யாரிடம் விலகி இருக்க வேண்டும்? சாணக்கியர் காட்டும் வாழ்க்கைப் பாதை!

life-lessons
life-lessons
Updated on

மாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வைப் போன்றது.

கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உள்ளமிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், அரசகுடுப்பத்தில் பிறந்தவர்களை ஒருநாளும் நம்பக்கூடாது.

ஒரு காரியம் நிறைவேறும்வரை அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான்‌. அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பைத் தேடித்தருவான்.

நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காதவன் வாசனையில்லாத மலர்போல் ஆவான்.

கடலில் பெய்யும் மழை பயனற்றது. வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது. நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது.‌ அதுபோல் முட்டாளுக்குக் கூறும் அறிவுரையும் பயனற்றது.

பிறவிக் குருடனுக்கு கண் தெரிவதில்லை. அதுபோல் காமம் உள்ளவனுக்கு கண் தெரியாது. பெருமை உள்ளவனுக்கு கெடுதி தெரியாது. பணம் பண்ண நினைப்பவனுக்கு பாவம் தெரியாது.

சிங்கம் ஒரு விஷயத்தை நன்கு யோசித்து செய்யும்.‌ கொக்கு ஓடுமீன்ஓட உறுமீன் வரும்வரை காத்திருக்கும்‌. அறிவாளி ஒரு காரியம் செய்ய இடமும் காலம் மற்றும் தன் ஆற்றல் கூடும் வரை காத்திருப்பான். களைப்புற்றாலும் கழுதை தன் வேலையை தொடர்ந்து செய்யும்.

யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள். குதிரையின் விருந்து 100அடி விலகி இருங்கள். கொம்பு உள்ள மிருகத்தின் மிகுந்து 10அடி விலகி இருங்கள். ஆனால் நம்பிக்கை துரோகம் செய்யும் மக்கள் வசிக்கும் ஊரைவிட்டுச் சென்றுவிடுங்கள்.

அன்னம் நீர் உள்ள இடத்தில்தான் வசிக்கும். நீர் இல்லாது போனால் வேறு இடம் சென்றுவிடும். அதுபோல் மனிதன் ஆதாயம் உள்ளவரை தான் நம்மிடம் பழகுவான்‌ இதை புரிந்துகொள்ளுங்கள்.

எருக்கம் பூ அழகாக இருந்தாலும் அது வாசனை தராது. அதுபோல் நல்ல குலத்தில் பிறந்திருந்தாலும் அழகாக இருந்தாலும் கல்வி கற்காவிடில் வீணான மனிதன் ஆவான்.

இதையும் படியுங்கள்:
மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரம் ஏன் இத்தனை சிறப்பு?
life-lessons

பணம் ஒன்றே ஒருவனை செல்வந்தன் ஆக்கும். பணம் இல்லை என்றாலும் கல்வி கற்றவர் செல்வந்தன் ஆகிறான் ஒருவன் கல்வி கற்காவிடில் அனைத்தும் இழந்தவனாகிறான்.

பெரிய யானை சிறிய அங்குசத்தைக் கண்டு பயப்படுகிறது‌. சிறிய மெழுகுவர்த்தி இருளை விளக்குகிறது. பெரிய மலை சிறிய உளியால் வெட்டி எடுக்கப்படுகிறது. பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை வைத்து ஒருவரை எடை போடக்கூடாது.

வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும் பாலும் ஊற்றி வளர்த்தாலும் கசப்பு மாறாது. அதுபோல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.

உங்கள் தேவைக்கு அதிகமான செல்வங்களை தானம் இடுங்கள். இன்றுவரை கர்ணன், பலி சக்கரவர்த்தி, விக்கிரமாதித்தனை பாராட்டுகிறோம். தேனீக்களை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள். அது கஷ்டப்பட்டு தேடிய தேனை அது உண்பதில்லை. யாரோ அழித்து எடுத்துக்கொள்கிறார்கள். அதுபோல் நாம் சேர்க்கும் செல்வங்கள் கொள்ளை போகுமுன் உங்களால் முடிந்த தானம் செய்யுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com