திருநெல்லிவனம்:சுயம்பு நெல்லிநாதர் திருத்தலம் ஆன அதிசய வரலாறு!

துர்வாச முனிவரின் சாபம், தேவலோக நெல்லி மரங்களின் பரிதாபம், பிரம்மன் அருள் வழி சுயம்பு நெல்லிநாதர் அவதரித்த அதிசய புராண வரலாறு
thirunellivanam-nellinathar
thirunellivanam-nellinathar
Updated on

சம்பந்தப் பெருமானால் பாடப்பட்ட இடம் திருநெல்லிவனம். திருவாரூர் அருகே அமைந்துள்ளது.  இதற்கு புராண வரலாறு உள்ளது. துர்வாச முனிவர் கடுமையாக கோபம் கொண்டு சாபம் தருபவர். ஆனால் அவர் கொடுக்கும் சாபமெல்லாம் கடைசியில் நன்மையில்தான் முடியும். இந்த ஆலயமும் அப்படித்தான் அமையப் பெற்றது.  அவர் ஒருமுறை சொர்க்கத்திற்குச் சென்றார்‌. அங்கு அவருக்கு வரவேற்பு குறைவாக இருந்தது.  பஞ்ச விருட்சங்கள் என்று கூறப்படும் தேவலோக மரங்கள்தான் கற்பக விருட்சம், பாரிஜாதம்,சந்தனம், அரிச்சந்திரன் முத்தாரம் என்ற மரங்கள் முனிவருக்கான மரியாதையை தரவில்லை.‌  

இம்மரங்கள் அனைத்தும் கற்பக விருட்சம் போன்றவை. நமக்கு வேண்டியவற்றை அள்ளித் தரக்கூடியவை. நோயற்ற வாழ்வினை அள்ளித்தந்து நமக்கு சக்தி கொடுக்கக் கூடியவையாகும். சொர்க்கம் வருபவர் களுக்கு தங்கள் கனிகளைத் தந்து மகிழ்விக்கும் கூடியவை. அப்படியான மரங்கள் துர்வாச முனிவரைக் கண்டும் காணாதது போல் இருந்தன.  இதனால் கொதித்த முனிவர்  அந்த மரங்கள் பூமியில் துவர்ப்பும் கசப்பும் புளிப்பும் கொண்ட கனிகளைத் தரக்கூடியவைகளாக மாற சாபமிட்டார்.

இதனால் இந்த மரங்கள் பிரம்மனிடம் போய் தங்கள் நிலைமையைப் கூறி வருந்தின. சொர்க்கத்தில் எல்லா வழிகளிலும் உயர்ந்த நிலையில் இருந்த தங்கள் நிலையை இப்படி மண்ணுலகில் பயனற்றுபோனது பற்றி வருந்தின. பிரம்மா அவைகளிடம் இந்த இடத்தில் சிவபெருமான் சுயம்புவாக தோன்றுவார். அவரை வேண்டி விமோசனம் பெறுங்கள் என்று கூறினார்.

 பிரம்மன் கூறியபடியை லிங்கம் சுயம்புவாக வந்தது.  அந்த நெல்லி மரங்கள் அந்த லிங்கத்திடம் மன்றாடின.  தங்கள் கனிகள் மற்றும் நீரை உதிர்த்து வேண்டின்.  உரிய நாளில் ஈசன் அவர்களின் சாபங்களை தீர்ந்து அம்மரங்களின் சாயல் நெல்லிக் கனியாக பூமியில் இருக்குமென்றும் அவை நோய்களைத் தீர்த்து ஆயுளை வளர்க்கும் என்றும்  நெல்லி மரமாக நினைவு கூறப்படுவார்கள் என்றும் கூறி அனுப்பி வைத்தார். அவைகளும் சொர்க்கத்தை மீண்டும் அடைந்தன.

இதையும் படியுங்கள்:
சாய்ந்த லிங்கத்தை நேராக நிமிர்த்திய குங்கிலியகலய நாயனாரின் சிவ பக்தி!
thirunellivanam-nellinathar

அவைகள் சென்றாலும் நெல்லி மரங்கள் நடுவே சிவலிங்கம் அப்படியே இருந்தது. அப்பாதையில் வரும் முனிவர்களும் ரிஷிகளும் பக்தர்களும் அதற்கு பூஜை செய்து வந்தனர். அப்படி ஒரு பக்தர் வந்தார். அவர் அங்கு பூஜையில் இருக்கும்போது ஒரு அதிசயம் கண்டார். அந்த இடத்தில் புலியும் மானும் ஒன்றாக நீர் அருந்தின‌. சிறுத்தையின் கன்றுக்குட்டிகளும் விளையாடின. கொக்குகள் மீனை உண்ணாமல் நட்பு பாராட்டின. தவளையும் பாம்பும் உறவாடிய.து. இக்காட்சியை அவர் மன்னரிடம் ஓடிப்போய் சொன்னான்.  அந்த மன்னரும் சிவனருள் என்று எண்ணி அங்கு  ஆலயம் கட்டினான். அந்தக் கோவிலைக் கட்டியவர்  ஆமலகேசச் சோழன்.  மீனாட்சி சாயலில் இருந்த மங்கள் நாயகியை ஈசன் தன் அருகே வைத்துக் கொண்டார். ஆமலககேசச் சோழன் மகன் உத்தம சோழனுக்கு வாரிசு இல்லை.  அவன் தன் தந்தைவழி கோவிலான  ஆமலகேச்வரரை வேண்டினான். 

அப்போது ஒரு அதிசயம் தோன்றியது.  அங்கு ஒரு குழந்தை தோன்றி மன்னரின் மனைவி மடியில் அமர்ந்தது. அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. அந்த குழந்தை பார்வதியின் அம்சம் அதற்கு உரிய வயது வந்ததும் என்னிடம் சேர்ப்பாயாக என்று கூறியது. அக்குழந்தைக்கு மங்கள நாயகி என்று பெயரிட்டு வளர்த்து உரிய சமயத்தில் பங்குனி உத்தர நாளில் சிவனிடம் அரசன் சேர்ப்பித்தான்.

ஒரு கந்தர்வனுக்கு குஷ்ட ரோகம் ஏற்பட்டு இங்கு ஈசனை வணங்கி நோயிலிருந்து நிவாரணம் பெற்றான். இக்கோவில் தீர்த்தம் குஷ்டரோகத்த நீக்கக் கூடியது. பஞ்சாட்சர பூஜை செய்த ஐந்து தலங்களில் இந்த திருநெல்லித்தலமும் ஒன்று. நெல்லிமரத்தடியில் நெல்லின் நாதர் காட்சி தருகிறார்.  பைரவர் நவக்கிரகங்கள் சன்னதியும் உண்டு.

இக்கோவிலில் ஐப்பசி மாதம் ஏழு நாட்களும் மாசி மாத ஏழு நாட்களும் சூரிய ஒளி மாலை வேளையில் மூலவ்ர் மீது படும். இத்தலத்தில் பிரம்ம தீர்த்தம், சூரியதீர்த்தம், சந்திர தீர்த்தம், ரேகநிவாரண தீர்த்தம், சக்கரதீர்தம் ஆகிய பஞ்ச தீர்த்தங்கள் உள்ளன.

logo
Kalki Online
kalkionline.com