

தமிழ்நாட்டில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகில் உள்ள காரமடை என்ற ஊரில் அமைந்துள்ளது இந்த பெருமாள் கோவில். ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலாகும்.
கொங்கு நாட்டில் உள்ள வைணவ தளங்களில் மிகவும் பழமையானது. இங்குள்ள அரங்கநாதர் சுயம்பு வடிவில் அருள் பாலிக்கிறார்.அந்தக் காலத்தில் அடர்ந்த காரை மரங்கள் நிறைந்த பகுதியாக இந்த இடம் காணப்பட்டது. இந்த காட்டுப பகுதியில் ஆடு மாடுகள் மேயப்பட்டு வளர்த்து வந்தனர். எனவே இந்த பகுதி காரை வனம் என அழைக்கப்பட்டது. நாளடைவில் மருவி காரமடை என அழைக்கப்பட்டது. காரமடை மூலவர் காட்டுப்பகுதியில் அரங்கநாதர் சுயம்பு வடிவாக தோன்றியதாக வரலாறு உள்ளது. அந்தக் காலத்தில் திருமலை நாயக்கர் மன்னன் கடுமையான தோல் நோயால் பாதிக்கப்பட்டார். அவர் இங்குள்ள அரங்கநாதரை வழிபட்டதன் காரணமாக அவரது நோய் பூரண குணமடைந்தது.
எனவே திருமலை நாயக்கர் மன்னன் இந்த கோவிலுக்கு தெப்பக்குளம் வெட்டியும் மதில் சுவர் கட்டி மண்டபம் எழுப்பினார். ஒரு புதிய தேரையும் செய்து கொடுத்தார். மாசி மகம் அன்று தேர்த்திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். தேரோட்டம் முடிந்த மறுநாள் பக்தர்கள் தோல் பைகளில் நீரை சுமந்து சுவாமி மீது ஊற்றி வழிபடுகிறார்கள்.
தொட்டிய நாயக்கர் காலத்தில் அரங்கநாதர் சுயம்பு வடிவமாக காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டார். அதன் பின்னர் திருமலை நாயக்கர் இந்த கோவிலை கட்டியதாக வரலாறு. மூலவர்
சயனகோலத்தில் தலை மட்டும் தெரியும்படி சுயம்புவாக காட்சி தருகிறார். உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதமாக காட்சியளிக்கிறார்.
கருடாழ்வார் விருப்பப்படி பெருமாள் இத்தலத்தில் கல்யாண கோலத்தில் காட்சி அளிக்கிறார். இக்கோவில
பதினோராம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. விஜயநகர பேரரசர் மற்றும் திருமலை நாயக்கர் மன்னரால் இந்த கோவில் விரிவுபடுத்தப்பட்டது.
மாசி தேர் திருவிழா புரட்டாசி சனிக்கிழமை தைப்பொங்கல் விசேஷமாக கொண்டாடப் படுகிறது. மூலவர் அரங்கநாதர் தாயார் அரங்கநாயகி. உற்சவர் வெங்கடேச பெருமாள் ஆகியோர் உள்ளனர்
அரங்கநாயகி சன்னதிக்கு வலது புறம் 12 ஆழ்வார்கள் சன்னதி உள்ளது. ஆண்டாள் சன்னதியின் இடதுபுறம் ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இக்கோவிலில் கோவில் தெப்பக்குளம் கோசாலை தேர் முதலியன சிறப்பாக காணப்படுகிறது. ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது இப்படி இரண்டு கோபுரங்கள் உள்ளன.
இங்குள்ள ஒக்கலிக்க கவுடா சமூகத்தினர் அரங்கநாதரை குலதெய்வமாக வழிபாடு செய்கிறார்கள். தலவிருட்சம் காரை மரம். தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் எனப்படுகிறது. கோவையில் இருந்து.
28 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மகாவிஷ்ணு இங்கு சுயம்புவாக காட்சி தருகிறார். அரங்கநாத சுவாமி வலப்புறம் அரங்கநாயகி தாயார் இடது புறம் ஆண்டாள் சன்னதியும் உள்ளது.
பரவாத தேவர் சன்னதி அருகே 12 ஆழ்வார் சன்னதிகள் உள்ளன.
இங்குள்ள காரை மரத்தில் கயிறு கட்டினால் திருமணம் நடக்கும் குழந்தை பேரு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இங்கு நடைபெறும் தேரோட்டம் பெட்டத்து அம்மன் அழைப்பு, தண்ணீர் சேவை, பந்தசேவை உள்ளிட்ட விழாக்களை காண கோவை ஈரோடு திருப்பூர் நீலகிரி மாவட்டங்களில் இரந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் இந்த காரமடை கோவில் அமைந்துள்ளது.