வற்றாத ஐஸ்வர்யம் தரும் மகாலட்சுமி பூஜை: தீய சக்திகளை விரட்டும் ரகசியம்!

Mahalakshmi Puja
Mahalakshmi Puja
புவனா நாகராஜன்

கடந்த 1980முதல் கல்கி ,மங்கையர்மலர், தினமலர்,வாரமலர், பெண்கள் மலர், சமையல் குறிப்புகள் தமிழ்நாடு இ பேப்பர் மேலும் சில பத்திாிகைகளில் துணுக்குகள், கட்டுரைகள், கதைகள், கவிதைகள் எழுதிவருகிறேன். தமிழ்நாடு இ பேப்பரில் 50க்கும் மேற்பட்ட கவிதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறேன். எனது கணவரின் உந்துதல் மற்றும் கல்கி குழுமம், மங்கையர்மலர், தினமலர் கொடுத்த ஊக்கம் தொடா்கிறேன்.

Updated on

பொதுவாகவே நமது இல்லங்களில் பூஜை அறையில் தீபத்திற்கான எண்ணையுடன் இலுப்பை எண்ணெயும் சோ்த்து ஊற்றி தீபம் ஏற்றி மலர்கள் வைத்து இறைவனை வழிபடுவது நடைமுறை. அதோடு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சாம்பிராணி போட்டு இறைவனை வேண்டுகிறோம்.

நமது குலதெய்வமும், மகாலெட்சுமியும் வாசம் செய்யவேண்டும் என வழிபாடுகள் செய்வதுண்டு. அதோடு மஹாலட்சுமி தாயாா் நமது இல்லமெங்கும் வியாபித்திருக்க சில பரிகார பூஜைகளும் செய்யலாம்.

அவை என்ன வென்று பாா்க்கலாம்.

ஒரு புதிய பொிய அளவிலான மண் சட்டியை வாங்கி வந்து அதை சுத்தம் செய்து மஞ்சள், சந்தனம், குங்குமம், தடவி பின்னா் நான்கு செங்கற்களை வைத்து அதன் மீது சட்டியை வைத்து உமியை பரத்தவும்.

பூஜை அறையில் ஐந்து முக குத்துவிளக்கேற்றி வைத்து மஞ்சள், குங்குமம், சந்தனம், இட்டு பூச்சரத்தை விளக்கில் கட்டி அம்பாளை ஆவாஹனம் செய்யவும்.

அதன் பக்கத்தில் வாழை இலை போட்டு வெற்றிலை பாக்கு, பழங்கள், தேங்காய் உடைத்து வைக்கவும். ஒரு பித்தளை சொம்பில் சந்தனம் குங்குமம் தடவிவிடவும் சுத்த ஜலம் பிடித்து அதில் பச்சை கற்பூரம் ஏலக்காய் ஜாதிக்காய் கிராம்பு போட்டு ஒரு பூவை உள்ளே போடவும். அதன் மீது மாவிலை கொத்தை சொருகவும்.

மஞ்சள் பிள்ளையாா் பூஜை செய்த பின், சட்டியின் உள்ளே பச்சை கற்பூரம், கொஞ்சம் போட்டு பின்னா் வெண்கடுகு குங்கிலியம், கிராம்பு, வசம்புதுண்டு, ஜாதிக்காய் சாம்பிராணி, வெட்டிவோ் போட்டு நாட்டு மருந்து கடைகளில் வாங்கிய ஆலங்குச்சி, அரசங்குச்சி போன்ற பலவித சமித்துவகை குச்சிகளை ஸவஸ்திக் வடிவில் அடுக்கி அதன்மீது நெய் ஊற்றவும் பின்னர் ஹோம சாமான் பொட்டலங்களை பிாித்து வைத்துக்கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
வண்ணங்களால் வாழ்வை மாற்றலாம்! ஜோதிட ரீதியாக 7 நாட்களுக்குரிய மங்களகரமான நிறங்கள் இதோ…
Mahalakshmi Puja

தொடர்ந்து குலதெய்வம் மற்றும் மஹாலட்சுமி தாயாரை வேண்டி இரண்டு வெற்றிலையில் கற்பூரத்தை கொளுத்தி சட்டியின் உள்ளே போடவும் அதன் பின்னா் ஜ்வாலை விட்டு எாியும் நேரம் நெய் ஊற்றவும், அதோடுபிாித்து வைத்த பொட்டலங்களில் உள்ள அனைத்து பூஜை பொருட்களையும் வீட்டில் உள்ள அனைவருமே கொஞ்சம் கொஞ்சமாக போடவும்.

அவிஸ், அதாவது சூடான அன்னம் கொஞ்சம், சர்க்கரைப்பொங்கல் கொஞ்சம் போடவும், பின்னர் பழவகைகள் இருந்தாலும் போடலாம். அப்படி அனைத்தையும் போடும்போது ஓம் கண்கண் கணபதையே நமஹ என சொல்லியவாறே, ஓம்ஹரீம் ஶ்ரீயை நமஹா என முடிந்த அளவிற்கு சொல்லிபடியே மஹாலட்சுமி தாயாரே எங்கள் வீட்டில் நிந்தரமாக வாசம் செய்யவேண்டும் என மனதார வேண்டி பூக்களைப்போட்டு நைவேத்தியம் செய்து கற்பூர ஹாரத்தி எடுக்கவும், பின்னா் நமஸ்காரம் செய்து பிரசாதங்கள் வழங்கலாம்.

இப்படி செய்யும்போது ஹோமத்தில் இருந்து வரும் புகையானது நல்ல நறுமனத்துடன் வீடெங்கும் பரவிவிடுவதால் நமது வீட்டில் உள்ள எதிா்மறை ஆற்றல், ஏவல், சூன்யம் கண்திருஷ்டிபோன்றவை தானாகவே வெளியேறி, ஐஸ்வர்யங்கள் உண்டாகும்.

அதோடு மகாலெட்சுமி தேவியின் வாசம் இல்லமெங்கும் வியாபித்திருக்கும்.

இதையும் படியுங்கள்:
சிறு தானம்.. பெரும் பலன்! ராகு-கேது தோஷம் நீங்க நீங்கள் செய்ய வேண்டிய எளிய தானங்கள்!
Mahalakshmi Puja

இந்த பூஜையை வாராவாரம் வெள்ளி அல்லது செவ்வாய், அமாவாசை, பெளா்ணமி, தினங்களில் செய்யலாம். பிரம்ம முகூா்த்த நேரங்களிலும் செய்யலாம். பின்னா் மூன்று நாள் கழித்து சட்டியில் உள்ள சாம்பலை பூச்செடிகளில் போடலாம். கால்களில் மிதிபடக் கூடாது இந்தஎளிய பரிகாரத்தை செய்து மஹாலட்சுமியின் அருளைப் பெறுவோமாக!

logo
Kalki Online
kalkionline.com