மனதை நெகிழச் செய்யும் கும்பகர்ணனின் செஞ்சோற்றுக்கடன்!

கும்பகர்ணன்
Kumbakarnan

ராமாயணம், மகாபாரதம் என்ற  இரு பெருங் காப்பியங்களை எடுத்துக்கொண்டால், செஞ்சோற்று கடன் தீர்ப்பதற்காக கும்பகர்ணனும், கர்ணனும் பட்டபாடு நம் இதயத்தை வசீகரிக்கும். இதில் கர்ணனின் கதாபாத்திரத்தை அனைவரும் வெளிப்படுத்தி பேசியதைப் போல், கும்பகர்ணனின் கதாபாத்திரத்தை யாரும் பேசி அவ்வளவாகக் கேட்டிருக்க முடியாது. அதில் கும்பகர்ணனை பற்றி படிக்கும்பொழுது மனதை நெகிழ வைக்கும் சம்பவத்தை இதில் காண்போம்.

கும்பகர்ணனின் தம்பி வீடணன், “அண்ணா! நீயும் என்னுடன் வந்து ராமருடன் சேர்ந்துகொள். மாபாதக செயலைச் செய்யும் அண்ணன் இராவணனுடன் இருப்பதை விட அறத்தில் சிறந்த ராமருடன் இருப்பதுதான் நம்மை நல்வழிப்படுத்தும் செயலாகும். நம்முடன் பிறந்த அண்ணன் ராவணனே ஆனாலும் அவன் செய்யும் இழிச்செயலுக்கு நாம் துணை போகலாமா? நம் உடலில் ஏதாவது ஒரு இடத்தில் கட்டி வந்து விட்டால் அது நம் உடம்பில் தோன்றியது என்பதற்காக, அதை அப்படியே விட்டு வைத்திருக்க விரும்ப மாட்டோம் அல்லவா?  உயிரை வளர்க்கும் உபாயம் அறிந்து உடம்பில் தோன்றிய அந்தக் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்துகொள்ள  பயப்பட மாட்டோம்; மாறாக துணிவோம்.  அதற்கு எங்கோ ஒரு மாமலையில்  தோன்றிய பச்சிலைகளை பறித்து அரைத்து அந்த மருந்தைத்தான் பற்றாகப் போடுவோம். அது போல்தான் இதுவும்.

என்னதான் அண்ணன் ராவணன் நம் உடன் பிறப்பாக இருந்தாலும் தகாத செயலை செய்யும் அவனோடு சேர்ந்து இருப்பதை விட்டு விலகி, மாமலையில் தோன்றும் மருந்து நம் காயங்களை ஆற்ற உதவுவது போல் நல்லதே செய்யும் ராமபிரானிடம் வந்து சேர்வதுதான் நாம் சிறக்க, செய்த பாவங்கள் எல்லாம் அழிய, சிறந்த வழி. ஆதலால், அண்ணன் ராவணனை விட்டு விலகி ராமனுடன் வந்து சேர்” என்று  அழைப்பான்.

இதையும் படியுங்கள்:
ஆக்கப்பூர்வமான தள்ளிப்போடுதலின் பயன்கள் பற்றி தெரியுமா?
கும்பகர்ணன்

அதற்கு கும்பகர்ணன், “தம்பி! நான் ஆறு மாதம் உறங்குபவன். ஆறு மாதம் உண்பவன். ஆறு மாத காலத்திற்கு வேண்டிய உணவுகளை வண்டி வண்டியாக அனுப்புபவன் அண்ணன் ராவணன். இவ்வளவு உணவு வகைகளை ஒருவனுக்காக அனுப்புகிறோமே என்று எந்தவிதமான மன வருத்தமும் படாமல் என்னை காப்பாற்றி வருபவன் அண்ணன் ராவணன்தான். ஆதலால் நான் அண்ணனுக்கு செஞ்சோற்று கடன்  அடைக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். அதனால் அண்ணன் தீய வழியில் செல்கிறான் என்பதை அறிந்து இருந்தாலும், அவனை விடுத்து உன்னுடன் வர என் மனம் ஒப்புக் கொள்ளாது. ஆதலால் நான் உன்னுடன் வர இயலாது.

நீயாவது நாங்கள் இறந்த பின் எங்களுக்கு எள்ளும் நீரும் தெளித்து இறுதிக்கடன் செய்ய ,உயிரோடு உயர்ந்த இடத்தில்  அடைக்கலம் புகுந்திருப்பதைப் பற்றி மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நேரத்தில் அந்த ராமபிரானை விட்டு நீ ஏன் இங்கு வந்தாய்? நான் உன்னுடன் வர மாட்டேன். நீ அவரிடம் சென்று சேர்” என்று கும்பகர்ணன், தம்பி வீடணனிடம் கூறுவதாக வரும் இந்தப் படலம் அனைவர் மனதையும் நெகழ்ச்சியுறச் செய்யும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com