

மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகளை கூட குணமடையச் செய்யும் அதிசயக்கோவில் இது. இக்கோவில் மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ளது.
பெயர்க்காரணம்
ஒரு காலக்கட்டத்தில் கடல் பொங்கி மதுரை மாநகரமேகுறுகி மதுரையின் எல்லை தெரியாமல் இருந்தது. அப்படிக்குறுகிய மதுரையை மீண்டும் பழைய நிலைக்கு அமைக்க விரும்பிய பாண்டிய மன்னன் சிவபெருமானிடம் வேண்டினான் அப்போது சிவபெருமான் ஆலவாய் என்ற பெரிய பாம்பை வீசிப் போட்டார்.
அந்த பாம்பு ஊரின் முழுக்க வட்டம் அடித்துக் காட்டியது. அப்போது தென்திருவாலவாய் கோவில் இருக்கும் இடத்தில்தான் பாம்பின் வாயும் வாலும் ஒன்று சேர்ந்துள்ளது. இக்கோவில் தெற்கு திசையில் அமைந்ததால் தென்திருவாலவாய் ஆயிற்று. அல்வாய் என்றால் பாம்பு தென்திசைக்குத் தலைவனாகிய எமன் வழிபட்ட தலம் இது.
மனிதனுக்கு மரணத்தைவிட கொடிய பகைவனும் இல்லை. அந்த மருத்துவமனை மாற்றும் வைத்தியரைவிட சிறந்த நண்பனும் இல்லை. தனக்கு நோய் நொடி வந்து உயிருக்கு பக்கம் வருமோ என்று பயம் எல்லோர்க்கும் உள்ளதுபோல் எவனுக்கும் அந்த மரம் உண்டு. அதனால் சிவனை வணங்க அவர் காட்சி தருகிறார்.அப்போது அவர் தென்திருவாலவாய் சென்று திருநீறு பூசு மரணபயம் இருக்காது என்கிறார். எமனும் அப்படியே செய்து பயம் நீங்கப் பெற்றான். திருநீற்றுப்பதிகம் பாடப்பட்ட தலம் இது.
இக்கோவில் மதுரையில் உள்ள பஞ்ச பூதங்களில் அக்னி தலம் ஆகும். திருவிளையாடற் புராணக்கதைகளில் மதுரைக்கு எல்லை கட்டிய படலம் நிகழப்பெற்ற கோவிலாகும். இங்குள்ள தென்திருவாலவாய் சுவாமியை வணங்கினால் நோய் நொடிகள் நீங்கப் பெறுவதால் ஏராளமான பக்தர்கள் இங்கு வருகிறார்கள். இத்தல இறைவனை வணங்க நிம்மதி கிடைக்கிறது. இங்குள்ள அம்பாள் திருமண வரம் குழந்தை வரம் அருளுகிறார்.
அச்வப்பிரதக்ஷிணம்
இக்கோவிலில் உள்ள அரசமரத்தை 108 முறை வலம் வந்து திருவாலவாய் சுவாமியை நினைத்து உள்ளம் உருகி வேண்ட,மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் கூட குணமடைந்து அதிசயமாக கருதப்படுகிறது. இத்தலத்தில் 60 மற்றும் 80 கல்யாணங்கள் ஏராளமாக நடக்கிறது. நீண்ட ஆயுளை வேண்டுபவர்கள் இங்கு 108 முறை அச்வப் பிரதக்ஷிணம் செய்கின்றனர்
மதுரையில் உள்ள பழைய சொக்கநாதரைவழிபட செல்வம் கிடைக்கும். தென்திருவாலய சுவாமியை வணங்கி மரண துன்பம் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன தவிர மீனாட்சி சுந்தரேஸ்வரரை வணங்க அனைத்து நன்மைகளையும் பெறலாம்.சக்தி தலபீடங்கில் இது மந்திரிணி பீடம் என்றும்,மனோன்மணி பீடம் என்றும் அழைக்கப்படுகிறது. சக்தி இங்கு பாண்டியனின் மகளாக இருந்தாள்.இக்கோவில் சக்திரூபமான அவதாரமாக பாராட்டுப்பட்டு வருகிறது.
இங்கு அஷ்டலக்ஷ்மிகள் உருவங்களுடன் மண்டபம் உள்ளது.மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் சைவத்தில் இருந்து சமணமதம் மாறினான் அவன் மனைவி சிவனிடம் மனம் உருகி வேண்டுகிறாள் அப்போது கூன் பாண்டியனுக்கு வெப்பு நோயை சிவன் தருகிறார். எவ்வளவோ வைத்தியம் செய்தும் விபூதி குணமாகவில்லை.
அப்போது அவன் மனைவி மங்கையர்க்கரசி கனவில் சிவபெருமான் தோன்றி தென்திருவாலவாய் சென்று திருநீற்றுப்பதிகம் பாடி அபிஷேக அர்ச்சனை செய்து அந்த திருநீற்றை பூச நோய் நீங்கும் என்று கூறுகிறார்.. அதன்படி கூன்பாண்டியனுக்கு நோய் தீர்ந்து திரும்பவும் சைவத் தொண்டில் ஈடுபட்டான்
தென்திசைக்கு தலைவனான எமன் வழிபட்ட தலமாகையால் பஞ்சபூத தலங்களில் இது அக்னி தலமாகும்.