ஆக்கப்பூர்வமான தள்ளிப்போடுதலின் பயன்கள் பற்றி தெரியுமா?

ஆக்கப்பூர்வமான தள்ளிப்போடுதல்
Productive Procrastinationhttps://www.linkedin.com

ரு வேலையை செய்யாமல் தள்ளிப்போடுதல் என்பது ஒருவருடைய முன்னேற்றத்திற்குத் தடையாக அமையும். ஆனால், ஆக்கப்பூர்வமான தள்ளிப் போடுதல் (Productive Procrastination) பல நன்மைகளை அளிக்கும். அது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

ஆக்கப்பூர்வமான தள்ளிப்போடுதல் என்றால் என்ன?

பொதுவாக, வேலைகளைத் தள்ளிப்போடுதல் என்பது ஒன்றுமே செய்யாமல் வெட்டியாக பொழுதை கழிப்பதைக் குறிக்கும். ஆனால், ஆக்கப்பூர்வமான தள்ளிப்போடுதல் என்பது ஒரு குறிப்பிட்ட பணியை தாமதப்படுத்தும் செயலைக் குறிக்கிறது. ஒருவரின் தனிப்பட்ட அல்லது தொழில் முறை வளர்ச்சிக்கு நன்மை பயக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் குறைவான அதிக முக்கியத்துவம் இல்லாத பணிகளை வேண்டுமென்றே தாமதப்படுத்தும் ஒரு டெக்னிக்.

ஒரு வேலையை தள்ளிப் போடுவதன் மூலம் இன்னொரு வேலையில் அதிக கவனம் செலுத்தும் திறனைக் குறிக்கிறது. குறைவான லாபம் தரும் அல்லது குறைவான முக்கியத்துவம் உள்ள ஒரு வேலையை தள்ளிப்போட்டு விட்டு அதற்கு பதிலாக இன்னொரு முக்கியமான, உடனே செய்து முடிக்கக்கூடிய ஒரு வேலையில் கவனம் செலுத்துவதைக் குறிக்கிறது.

பயன்கள்:

1. இது ஆக்கப்பூர்வமான சிந்தனையைத் தூண்டி புதுமையான தீர்வுகளுக்கு வழிவகுக்கும். ஒரு அறிக்கை தயாரிப்பதை தள்ளிப் போட்டுவிட்டு மைண்ட் மேப்பிங்பில் நேரத்தை செலவிடலாம். இது அடுத்தத் திட்டப் பணியில் ஈடுபடுவதற்கான புதிய முன்னேற்றத்தைத் தரும்.

2. நேர மேலாண்மைக்கு முக்கியத்துவம் தருவதாக அமையும். முக்கியமில்லாத பணிகளை சற்றே தாமதப்படுத்துவதன் மூலம் உற்பத்தி செயல்பாடுகளில் ஈடுபட முடியும்.

3. மன அழுத்தம் மற்றும் சோர்வை குறைக்கும். தீவிரமான வேலையில் இருந்து சற்றே வேறு விதமான வேலைகளை செய்வதன் மூலம் மன அழுத்தத்தை நன்றாகவே குறைக்கும்.

சில உதாரணங்கள்:

அடுத்த வாரத்திற்கான ஒரு அறிக்கையை தயார் செய்ய வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் மேஜையை சுத்தம் செய்யலாம். கோப்புகளை ஒழுங்காக வைக்கவும், பணியிடத்தை தூய்மையாக வைக்கவும், நேரத்தை செலவிடலாம். இது பணிச்சூழலை உற்பத்தி திறனுக்கு மிகவும் உகந்ததாக ஆக்குகிறது. எதிர்காலப் பணிகளுக்கான கவனச் சிதறல்களைக் குறைக்கிறது.

ஒரு சவாலான புதிய திட்டத்தைத் தொடங்குவதற்கு பதிலாக மின்னஞ்சல் இன்பாக்ஸில் இருக்கும் தேவையில்லாத மெயில்களை படித்து அவற்றை டெலிட் செய்வது, பதில் அளிப்பது போன்ற டிஜிட்டல் தகவல் தொடர்புகளை ஒழுங்கமைப்பதில் நேரத்தை செலவிடலாம். இது இன்பாக்ஸின் அழுத்தத்தை குறைக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
தொப்பையை குறைப்பது இனி ரொம்பவும் ஈசிதாங்க!
ஆக்கப்பூர்வமான தள்ளிப்போடுதல்

ஒரு சிக்கலான வேலையை செய்ய வேண்டி இருக்கிறது. அதற்கான காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டு விட்டது. உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்யலாம். இது மனநிலையை சமன் செய்து, பணியை திறம்பட செய்ய உதவும்.

ஒரு இலக்கை செயல்படுத்துவதற்கு முன்பு அதற்கான விரிவான திட்டங்களை உருவாக்குவதன் மூலம் அந்த இலக்கை மிகவும் திறமையாகவும் குறைந்த நேரத்திலும் செய்ய முடியும்.

இந்த ஆக்கப்பூர்வமான தள்ளிப் போடும் பணிகளில் ஈடுபடும்போது அதற்கான டைமை பயன்படுத்த வேண்டும். சில சமயங்களில் உற்பத்தித் திறன் பற்றிய தவறான உணர்வை உருவாக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com