குடும்ப ஒற்றுமையை ஏற்படுத்தும் மீனாட்சி அம்மன் கோயில் பள்ளியறை பூஜை தரிசனம்!

Sri Meenakshi Sundareswarar
Sri Meenakshi Sundareswarar
Published on

துரை மீனாட்சி அம்மன் கோயிலில் தினசரி நடைபெறும் பள்ளியறை பூஜையை காண்பவர்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பலன்கள் கிடைக்கும். சிவன், சக்தி ஐக்கியத்தை உணர்த்தும் இந்த பள்ளியறை பூஜையை தம்பதி சமேதராக காண்பவர்களின் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பள்ளியறை அம்மன் சன்னிதியில் இருக்கிறது. இரவு அர்த்த ஜாமத்தில் மல்லிகை பூவால் கூடாரம் அமைத்து வெண்தாமரைகளால் மீனாட்சியின் பாதங்கள் அலங்கரிக்கப்படும். வெண்பட்டால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு அன்னையின் திருக்காட்சி சிறப்பாக இருக்கும். இரவு பள்ளியறைக்கு சுந்தரேசுவரரின் வெள்ளி பாதுகைகள் சுவாமி சன்னிதியில் இருந்து பள்ளியறைக்கு வரும். பாதுகைகள் வந்தபின் அன்னைக்கு விசேஷ ஆரத்தி, அதாவது மூக்குத்தி தீபாராதனை நடைபெறுகிறது. அத்தோடு மூன்று வகையான தீபங்கள் காட்டப்படும். அதில் கடைசி தீபம் அம்மனின் முகத்திற்கு மிக அருகில் காட்டுவார்கள். அவ்வாறு காட்டப்படும்போது மிகத் தெளிவாக அம்மனின் திருமுகத்தினை தரிசிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
பகைவர் பயம் போக்கும் ஞாயிறு ராகு கால சரபேஸ்வரர் வழிபாடு!
Sri Meenakshi Sundareswarar

மூன்றாவது தீபாராதனைக்குப் பிறகு அன்னையின் சன்னிதியில் திரை போடப்படும். அவ்வாறு திரையிட்ட பின்னர் அன்னையின் மூக்குத்தி பின்புறமாகத் தள்ளப்பட்டு விடும். மூக்குத்தியானது ஒரு செயினுடன் இணைக்கப்பட்டு அந்த செயினில் இன்னொரு பகுதி அம்மனின் பின்புறத்தில் இணைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு செய்த பிறகு அன்னையின் சார்பாக பட்டர் ஈசனை வரவேற்று பள்ளியறைக்கு எழுந்தருளச் செய்வார்.

பள்ளியறை பூஜை சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்துவதால் இந்த தரிசனத்திற்கு சிறப்பு அதிகம். அதன்பின்னர் அம்பிகையின் சன்னிதி மூடப்பட்டு பள்ளியறையில் பூஜை , பால், பழங்கள், பாடல்கள், இசை என்று சகல உபச்சாரங்களுடன் இரவு கோயில் நடை சாத்தப்படுகிறது. புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே இந்த பள்ளியறை பூஜையை காண முடியும் என பெரியோர்கள் சொல்வார்கள்.

இதையும் படியுங்கள்:
பணப் பற்றாக்குறையை நீக்கும் பூசணிக்காய் பரிகாரம்: அமாவாசையில் மட்டும் இதை செய்யுங்கள்!
Sri Meenakshi Sundareswarar

அன்னை மீனாட்சி எட்டு வித சக்திகளாக நமக்குக் காட்சி தருகிறாள். காலை திருப்பள்ளியெழுச்சி துவங்கி, இரவு பள்ளியறை பூஜை வரை மகாஷோடசி, பாலா புவனேஸ்வரி, கௌரி, சியாமளா, மாதங்கி, பஞ்சதசி, ஷோடசி என எட்டு சக்திகளாகக் காட்சி தருகிறாள். இதில் பள்ளியறை பூஜையின்போது ஷோடசியாக நமக்குக் காட்சி தருகிறாள்.

குடும்ப ஒற்றுமை அதிகரிக்கவும் கணவனின் நோய் தீரவும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெறும் பள்ளியறை பூஜையில் பங்கேற்று தம்மால் ஆன பொருட்களை வாங்கித் தர வேண்டும். அற்புதமான வாரிசுகளைப் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் சனிக்கிழமை அன்று நடைபெறும் பள்ளியறை பூஜையில் பங்கேற்க வேண்டும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேரவும், சண்டை நீங்கி சமாதானம் ஏற்படவும் ஞாயிறு அன்று நடைபெறும் பள்ளியறை பூஜையில் பங்கேற்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
சுப காரியங்கள் செய்ய அஷ்டமி, நவமி திதிகள் ஒதுக்கப்படுவதன் ரகசியம்!
Sri Meenakshi Sundareswarar

பள்ளியறை பூஜைக்கு பால் வாங்கித் தருபவர்கள், நைவேத்தியம் செய்து தானம் கொடுப்பவர்களுக்கு ஒழுக்கமும் பக்தியும் நிறைந்த பிள்ளைகள் பிறப்பார்கள். பல தலைமுறைக்கும் அவர்களின் புகழ் நிலைத்து நிற்கும். பள்ளியறை பூஜையில் கர்ப்பிணிகள் பங்கேற்று பசுவிற்கு பழங்கள் கொடுத்து வர சுகப்பிரசவம் ஏற்படும். நெய்வேத்திய பாலை தானும் குடித்து மற்றவர்களுக்கும் தானம் செய்தால் சுகப்பிரசவம் உண்டாகும். பள்ளியறை பூஜை முடிந்து அன்னதானம் செய்பவர்களுக்கு தொழில் வளர்ச்சி அடையும். லாபம் பல மடங்கு கிடைக்கும்.

பூஜைக்கு பல்லக்கில் ஈசன் நகர்வலம் வரும்போது சிவபுராணம் படிக்க வேண்டும். பள்ளியறை பூஜையை தினமும் தரிசனம் செய்தாலே வளமான வாழ்க்கை அமையும். பள்ளியறை பூஜைக்கு பல்லக்கு தூக்கி சுமக்கும் பாக்கியம் பெற்றவர்கள் ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிபதியாக மாறுவார்கள் என்பது ஐதீகம். பள்ளியறை பூஜைக்கு பூக்கள் கொடுப்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். பள்ளியறை பூஜைக்கு நெய், நல்லெண்ணெய் கொடுப்பவர்களின் கண் பிரச்னைகள் தீரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com