாத கடைசி நாள் இரவில் இந்த விரதத்தை ஆரம்பித்து பங்குனி மாத முதல் நாள் காலையில் விரதம் நிறைவு செய்வார்கள்.

சாவித்திரி தன் கணவர் சத்யவானின் உயிரை எமனிடமிருந்து மீட்டதை நினைவுபடுத்தும் வகையில், காரடையான் நோன்பு அன்று காராமணி மற்றும் அரிசி மாவு கொண்டு செய்யப்பட்ட 'அடை' நைவேத்தியம் படைத்து, மஞ்சள் கயிறு (சரடு) கட்டிக்கொண்டு பெண்கள் வழிபடுவார்கள். அன்றைய தினம் சுப முகூர்த்த வேளையில் அதாவது நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணிமுதல் 8 மணிக்குள் புதன், சந்திர ஹோரைகளில் அல்லது இரவு 9 மணி முதல் 10 மணிக்குள் குரு ஹோரையில் பெண்கள் தாலி சரடு மாற்றிக்கொள்ளலாம்.

எமனிடம் இருந்து தன்னுடைய கணவன் சத்தியவானின் உயிரை மீட்பதற்காக சாவித்திரி கடைபிடித்த நோன்பு என்பதால் இந்த நாளில் நாமும் விரதம் இருந்து வழிபட்டால் நமக்கும் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

காரடையான் நோன்பு அன்று செய்ய வேண்டியவை :

காரடையான் நோன்பு (சனிக்கிழமை) அன்று அதிகாலையிலேயே எழுந்து, வீட்டை சுத்தம் செய்து விட்டு, மஞ்சள் பூசி குளித்து விட்டு, தூய ஆடை அணிந்து விரதத்தை தொடங்கவேண்டும். அன்றைய தினம் முழுவதும் உணவு ஏதும் அருந்தாமல் உபவாசம் இருப்பது மிகவும் புண்ணியமாகும். அப்படி நாள் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், புளிப்பு, உப்பு சேர்க்காத உணவுகளை சாப்பிட்டு விரதம் இருக்கலாம் அல்லது பால், பழங்களை மட்டும் சாப்பிட்டு விரதம் அனுஷ்டிக்கலாம்.

வீட்டின் பூஜையறையில் உள்ள காமாட்சி அம்மன் படத்தை துடைத்து மஞ்சள், குங்குமம் வைத்து பூ போட்டு வணங்க வேண்டும். பிறகு அம்மன் படத்திற்கு முன் மஞ்சள் சரடை வைத்து, விளக்கேற்றி, ஸ்லோகங்கள் சொல்லி வழிபாடு செய்யவேண்டும்.

பிறகு அம்மன் முன்பு உள்ள மஞ்சள் சரடை எடுத்து கணவரின் கைகளால் கொடுத்து கட்டிக்கொள்ளலாம். கணவர் வெளியூர் சென்றிருந்தால் வீட்டில் உள்ள மூத்த சுமங்கலிகள் கையில் கொடுத்து கட்டிக் கொண்டு, அவர்களிடம் ஆசி பெறலாம். குறிப்பாக இந்த நாளில் அக்கம் பக்கத்தில் உள்ள சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து, அவர்களுக்கு தாம்பூலம் கொடுப்பது தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இதையும் படியுங்கள்:
காரடையான் நோன்பு அடை செய்வோமா?
காரடையான் நோன்பு

அப்படி அப்படி முடியாதவர்கள் மஞ்சள், குங்குமம், பூ, தாலி சரடு ஆகியவற்றை வாங்கி கோவில்களில் வைத்து வழிபாடு செய்த பின்னர் கோவிலுக்கும் வரும் பெண்களுக்கு தானமாக கொடுக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com