கருவூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலின் புராண வரலாறும் அதிசய தலச் சிறப்புகளும்!

புகழ்ச் சோழ நாயனார், கருவூர் சித்தர், சம்பந்தர், கருவூரார், அருணகிரிநாதர் ஆகியோரின் பக்திப் பாரம்பரியத்தை தாங்கும் ஆனிலையப்பர் திருக்கோவில்; முசுகுந்த சக்கரவர்த்தி திருப்பணி, காமதேனு வழிபாடு, அரிய முருக தரிசனம் கொண்ட புனித ஸ்தலம்.
kalyana-pasupatheeswarar-temple
kalyana-pasupatheeswarar-temple
இந்திரா கோபாலன்

மங்கையர் மலரின் 40 வருஷத்து வாசகியான எனக்கு படிப்பது எழுதுவது மிகவும் பிடித்த விஷயம். புத்தக வடிவிலிருந்து ஆன் லைன் அவதாரத்தை ம.மலர் எடுத்தபின்பும் என்எழுத்து. ஆர்வத்தை ஊக்குவிக்கும் படி என் படைப்புகளை வெளியிடுவதில்.மகிழ்ச்சி. பி.எஸ சி பட்டதாரியான நான் திருமணத்திற்குப் பிறகு தான் எழுத்துப் பணியைத் தொடர்ந்தேன். ஃபெமினா சவ்வி உமன்ஸ்ஈரரசொசைடி போன்ற பல பத்திரிகைகளில் பல கடிதங்கள் எழுதி பரிசு பெற்றுள்ளேன்.தொடர்ந்து மங்கையர் மலருக்கு படைப்புகளை அனுப்புவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

Updated on

கொங்கு நாட்டு ஏழு சிவ தலங்களில் கல்யாண பசுபதீஸ்வரர் தலம் முதன்மையானது.  கருங்கல்லால் ஆன கொடிமரம் அமைந்தது. புகழ்ச் சோழ நாயனார் ஆண்ட தலம்.

தல வரலாறு

கி. பி 400ம் காலத்தில்  எதிரி மன்னர் மீது போர் புரிந்து  வெற்றி கண்டு கொண்டு வரப்பட்ட  வீரர்களின் தலைகளில் ஒன்று சிவனடியார்  தலையாக இருந்ததைக் கண்டு கவலையுற்ற   மன்னன் கருவூர்  பசுபதீஸ்வரர் திருக்கோவில். கோபுரம் முன்புகழ்ச் சோழ மன்னன்  மாபெரும் யாகம் வளர்த்து  சிவனடியாரின் தலையைத் தங்கத் தட்டில் வைத்து யாகத்தில் இறங்கி தன்னையே யாகத்தில் அர்ப்பணம் செய்தார்.

இக்கோவில்  மூலவர் ஆனிலையப்பர். அம்மன் அலங்காரத்தில், சௌந்திரநாயகி, கிருபா நாயகி. தலவிருட்சம் வஞ்சி  தீர்த்தம்,

பிரம்ம தீர்த்தம்

அமராவதி தீர்த்தம்

தாடகை தீர்த்தம்

 தேனு தீர்த்தம்

முருக தீர்த்தம்

பாடியவர்கள்

சம்பந்தர் __தேவாரம்

கருவூரார் _திருவிசைப்பா

அருணகிரிநாதர் _திருப்புகழ்

இதையும் படியுங்கள்:
பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலின் தல வரலாறும் அதிசய நம்பிக்கைகளும்!
kalyana-pasupatheeswarar-temple

தலச் சிறப்புகள்

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார்

ஆவுடையார் சதுரமாக உள்ளது.

மாசி மாதம் சுவாமி மீது சூரிய ஒளி படுகிறது.

கருங்கல்லால் ஆன கொடிமரத்தின ஒருபுறத்தில் தலையைத் தட்டில் ஏந்தியவாறு  அமைந்த புகழ்ச் சோழ நாயனார் சிற்பமும் மறுபுறம் சிவலிங்கத்தை நாவால் தடவும் பசுவும் அமைந்துள்ளன. 

இங்கு அம்பிகைக்கு இரண்டு சன்னதிகள் உள்ளன. புகழ்ச் சோழன் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது.

சோழர்கள் இருந்து அரசாண்ட ஐந்து  தலைநகரங்களுள் இதுவும் ஒன்று.

நடராஜர் சன்னதியும், கோஷ்ட மூர்த்தியாக தட்சிணா மூர்த்தியும், உட்பிராகாரத்தில் சுவாமி சன்னதியும் இலக்ஷ்மி மற்றும் முருகர் சன்னதிகள் உள்ளன. 

நேர்த்திக் கடன்

அபிஷேகங்கள் மற்றும் தாலி, ஆபரணங்கள் ஆகியவற்றைக் காணிக்கையாக செலுத்துகிறார்கள். 

தலம் பெருமை

புகழ்ச் சோழ நாயனார் ஆண்டபதி

எறிந்த நாயனார் பிறந்த தலம்

திருவிசைப்பா பாடிய கருவூர்த் தேவரின் அவதாரத் தலம்.

கிபி 14ம் நூற்றாண்டில்  அருணகிரிநாதர்  இக்கோவில் முருகனை தன் திருப்புகழில் பாடியுள்ளார்.

இத்தலத்தில்  முருகப்பெருமான் ஆறு திருமுகங்களுடன், 12 திருக்கரங்களுடன் தன்  தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி  காட்சி தருகிறார். மயில் பின்பக்கம் உள்ளது.

இந்த புராண காலத்தில் வாழ்ந்த முசுகுந்த சக்கரவர்த்தியால்  திருப்பணி செய்யப்பட்ட சிவ ஸ்தலம்.

திருப்பரங்குன்றத்தில்  தெய்வானையுடனான முருகப் பெருமானின்  திருமண வைபவத்திற்கு முசுகுந்தனுக்கு அழைப்பு அனுப்பப்பட்டதாக புராண வரலாறு கூறுகிறது.

பதினெண் சித்தர்களில் ஒருவரான கருவூர் சித்தர் வாழ்ந்த இடம்.

இவர் ஆனிலையப்பரோடு ஐக்கியமான தால் சுயம்புலிங்கம் சற்று சாய்ந்து உள்ளது. காமதேனு வால் வழிபட்ட தலம் இது. காமதேனு வழிபடும்போது குளம்பு சிவலிங்கத்தின் மீது பட்டதால் ஏற்பட்ட குழிவான தழும்பு வடிவம் உள்ளது‌.

logo
Kalki Online
kalkionline.com