மூன்று கோலங்களில் காட்சியளிக்கும் முருகன்: எங்குமில்லா அதிசயம்!

Lord Muruga
Lord Muruga
Published on

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டார்குப்பம் பகுதியில் அமைந்திருக்கும் பாலசுப்ரமணியன் சுவாமி திருக்கோவிலில் முருகப்பெருமான் குழந்தையாகவும், இளைஞனாகவும், முதியவராகவும் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அருணகிரிநாதர் திருப்புகழில் இக்கோவிலின் சுப்ரமணிய முருகப்பெருமானை பற்றி பாடியுள்ளார்.

இங்கிருக்கும் முருகனை வழிப்பட்டால் பதவியோகம் வாய்க்கும் என்று அடித்து சொல்கிறார்கள். இதற்கு பின்பு ஒரு அற்புதமான திருக்கதை உள்ளது.

ஒருமுறை சிவபெருமானை தரிசிக்க கயிலாய மலைக்கு வந்த பிரம்மதேவன் வழியில் முருகப்பெருமான் இருப்பதை கவனிக்காமல் போய்விடுவார். இதனால் கோவம் கொண்ட முருகப்பெருமான் பிரம்மதேவனை அருகில் அழைத்து பிரணவ மந்திரத்தின் பொருளை சொல்ல சொல்லிக் கேட்கிறார். பிரம்ம தேவனுக்கு பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாமல் திருதிருவென்று முழிக்கவே, முருகப்பெருமான் அவரை தலையில் கொட்டி சிறையில் அடைத்துவிடுகிறார்.

அப்படி பிரம்மனிடம் கேள்விக் கேட்ட அதிகார தோரணையோடு இடுப்பில் கையை வைத்துக் கொண்டு கம்பீரமாக நிற்கும் திருக்கோலத்தில் முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். அதனால் அவரை இங்கு வந்து தரிசிக்கும் பக்தர்களுக்கு பதவி அதிகாரம் தானாக வந்து சேரும். பதவியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. மூலவர் சந்நிதிக்கு நேர் எதிரில், நடுகல் அமைப்பில் பிரம்மனின் சிற்பம் திகழ்கிறது. பிரம்மதேவன் எக்காலமும் தனக்கு ஆணவம் தலைதூக்கக்கூடாது எனும் பிரார்த்தனையுடன் முருகனை தியானித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம்.

இக்கோவிலில் முருகன் காலையில் குழந்தையாகவும், மதியம் இளைஞனாகவும், மாலையில் முதுமையாகவும் காட்சித் தருகிறார். இக்கோவிலின் கருவறைக்கு மேல் உள்ள விமான கோபுரம் ஏகதள வடிவமைப்பில் உள்ளது. குழந்தை ஞானத்துடன் பிறக்க வேண்டும் என்று பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.

இந்தக் கோயிலுக்கு தொடர்ந்து மூன்று வெள்ளி அல்லது செவ்வாய்க் கிழமைகளில் இங்கு வந்து, நெய் தீபம் ஏற்றி முருகப்பெருமானை வழிப்பட, பதவி உயர்வும், புத்திர பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இதையும் படியுங்கள்:
தசமி திதி: இன்று விரதமிருந்து வழிபாட்டால் கேட்ட வரங்களை தருவாள் நிமிஷாம்பாள்...
Lord Muruga

முருகப்பெருமான் இவ்விடத்திற்கு ஏழை சிறுவனாக வந்ததால், இந்த இடம் ஆண்டார்குப்பம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு வந்த பக்தர்கள் குளிப்பதற்காக தன் வேலை ஒரு இடத்தில் ஊன்றி தண்ணீர் ஊற்றை வரழைத்தார். இக்கோவிலில் மயிலுடன் சேர்ந்து சிங்கமும் முருகப்பெருமானின் வாகனமாக இருக்கிறது. பௌர்ணமி, ஸ்கந்த சஷ்டி, கார்த்திகை ஆகிய புனித நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு நீங்களும் ஒருமுறை வந்து முருகப்பெருமானின் அருளை பெறுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com