மரத்தடி பிள்ளையார் மகிமைகள்!

Marathadi Pillaiyar Mahimaigal
Marathadi Pillaiyar Mahimaigalhttps://www.sevvey.com
Published on

விநாயகரை வழிபட வினை தீரும். முழுமுதற் கடவுளை ஆலயத்திலும் வழிபடலாம். ஆற்றங்கரையிலும், அரச மரத்தடியிலும் வீற்றிருக்கும் விநாயகரையும் வழிபடலாம். மஞ்சளிலோ, மண்ணிலோ, சந்தனத்திலோ, பசுஞ் சாணத்திலோ பிடித்து வைத்தும் கூட வழிபடலாம். விநாயகர் மிகவும் எளிமையானவர். இவரை வழிபட வாழ்க்கையில் வெற்றியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

அரசமரம், ஆலமரம், வன்னி மரம், வேப்பமரம் என பலவகையான மரத்தின் அடியில் வீற்றிருக்கும் கணபதியை எந்த மரத்தடியில் வீற்றிருக்கிறாரோ அந்த மரத்திற்குரிய நட்சத்திரம், நாள் பார்த்து அவருக்கு அபிஷேகம் ஆராதனைகள் செய்து வழிபட நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும் என்பர்.

குட்டு பட்டாலும் மோதிரக் கையால் குட்டு பட வேண்டும் என்றொரு சொல் வழக்கு உண்டு. அதாவது மோதக கையான் முன் தலையில் குட்டிக் கொள்ள வேண்டும் என்பதை குறிக்கும் வாக்கியம் தான் இப்படி மருவியுள்ளது. பிள்ளையார் முன் தலையில் குட்டிக் கொண்டு வழிபட வேண்டும்.

விநாயகர் அமர்ந்து அருள் புரியும் 5 மரங்கள் மிகவும் சிறப்புடையவை. இவை பஞ்சபூத மரங்கள் என அழைக்கப்படுகிறது. அரசமரம் - ஆகாயம், வாதநாராயண மரம் - வாயு, வன்னி மரம் - அக்னி, முழு நெல்லி மரம் - நீர், ஆலமரம் - மண். இந்த மரங்களின் அடியில் அமர்ந்து அருள் புரியும் விநாயகரை வழிபட வேண்டிய அனைத்து செல்வங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை.

1.வன்னி மர பிள்ளையார்: வன்னி மர பிள்ளையாரை காண்பது அரிது. வன்னி மரத்திற்கு விசேஷ அம்சங்கள் பல உண்டு. வன்னி மரத்தடி விநாயகர் கிரக தோஷங்களை விலக்குவார். பாண்டவர்கள் வனவாசம் முடித்து ஒரு வருடம் அஞ்ஞாதவாசம் மேற்கொண்ட போது தங்களுடைய ஆயுதங்கள் மற்றும் போர் கருவிகளை ஒரு வன்னிமரப் பொந்தில் மறைத்து வைத்திருந்தனர். பாரத யுத்தத்தின் போது வன்னிமரப் பொந்தில் மறைத்து வைத்திருந்த தங்கள் ஆயுதங்களை எடுத்து போரிட்டு யுத்தத்தில் வெற்றி பெற்றார்கள் பாண்டவர்கள் என்பது புராணச் செய்தி‌. அத்தனை சிறப்பு பெற்ற வன்னி மரத்தடியில் அமர்ந்திருக்கும் விநாயகரை வழிபட வெற்றி நிச்சயம் என்பதும், குடும்ப ஒற்றுமை மற்றும் அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

இதையும் படியுங்கள்:
மழை வேண்டி செய்யும் பிரார்த்தனை பொய்க்காக திருத்தலம்!
Marathadi Pillaiyar Mahimaigal

2. அரசமர பிள்ளையார்: அஸ்வத்தம் என்றால் அரசமரம். இது ஒரு ராஜ விருட்சம். அரச மரத்து நிழலில் வீற்றிருக்கும் விநாயகரை கும்பிட வினைகள் அகலும்.அரச மரத்தடி விநாயகரை வழிபட குழந்தை பாக்கியம் கிட்டும். அரச மரத்தை சுற்றி வந்து அடிவயிற்றை தொட்டுப் பார்த்தாளாம் என்ற சொல் வழக்கே உண்டு.

3. வில்வ மர விநாயகர்: வில்வ மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகர் சிவ சொரூபமாக கருதப்படுகிறார். இவரை சதுர்த்தி நாளில் வழிபட்டு ஏழைகளுக்கு அரிசிி, பருப்பு போன்ற பொருட்களை தானமாக கொடுத்து வில்வ மரத்தை சுற்றி வலம் வர தம்பதிகள் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் விலகும்.

4. ஆலமரத்தடி விநாயகர்: ஆலமரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகரை வழிபட கடுமையான நோய்கள் அகலும். இவரை பக்தியுடன் வழிபட ஞாலம் போற்றும் வாழ்வு அமையும்.

வேப்ப மரத்தடி விநாயகரை வழிபட மனதுக்குப் பிடித்த வாழ்க்கை துணை அமையும்.

பெண் குழந்தை வேண்டுவோர் நெல்லி மரத்தடி விநாயகரை வழிபடுதல் சிறப்பு.

‘சாமி பொய் என்றால் சாணத்தைப் பார்; சாஸ்திரம் பொய் என்றால் கிரஹணத்தை பார்’ என்பார்கள்! சாணத்தை பிள்ளையாராக பிடித்து வைக்க அந்த சாணத்தில் புழு உண்டாகாமல் அப்படியே இருப்பது அதிசயம் தானே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com