ஒரு மண்டலம் மன சுத்தியோடு பாராயணம் செய்ய தீராத பிரச்னைகளை தீர்க்கும் முருகப்பெருமான் மகாமந்திரம்!

Lord Murugan Maha Mantra that solves problems
lord Murugan with Sri Sachidananda Swamigal
Published on

ந்த சஷ்டி கவசம், கந்தகுரு கவசம், சண்முகக் கவசம் முதலானவற்றை நாம் தினமும் பாராயணம் செய்தால் முருகப்பெருமானின் அருளைப் பெறலாம். இதுபோலவே அருணகிரிநாதர் அருளிச்செய்த வேல் வகுப்பு என்ற திருப்புகழ் பாடலை வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் ‘வேல் மாறல்’ என்னும் பெயரில் ஒரு மகா மந்திரமாக அருளிச்செய்து நமக்குத் தந்திருக்கிறார். இது ஒரு சக்தி மிக்க மகா மந்திரமாகும்.

அருணகிரிநாதர் அருளிய வேல் வகுப்பு என்ற பாடலின் பதினாறு அடிகளை மேலும் கீழும் முன்னும் பின்னும் ஏறி இறங்கி வருவது போலவும் மாறி மாறி நான்கு மடங்காக அமைத்து 64 அடிகள் கொண்ட வேல் மாறல் மகா மந்திரத்தை அருளியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
பக்தர்களுக்காகக் காத்திருக்கும் கங்கை: பிறவிப் பயனைத் தரும் காவிரி கடைமுகம்!
Lord Murugan Maha Mantra that solves problems

பஞ்சாட்சரம் எனும் திருவைந்தெழுத்து மற்றும் சடாட்சரம் எனும் திருஆறெழுத்து முதலான மந்திர எழுத்துக்களை ஐங்கோணம் அறுகோணச் சக்கரங்களுக்குள் அமைத்து அந்த எந்திரங்களை பூஜை செய்வதால் பலன்கள் கிடைக்கும். இதே அமைப்பில் வேல்மாறல் மகாமந்திரத்தை வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் உருவாக்கியுள்ளார். இதன் காரணமாகவே வேல்மாறல் மந்திரம் சக்தி படைத்த ஒரு மந்திரமாக விளங்குகிறது.

வேல்மாறல் மகா மந்திரத்தை தொடர்ந்து ஒரு மண்டலம், அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் பாராயணம் செய்ய வேண்டும். வீட்டில் முருகன் படத்திற்கு முன்பாக விளக்கேற்றி வைத்து இந்த மகாமந்திரத்தைப் பாராயணம் செய்வது மிகுந்த பலனைத் தரும். இதை தினமும் காலை ஒரு முறை மற்றும் மாலை ஒரு முறை பாராயணம் செய்ய மனதிலுள்ள பய உணர்வு நீங்கும். மனதிற்கு நிம்மதி கிடைக்கும். மகிழ்ச்சியும் நிரந்தரமாகும். எதிரிகளின் தொல்லைகளிலிருந்து நம்மை பாதுகாத்து அருளும். மேலும், முருகனுக்குரிய முக்கிய விரத நாட்களிலும் இந்த வேல்மாறல் மகா மந்திரத்தைப் பாராயணம் செய்ய பல மடங்கு அதிகமான பலனைத் தரும். இதை முறையாக பாராயணம் செய்து வருபவர்களுக்கு அளவில்லாத பலன்களை அள்ளி வழங்கும். நோய்கள் அனைத்தும் தீரும், பிரச்னைகள் விரைவில் பறந்தோடும்.

இதையும் படியுங்கள்:
பயத்தைப் போக்கும் ரகசியம்: ஸ்ரீகிருஷ்ணர் கற்றுத் தந்த பாடம்!
Lord Murugan Maha Mantra that solves problems

இனி, வேல் மாறல் மகா மந்திரத்தை பாராயணம் செய்யும் முறை பற்றி அறிவோம்.

‘திருத்தணியில் உதித்து அருளும்’ எனும் அடியை முதலில் பன்னிரண்டு முறையும் நடுவில் ஒவ்வொரு அடி முடிந்ததும் ஒரு முறையும் ஓத வேண்டும். முடிவில் மீண்டும் பன்னிரண்டு முறை ஓதவும். வேலும் மயிலும் துணை என்பதை ஆறு முறை சொல்லி முடிக்கவும்.

குறிப்பாக, கார்த்திகை மாதத்தில் வேல் மாறல் மகா மந்திரத்தை பாராயணம் செய்வது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. அதிகபட்சமாக அரை மணி நேரத்திற்குள் வேல் மாறல் மந்திரத்தை நீங்கள் பாராயணம் செய்து முடித்து விடலாம். காலை மாலை என இரு வேளையும் இதை நீங்கள் பாராயணம் செய்து வர உங்கள் வீட்டில் முருகப்பெருமான் எழுந்தருளுவார் என்பது ஐதீகம். சகல சௌபாக்கியங்களும் உங்களுக்குக் கிடைக்கும் என்பது நிச்சயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com