

பொதுவாகவே சாஸ்திரங்கள் நமக்கு பலவிதமான நல்ல பல வழிமுறைகளை நெறிமுறைப்படுத்தி உள்ளன. அதில் முக்கியமாக இந்து தர்ம சாஸ்திரமானது பல நெறிமுறைகளை நமக்கு வகுத்து கொடுத்துள்ளன. அவை ஏராளமாக இருந்தாலும் சில விஷயங்களை நம் வாழ்வில் கடைபிடிக்கவேண்டும்.
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கவே கூடாது!
நமது சகோதரன், சகோதரி, தாழ்ந்த நிலையில் இருந்தால் அவர்களுக்கு முடிந்த வகையில் உதவி செய்யவேண்டும்!
ஜோதிடர், குரு, நோயாளி, மருத்துவர், சந்நியாசி, இவர்களுக்கு அவர்களுடைய ஆபத்து காலங்களில் உதவி செய்யவேண்டும்!
நெருப்பை வாயால் ஊதக்கூடாது!
அண்ணன் மனைவி அண்ணியை தாய்போல வணங்கவேண்டும்!
சாப்பிடும்போது முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதாா்த்தங்களை சாப்பிட்டுவிட்டு பின்னர் நீா் அருந்தவேண்டும்!
இருட்டில் சாப்பிடக்கூடாது, சாப்பிடும்போது விளக்கு அணைந்துவிட்டால் சூாியனை தியாணம் செய்துவிட்டு சாப்பிட வேண்டும்!
வெறும் வெற்றிலையை போடக்கூடாது! பின்புறம் சுண்ணாம்பு தடவி பாக்குடன் சோ்த்து போட்டுக்கொள்ளவேண்டும்!
ஜோதிடர், வைத்தியர், சகோதரி ஆலயம் இவற்றிற்கு செல்லும் போது வெறும் கையுடன் செல்லக்கூடாது!
தலைவாசலுக்கு நேராக கட்டிலைப்போட்டோ அல்லது தரையிலோ படுக்கக்கூடாது!
ஈரமான கால்களுடன் படுக்கக்கூடாது!
வடக்கிலும் கோணத்திசைகளிலும் தலை வைத்து படுக்கக்கூடாது!
சிகரெட் பீடி துண்டுகளை அணைக்காமல் தரைமேல் போட்டு காலால் தேய்க்கக்கூடாது!
அங்கஹீனம் உள்ளவர்கள், கல்வி அறிவு இல்லாதவர்கள், வாழ்ந்து கெட்டவர்களை ஏளனமாகவோ அவர்களது குறைகளையோ சுட்டிக்காட்டக்கூடாது!
நம்மை ஒருவர் ஆலோசணை கேட்காத வகையில் நாம் அவர்கள் விஷயத்தில் தலையிடக்கூடாது!
பகலில் உறங்குவதை தவிா்க்கவேண்டும்!
பிறர் தரித்த உடைகள் செருப்பு மாலை படுக்கை இவைகளை நாம் உபயோகிக்கக்கூடாது!
பசுமாட்டை காலால் எட்டி உதைப்பது பாவமான ஒன்று!
பசுவிற்கு அகத்திக்கீரை, புல், தவிடு தண்ணீா் புண்ணாக்கு கொடுப்பது புண்ணியமாகும்!
அடுத்தவர்களின் தவறை ஆராய்ச்சி செய்து விளம்பரம் செய்யக்கூடாது!
வயதான பெற்ற தாய், தந்தையரை மதிக்காமல் அவர்களை கவனிக்காமல் விடக்கூடாது!
நெல்லிக்காய் ஊறுகாய், இஞ்சி, தயிா், போன்றவைகளை இரவில் சாப்பிடக்கூடாது!
பகைவன், கள்வன், கெட்டவன், இவர்களுடன் உறவே வைத்துக்கொள்ளக்கூடாது!
ஜாதகங்களை இரவு நேரத்தில் கணித்து பாா்க்கக்கூடாது!
கைவிரல் நகங்களை பற்கற்ளால் கடிக்கக்கூடாது!
பித்ருகள் சாபத்திற்கு ஆளாகக்கூடாது!
நிலை வாசற்படியில் தலைவைத்து படுக்கக்கூடாது!
மிருகங்களுக்கு தீங்கு செய்யக்கூடாது!
இப்படி பலவகையான தர்ம நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன அதன்படி நாம் நடந்து கொள்வதே உத்தமமான விஷயமாகும்!