

பாவங்களையும் தீர்த்து அதிர்ஷ்டங்களையும் மனநிம்மதியை தரக்கூடியது சர்வ ஏகாதசி. மாதம் தோறும் வரும் ஏகாதசியானது மிகப்பெரிய ஆற்றல் உடையதாகும். அந்த வகையில் மகாவிஷ்ணுவிற்கு உகந்த கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசி வரும் டிசம்பர் 15-ம்தேதி அன்று வருகிறது. இது சாதாரண ஏகாதசி இல்லை. சிறப்பு வாய்ந்த ஏகாதசி. எதனால் இந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றால் டிசம்பர் 15-ம்தேதி ரமா ஏகாதசி வருகிறது. ரமா ஏகாதசி என்பது கார்த்திகை மாதம் தேய்பிறையில் வரும் ஒரு புனிதமான ஏகாதசி நாள். இந்த நாள் விஷ்ணுவை வழிபட்டு பாவங்கள் நீங்கவும், ஆன்ம விடுதலை அடையவும் விரதம் மேற்கொள்ளவும் சிறப்பான நாள் என்பதால் இந்த நாளை தவறவிடாமல் வழிபாட்டை செய்யுங்கள்.
அதாவது இந்த நாள் உங்கள் கஷ்டங்களில் இருந்து மோக்ஷம் கொடுத்து உங்கள் உடலையும் ஆன்மாவையும் தூய்மைப்படுத்தும் நாள்.
பொதுவாக ஏகாதசி என்பது விஷ்ணுவின் மறு அவதாரத்தை போற்றும் நாளாகும். அந்த புனிதமான நாளில் லட்சுமி நாராயணருக்காக விரதம் இருப்பது சிறப்பான பலன்களை தரும் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து குளித்து, விஷ்ணு பகவானை வணங்கி, விரதம் இருப்பதால் நமது பாவங்கள் நீங்கி மோட்சம் உண்டாகும். முக்கியமாக உங்கள் உடலை வருத்திக்கொண்டு விரதம் இருக்க வேண்டாம்.
நாள் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள் பால், பழங்களை சாப்பிட்டும் விரதம் அனுஷ்டிக்கலாம். அந்த விரதத்தை அனுஷ்டிப்பதால் நம் துன்பங்கள் நீங்கி சகல பாக்கியங்களும் கிடைக்கும். அன்றைய தினம் விரதமிருந்து விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கி அனைத்து நற்பலனும் கிடைப்பதோடு புத்திர தோஷமும் நீங்கும். முக்கியமாக மகா விஷ்ணு மற்றும் மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்கும்.
ரமா ஏகாதசி அன்று ஒரு துளசி இலை கொண்டு விஷ்ணுவை வணங்குவது நவரத்தினங்களை பகவானுக்கு சமர்ப்பிப்பதை காட்டிலும் உத்தமமானது என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
ரமா ஏகாதசி விரதத்தை யாரெல்லாம் கடைபிடிக்கிறார்களோ, அவர்களது பாவங்கள் அனைத்தும் நீங்கி வைகுண்ட பதவியை அடைவார்கள் என்பது ஐதீகம்.
அதேபோல் அன்றைய தினம் மறந்தும் கூட இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்...
ஏகாதசி திதியில் (டிசம்பர் 15-ம்தேதி)வீட்டில் இறந்தவருக்கு நினைவு நாள் வந்தால் அன்றைய தினம் திதி செய்யக்கூடாது. அந்த தினம் துளசி இலைகளை பறிக்கக்கூடாது. பகலில் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.
தீய வார்த்தைகளைப் பேசுதல் மற்றும் உணர்ச்சிவசப்படுதல் கூடாது.
அதேசமயம் ஏகாதசி திதி அன்று ஆபரணங்கள் வாங்கலாம். திருமணங்கள் செய்யலாம். மங்களகரமான சடங்குகள் செய்யலாம். குழந்தைகளுக்கு மொட்டை அடிக்கலாம்.
சர்வ ஏகாதசி முடிந்து, அது கூடவே மறுநாள் மார்கழி மாசம் ஆரம்பிப்பதால் உங்களுக்கு லட்சுமி காலம் தொடங்க போகிறது என்று அர்த்தம். அதாவது நாராயணரோட அருள் ரொம்ப பரிபூரணமாக இருக்கிற நாள். இந்த மார்கழி மாதம் யாரோட வாழ்க்கையில் மாற்றம் வரப்போகிறது என்றால் பண கஷ்டங்கள் இருப்பவர்கள், மன அழுத்தம், உறவில் சிக்கல்கள் இருப்பவர்கள் என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்கள், வாழ்க்கையில் முனனேற்றத்தை தேடி போறவங்க இவங்க எல்லாருக்குமே மார்கழி மாதம் ஒரு கோல்டன் கேட் மாதிரி.
அதுக்குள்ள போற எல்லாருக்குமே அவங்க நினைத்து பார்க்காத அளவுக்கு லட்சுமி நாராயணரால் அவங்க வாழ்க்கையில் நல்ல ஒரு மாற்றம் வரப்போகிறது.
டிசம்பர் 15-ம்தேதி விஷ்ணுவை மட்டுமல்ல சிவபெருமானையும் வழிபட உகந்த நாள். அதாவது கார்த்திகை மாத கடைசி சோமவாரம் வருகிறது. கார்த்திகை சோமவாரம் என்பது கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் சிவபெருமானை வழிபடும் சிறப்பு வாய்ந்த விரதமாகும்.
கார்த்திகை சோமாவார திருநாட்களில் சிவத்தலங்களைத் தரிசிப்பதும் கோடிபுண்ணியத்தைப் பெற்றுத் தரும். கார்த்திகை மாதத்தில் வரும் கடைசி சோமவாரம் என்பதால் இந்த நாளில் சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி, வில்வ இலை சாற்றி வழிபாடு செய்வது புண்ணிய பலன்களை தரும்.