வீட்டிலேயே சிவராத்திரி பூஜை செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!

maha shivaratri
maha shivaratri
Published on

சிவராத்திரியின் புராண கதை:

பிரளய காலத்தில் பிரம்மனும் அவரால் படைக்கப்பட்ட எல்லா ஜீவ ராசிகளும் அழிந்துவிட்டன. அந்த சூழலில் இரவு பொழுதில் அன்னை உமாதேவி, ஈசனை நினைத்து பூஜித்து வந்தார்.

இரவில் நான்கு ஜாமங்களில் ஆகம விதிப்படி சிவனுக்கு அர்ச்சனை செய்தார். வழிபாட்டின் முடிவில் அம்பிக்கை சிவனை வணங்கி வேண்டிக்கொண்டார். தான் பூஜித்த இந்த இரவு, ‘சிவராத்திரி’ என்று கொண்டாட வேண்டும் என வேண்டிக்கொண்டார்.

அப்படிப்பட்ட உன்னத நாள்தான் தேவர்களும், மனிதர்களும் இன்றும் சிவராத்திரி என்ற பெயரிலேயே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

சிவராத்திரி தினத்தன்று சூரியன் மறந்த முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் காலம் வரை சிவபெருமானை பூஜை செய்து வழிபடுபவர்களுக்கு அனைத்துவித பாக்கியங்களும் தந்து, இறுதியில் மோட்சம் தரவேண்டும் என மகேசனை உமா மகேஸ்வரி வேண்டிக்கொண்டாள்.

அதன்படி சிவராத்திரி தினத்தில் யாரெல்லாம் சிவ பெருமானை நினைத்து வழிபடுகிறார்களோ அவர்களுக்கு அனைத்து இன்னல்களும் நீங்கி மோட்சமும் கிட்டவேண்டும் என சிவ பெருமானிடம் வரம் பெற்றார் என்பதும் ஐதீகம்.

சிவராத்திரியன்று இரவில், மனித உடலின் சக்தி ஓட்டம் இயற்கையாகவே மேல்நோக்கி எழும்பும் வகையில் கோள்களின் அமைப்பு இருக்கிறது.

இந்த இரவு முழுவதும் கண் விழித்து, உடலை செங்குத்தான நிலையில் வைத்துக்கொள்வது ஒருவரின் உடல்நலம் மற்றும் ஆன்மநலனுக்கு மிக உகந்தது.

* சிவராத்திரி அன்று லிங்கோத்பவ காலம் என்பது இரவு 11:30 மணி முதல் 12 30 வரை உள்ள காலம். இந்த நேரத்தில்தான் ஈசன் சிவலிங்க வடிவில் தோன்றினார். அதனால் சிவராத்திரி அன்று அந்த நேரத்தில் விழித்திருந்து தரிசனம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், ஆயிரம் தடவை கங்கா ஸ்நானம் செய்த பலனும் தரவல்லது.

* சிவராத்திரி, காலனை சிவபெருமான் உதைத்த நாள், தேவர்கள் அர்ச்சித்த நாள், 11 கோடி ருத்திரர்கள் வழிபட்ட நாள், பார்வதி வழிபட்ட நாள்.

* தேனி மாவட்டம் உத்தமபாளையம் முத்து கருப்பண்ண சுவாமி கோவிலில், சிவராத்திரியன்று நள்ளிரவில் நடக்கும் சிறப்பு பூஜையில், சுவாமியின் பாதத்தில் வாழை மட்டை படைத்து, திருமண வரம் வேண்டுவோர் வழிபடுகிறார்கள். பிறகு அதில் பாதி பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனால் திருமணம் நடை பெறுவதுடன், குடும்பம் வாழையடி வாழையாக தழைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

* பண்டரிபுரத்தில் உள்ள பாண்டுரங்கன் 'சங்கர – நாராயண' வடிவம் என்பார்கள். பாண்டுரங்கன் தலையில் கிரீடத்துக்கு பதில் 'பாண லிங்கம்' இடம் பெற்றுள்ளது. சிவராத்திரி தினத்தன்று பாண்டுரங்கனுக்கு நிவேதனம் செய்வதில்லை. அவரும் அன்று சிவராத்திரி விரதம் இருப்பதாக சொல்கிறார்கள்.

* தேனி மாவட்டம் முத்து தேவன் பட்டியில் உள்ள நாக காளியம்மன் கோவிலில் சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அம்மாக்கு வித்தியாசமாக, மூங்கில் அரிசியில் கரும்புச்சாறு சேர்த்து, பொங்கல் செய்து, படைத்து, பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

* திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் சிவராத்திரியன்று, ஷேத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவருக்கு வைரத்தால் ஆன விபூதி நெற்றிபட்டை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெறுகிறது.

* சூரியனார் கோவிலில் சிவராத்திரி அன்று நான்கு கால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

இதையும் படியுங்கள்:
மகா சிவராத்திரி: ஸ்ரீகாளஹஸ்தி பிரம்மோற்சவம் முதல் குமரி சிவாலய ஓட்டம் வரை - சிறப்புத் தொகுப்பு!
maha shivaratri

சிவராத்திரி பூஜையை வீட்டிலும் செய்யலாம். சிவபெருமான் படத்துக்கு பிச்சி பூ, செண்பக பூ, தாமரை பூ தூவி வழிபடலாம். வில்வம் தவறாமல் சூட்டவேண்டும். மாதுளை பழத்தை சிவனுக்கு நிவேதனம் செய்து வழிபடுவது சிறப்பு.

* நாமக்கல் குகை கோவிலின் பாறை ஒன்றில் செதுக்கப்பட்ட சங்கரநாராயணன் திருவுருவம் ஒரு பாதி சிவன், மறு பாதி திருமால் என அமைந்துள்ளது. சிவன் தனது கையில் நாகத்தை ஏந்திய நிலையில் காட்சி தருகிறார். இங்கு சிவராத்திரி அன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

* திருவைகாவூர் ஈசனை சிவராத்திரி தினத்தன்று வழிபட்டால், மரண பயம் நீங்கும்.

* பாற்கடலை அமுதம் எடுக்கக் கடைந்தபோது, வெளிவந்த ஆலகால விஷத்தை உண்ட சிவன் மயங்கி, பிறகு கண் விழித்த நாளே சிவராத்திரி எனவும் சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
நிஜமான பக்திக்கு உருவம் தேவையில்லை - ஒரு குட்டப்பனின் கதை!
maha shivaratri

* ஆந்திரா தமிழக எல்லையில் உள்ள சுருட்டபள்ளி கோவிலில் விஷத்தை உண்ட ஈசனின் கழுத்திலே விஷம் தங்குமாறு பார்வதி தேவி அவரை தன் மடியில் படுக்க வைத்து இரவு முழுவதும் தவம் இருந்தார். அந்த நாளே சிவராத்திரி என்றும் ஒரு கருத்து உண்டு.

நீல நிற விஷம் சிவபெருமானின் கழுத்திலே தங்கியதால் நீலகண்டன் என்று பெயர் பெற்றார்.

கஞ்சனூரில் உள்ள சிவன் கோவிலில் ஒரே பிரகாரத்தில் அடுத்தடுத்து 2 தெட்சிணாமூர்த்திகள் உள்ளனர். சிவராத்திரியன்று இவர்களை வழிபட்டால், சிவஞானம் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com