

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மக்களுக்கு அருள் தரும் ஆயிரம் காளி அம்மன் கோவில் திருமலை ராயன் பட்டியில் உள்ளது. இந்த இடத்திற்கு அம்மன் தானாகவே வந்தவள். இது காரைக்கால் அருகே உள்ளது.
தலவரலாறு:
வெகு காலத்திற்கு முன் கலிங்க தேசத்து மன்னன் ஒருவன் ஆண்டுவந்தான். தன் நாடு எப்பேதும் செழிப்பாக இருக்க என்ன செய்யவேண்டும் என்று சான்றோர்களைக் கேட்க அவர்கள் காளியை தினமும் ஆயிரம் பொருட்களைக்கொண்டு தினமும் பூஜிக்க செழிப்பு பெறலாம் என கூற, அவனும் காளியை தினமும் பூஜித்து வந்தார்.
இந்த காளிக்கு பழம், பூ, பலகாரம் மற்றும் எதுவாக இருந்தாலும் 1000 படைக்கவேண்டும். பொறுமையாக மன்னன் ஐந்து வருடங்கள் இப்படியே பொறுமையாக பூஜித்தான் ஒருநாள் வைத்த பொருளை மறுநாள் வைக்கக் கூடாது. ஒருநாள் மந்திரி மன்னரிடம் பூஜை செய்ய வேறு பொருட்கள் இல்லாது எல்லாமே முன்பு வைத்த பொருளாகவே கிடைக்கிறது என்ன செய்வது என்று கூறினான். மன்னன் தெய்வ குற்றம் ஏற்படுமே என தவித்தான்.
அப்போது திடீரென்று அவர் முன் 1000பேர்கள் தோன்றி "மன்னா நீங்கள் கவலைப்படவேண்டாம். எங்கள் பிரிவில்1000பேர்கள் இருக்கிறோம். எங்களை காணிக்கையாக கொடுங்கள். அன்னை மகிழ்வாள் என்றான். மன்னனும் பூஜையை ஆரம்பித்தான்.
அப்போது அசரீரி ஒலித்தது "எனக்கு உன் பூஜையில் நல்ல திருப்தி ஏற்பட்டுவிட்டது. இவர்களை பலியிட வேண்டாம். உடன்பாடு எப்போதும் செழிப்பாகவே இருக்கும். உன் கடைசி காலத்தில் என்னை ஒரு பேழையில் போட்டுவிட்டு கடலில் விட்டுவிடு என்று கூறியது. மன்னன் இறந்து போவதற்கு முன் காளியின் உருவத்தை ஒரு பேழையில் வைத்து கடலில் மிதக்கவிட்டான். மன்னன் மறைந்ததும் இந்தப் பெட்டி மிதந்து கொண்டே யார் கையிலும் படாமல் தனக்காக உயிரை மாய்க்க வந்த ஆயிரம் பேர்கள் வாழ்ந்த திருமலை ராயன் பட்டிக்கு வந்தது.
இங்கு செங்குந்த முதலியார் வகுப்பைச் சேர்ந்த சிவநேசர் கனவில் அம்மன் தோன்றி கடலில் ஒருபேழையில் இருப்பதாகவும் தன்னை ஒருகோவில்கட்டி பூஜிக்க கூறியது.
மறுநாள் ஊர்மக்களிடம் கூறி மேளதாளத்துடன் எல்லோரும் கடலுக்குப் சென்று மிதந்து வந்த பேழையைத் திறந்து பார்க்க அதில் காலில் சிலம்புடன் ஒளிப்பிழம்பாய் ஆயிரம் காளி சிலையும் ஒரு ஓலையும் இருந்தது ஓலையில் அந்த காளியை ஆயிரம் பொருட்களுடன் பூஜை செய்து திரும்ப பேழையில் வைத்துவிடவும். ஐந்து ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே திறக்க வேண்டும் என எழுதியிருந்தது.
உடனே சிவநேசர் காளிக்கு திருமலை ராயன் பட்டியில் கோவில் எழுப்பினார். ஐந்து வருடத்தில் ஒருமுறை வைகாசி வளர்பிறையன்று இந்த பேழை திறக்கப் படுகிறது. அப்படிப் பேழையைத் திறப்பதற்கு முன் கலீர் என்ற கொலுசுச் சத்தம் கேட்கும். அதற்குப் பிறகு அது திறக்கப்படும்.
சிவநேசர் இந்தப் பேழையை ராஜசோளீச்வரர் கோவில் மண்டபத்தில் வைத்துதான் திறந்தார். இவள் கம்பீரமாகக் காட்சி தருவதால் வீரமகாகாளி என்றும் அழைக்கப் படுகிறாள். பேழையை திறக்கும்போது மாதுளை நிறத்தில் உடலும் பட்டாடையுடனும் நெற்றியில் திலகம் மற்றும் கால்களில் சிலம்பு தோற்றத்துடன் அருள் தந்தாள்.
இந்த அம்மனுக்கு மாலை, கனிகள், பலகாரங்கள் இளநீர் என்று அதைப் படைத்தாலும் ஆயிரம் படைக்க வேண்டும் என்பதால் இவள் ஆயிரங்காளி என்ற பெயரைப் பெற்றாள். ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வைகாசி வளர்பிறையில் இவளை ராஜசோளீஸ்வர ஆலயத்திலிருந்து ஊர்வலமாக ஆலயத்திலிருந்து அழைத்து வரப்படுவாள்.
அலங்கார ஊர்திகளில் படையல் பொருட்களை மக்கள் எடுத்துவந்து ஊர்வலமாக எடுத்து வந்து அவளுக்கும் படையல் செய்வார்கள். புதன் வியாழன இரண்டு நாட்கள் எல்லோரும் தரிசனம் செய்தபின் வெள்ளியன்று விடியுமுன் பேழையில் வைக்கப்படுவாள்.
ஐந்து வருடங்களாக வைக்கப்பட்ட பூ மாலை மற்றும் எலுமிச்சை பழங்கள் வாடாமல் அப்படியே இருப்பது மிக அபூர்வ விழயமாகக் கருதப்படுகிறது. கடந்த 2022ம் ஆண்டு இவள் காட்சிதந்தாள். 2027ம் ஆண்டு திரும்ப காட்சி தருவாள். நாம் கேட்கும் அனைத்து வரங்களையும் தந்து நம்மை மகிழ்விப்பவள் இந்த ஆயிரங்காளி அம்மன் அதனால் அவளை தரிசித்து அனைத்து நன்மைகளையும் அடைவோம்.