குலதெய்வம் வாசம் செய்யும் நிலைவாசல் வழிபாடு!

House Front Door Care
House Front Door CareImage Credits: Tamil News
Published on

ம் வீட்டின் நிலைவாசல் வழியாகத்தான் நல்ல விஷயமாக இருந்தாலும் சரி, கெட்ட விஷயமாக இருந்தாலும் சரி நுழைகிறது. அத்தகைய நிலைவாசல் படியை நல்லவிதமாகப் பராமரிக்கும்போது அனைத்துவித ஐஸ்வர்யங்களும் தானாகவே வீட்டுக்கு வந்து சேரும். வீட்டின் நிலைவாசலை எவ்வாறு பராமரிப்பது என்பதைப் இந்தப் பதிவில் காண்போம்.

நிலைவாசலில் கும்ப தேவதைகளும், குலதெய்வங்களும் குடியிருப்பதாக ஐதீகம் உண்டு. அதனாலேயே நிலைவாசலுக்கு ஒவ்வொரு நாளுமே மஞ்சள், குங்குமத்தால் பொட்டிட்டு, பூக்கள் வைப்பது என்பதை தவறாமல் செய்ய வேண்டும். மேலும், மாவிலை தோரணம் கட்டி வீட்டைப் பராமரிக்கிறோம். வீட்டின் பூஜையறையில் காட்டும் ஊதுபத்தியை நிலைவாசல்படிக்கும் காட்ட வேண்டும். நிலைவாசலை நாம் பூஜையறையில் தெய்வங்களை கவனிப்பது போல கவனிக்க வேண்டும். ஏனெனில், அங்கே,தான் குலதெய்வம் நின்று நம் வீட்டை காவல் காக்கிறது.

கோயிலுக்குச் சென்று வரும்போது அங்கே செய்யப்படும் அபிஷேக நீரை வாங்கி வந்து அதை நிலைவாசல்படியில் தெளிக்கலாம். புனித யாத்திரை போன்ற இடங்களுக்குச் செல்லும்போது அங்கிருக்கும் புனித நதியிலிருந்து நீரைக் கொண்டு வந்து அதை நிலைவாசலில் தெளிப்பதால் துர்சக்திகள் வீட்டினுள்ளே நுழையாது.

இதைச் செய்ய முடியாதவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் கொஞ்சம் மஞ்சள் பொடி, ஒரு துண்டு பச்சை கற்பூர பொடியை கலந்து, அதனுடன் ஏலக்காய் பொடி 1 சிட்டிகை சேர்த்துக் கொண்டு, கிராம்பின் மொட்டு பகுதி அத்துடன் கற்பூரவள்ளி இலையும், துளசி இலையும் சேர்த்து வியாழன், வெள்ளி நாட்களில் தெளிக்க வேண்டும். இதை முந்தைய நாள் இரவே தயாரித்து வைத்து விட வேண்டும்.

காலையில் வாசல் கதவைத் திறக்கும்போது அஷ்ட லட்சுமிகளின் நாமத்தைச் சொல்லி திறக்க வேண்டும். வாசலை சுத்தப்படுத்திய பிறகு ஊற வைத்த பொருட்களை வடிகட்டி விட்டு அந்தத் தண்ணீரை வாசலில் தெளிக்க வேண்டும். இதனால் வீட்டில் அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும்.

இதையும் படியுங்கள்:
தமிழர்களின் கோயில் சிற்பங்களில் இடம் பிடித்த யாளியை தேடி ஒரு பயணம்!
House Front Door Care

இது மட்டுமில்லாமல், வாசல் கதவை தூசியில்லாமல் துடைத்து, மஞ்சள், குங்குமம் வைத்து பூக்களால் அலங்கரிப்பது சிறப்பு. மஞ்சள் பூசுவது, கிருமி நாசினியாகவும் இருக்கும், நல்ல அருள் சக்தியை நிலைப்பெற செய்வதோடு, மகாலட்சுமியின் அம்சமும் நிலைக்கும். இதைச் செய்து முடித்த பிறகு கண்டிப்பாக இரண்டு அகல் விளக்குகளை வீட்டின் வாசலில் ஏற்ற வேண்டும். இதை காலை, மாலை இருவேளையும் ஏற்றலாம். இவ்வாறு செய்யும்போது கண்டிப்பாக கும்ப தேவதைகளும், குலதெய்வமும் நம் வீடுகளில் விரும்பி வாசம் செய்வார்கள். அஷ்ட ஐஸ்வர்யமும் நம் வீட்டில் நிறைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com