
நமக்கு வரப்போகும் அதிர்ஷ்டத்தையும், ஆபத்தையும் முன்கூட்டியே அறிந்துக் கொள்வதற்கு நம் வீட்டிற்கு வரும் உயிரினங்களை(Lucky animals) கவனித்தாலே போதுமானதாகும். இதை வைத்து நம் எதிர்காலத்தில் என்ன நடக்க போகிறது என்பதை கணித்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். விலங்குகள், பறவைகள் நம் வீட்டிற்கு வருவது வெரும் தற்செயலான நிகழ்வு இல்லை. அவை ஏதோ ஒரு முக்கியமான செய்திகளை தெரிவிக்க வருகின்றன. நம் வீட்டிற்கு எந்த உயிரினம் வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை விரிவாக இந்த பதிவில் காண்போம்.
நம் வீட்டிற்கு பூரான் வந்தால், நீங்கள் உங்கள் மனதை சமநிலையில் வைத்துள்ளீர்கள் என்று அர்த்தம். ஆனால், உறவுகளில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அணில் வந்தால் செலவுகளை குறைத்து பணம் சேமிக்க வேண்டும் என்பதற்கான அறிகுறி. புறா வந்தால் அமைதி, சந்தோஷம், குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும் என்பது நம்பிக்கை.
எலி வந்தால் வீட்டில் உள்ள ஆன்மீக சக்தி குறைந்து தீய சக்திகள் உள்ளதை குறிக்கும். கிளி வந்தால் தெய்வீக ஆசீர்வாதம் மற்றும் சுபநிகழ்வுகள் வரப்போவதை குறிக்கும். பாம்பு வந்தால் உங்களுக்கு வரப்போகும் ஆபத்தை குறிப்பதாக இருக்கலாம். பூனைக்குட்டி நம் வீடு தேடி வருகிறதென்றால் பணவரவு வரப்போவதாக அர்த்தம். குருவிகள் வந்து வீடு கட்டினால் நாம் புதிய சொத்து வாங்கும் யோகம் வரும்.
எறும்புகள் வீடு நோக்கி வரும் போது அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. விரட்ட விரட்ட கருவண்டி திரும்பி வந்தால் வீட்டில் யாருக்கோ செய்வினை செய்திருப்பதாக பொருள். ஆந்தை நம் வீட்டை தேடி வந்தால், லக்ஷ்மி தேவியின் அருள் இருப்பதாக பொருள். காகம் நம் வீட்டிற்கு வந்தால் முன்னோர்களின் ஆசி பரிபூரணமாக இருப்பதாக அர்த்தம்.
குளவி வந்தால் குழந்தை பாக்கியம் ஏற்படும். பசு மாடு நம் வீட்டிற்கு வந்தால் தெய்வ அருளும், தெய்வீக அருளும் நிறைந்திருப்பதாக பொருள். கருங்குளவி, தேள் வந்தால் தீய சக்தி இருப்பதாகவும், நமக்கு ஏதோ தீய விஷயம் நடக்கப்போவதாக அர்த்தம்.
விலங்குகளுக்கு நம்மை விட இயற்கை சக்திகளை புரிந்துக்கொள்ளும் ஆற்றல் அதிகம். இதனால் தான் பேராபத்து வருவதை விலங்குகள்(Lucky animals) முன்கூட்டியே கண்டறியும் திறன் பெற்றிருக்கிறது. எனவே, அவை நம் வீட்டிற்கு வருவதை அலட்சியப்படுத்தாமல் அந்த எச்சரிக்கையை புரிந்துக் கொண்டு பாதுகாப்பாக இருப்பது நல்லது.