சிவபெருமானின் மகன்களைத் தெரியும்; ஆனால் அவரது மகள்களைத் தெரியுமா?

சிவபெருமானின் மகள்கள்
சிவபெருமானின் மகள்கள்
Published on

சிவபெருமானுக்கு கணேசன், முருகன், ஐயப்பன் என மூன்று மகன்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், சிவபெருமானின் மூன்று மகள்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? சிவபெருமானுக்கு மூன்று மகன்களைத் தவிர, அசோகசுந்தரி, ஜோதி, வாசுகி ஆகிய மூன்று மகள்களும் உள்ளனர். அவர்களைக் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

அசோக சுந்தரி: அசோக சுந்தரி குறித்து பத்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. சிவன் - பார்வதி தம்பதிக்கு மகளாக அசோக சுந்தரி வருணிக்கப்பட்டுள்ளார். மேலும், அசோகசுந்தரி, நகுசன் என்பவரை மணந்து கொண்டதாகவும், அவர்களுக்கு 'யயாதி' என்ற குழந்தையும் இருப்பதாக அதில் சொல்லப்பட்டுள்ளது. தனக்கு ஒரு பெண் குழந்தை இல்லையே என ஏங்கிய உமையவளின் சோகத்தைத் தீர்க்கப் பிறந்த அழகி (சுந்தரி) என்பதால் அசோக சுந்தரி என பெயர் வந்ததாகவும் கூறப்படுகின்றது.

அசோக சுந்தரி காளி தெய்வமாகவும் சொல்லப்படுகின்றார். காளி தேவி (அசோக சுந்தரி) சிவபெருமானின் மகள் என அப்பர் சுவாமிகளும், நம்பியாண்டார் நம்பி பாடிய பாடல்களில் கூறப்பட்டுள்ளது. அதேசமயம் கேரளாவில் சிவராத்திரியாகக் காளியை காணும் வழக்கம் இன்றும் உண்டு. சிவபெருமான் விநாயகரின் தலையை கொய்தபோது, பயத்தில் அசோக சுந்தரி உப்பு நிறைந்த சாக்கில் ஒளிந்து கொண்டதாகவும், அதனால் அசோக சுந்தரியின் தேகம் திவ்ய உப்பு சுவை கொண்டதாக மாறியதாகக் கூறப்படுகின்றது. இவர் குஜராத்தில் பெரிய அளவில் அறியப்பட்டு வணங்கப்படுகிறார். ஆனால், இந்தியாவின் வேறு பகுதிகளில் அவ்வளவாக இவர் அறியப்படவில்லை.

ஜோதி: ஜோதி என்றால் ஒளி. அவரின் பெயராலேயே இவர் அறியப்படுகின்றார். ஜோதியின் பிறப்பிற்குப் பின் இரண்டு கதைகள் கூறப்படுகின்றது. முதல் கதையில் ஜோதி சிவபெருமானின் ஒளி வட்டத்திலிருந்து பிறந்தார் என்றும், அவர் சிவனின் உடல் வழிபாடு எனவும் கூறப்படுகிறது. மற்றொரு கதையில் பார்வதி தேவியின் நெற்றியிலிருந்து வெளிப்பட்ட ஜோதியிலிருந்து பிறந்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஜோதியை ஜ்வாலாமுகி என்ற பெயரில் தமிழகத்தில் பல கோயில்களில் வழிபாடு செய்யப்பட்டு வருகின்றது.

இதையும் படியுங்கள்:
உள்ளங்கைகள் கரடு முரடாக மாறிப்போவது ஏன்? காரணங்களும் தீர்வுகளும்!
சிவபெருமானின் மகள்கள்

வாசுகி: வாசுகி என்பவர் அனைத்துக் கோயில்களிலும் வணங்கப்படும் பாம்பு தெய்வமாக உள்ளார். இவர் சிவபெருமானின் மகள். ஆனால். பார்வதி தேவியின் மகள் இல்லை. ஏனெனில் பாம்புகளின் கடவுளாகிய கத்ரு செதுக்கிய சிலையின் மீது சிவபெருமானின் உயிர் அணுக்கள் விழுந்ததால் வாசுகி பிறந்ததாகக் கூறப்படுகின்றது.

சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தியபோது, அவரை அந்த விஷத்திலிருந்து விடுவித்ததும் இந்த வாசுகிதான். வாசுகிக்கு மானசா என்ற பெயரும் உண்டு. இவரின் அதீத கோபத்தின் காரணத்தால், சிவபெருமானால் நிராகரிக்கப்பட்டார். இவர் மேற்கு வங்கத்தில் பாம்பின் வடிவில் வணங்கப்பட்டு வருகின்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com