வீட்டில் நேர்மறை சக்தியை அதிகரிக்க பூஜையறையில் கட்டாயம் இருக்க வேண்டிய பொருட்கள்!

puja room with positive energy
pooja room
Published on

வீட்டின் பூஜை அறை மிகவும் புனிதமான இடம். சில பொருட்களை இங்கே வைத்திருப்பது மிகவும் புனிதமானது. இந்தப் பொருட்களை பூஜை அறையில் வைத்திருப்பதால் செல்வச் செழிப்பும் ஏற்படும். அதோடு, குடும்பத்தில் எந்தப் பிரச்னைகளும் இருக்காது. பூஜை அறை வீட்டில் தூய்மை மற்றும் நேர்மறைக்கு ஒரு இடமாகும். இந்த இடத்தில் தெய்வங்கள் இருப்பது தெய்வீக சக்தியை வெளிப்படுத்துகிறது. இது வீட்டை புனிதமாக வைத்திருக்கிறது. குறிப்பாக, கங்கை நீர், மயிலிறகுகள், சங்கு ஓடுதல், கோதுமை மாவு, தேங்காய், ஒரு ஜோடி கிராம்புகள் போன்றவை பூஜை அறையில் வைத்திருப்பது அற்புதமான பலன்களைத் தரும்.

கிராம்பின் ஆற்றல்: கிராம்பு நேர்மறை ஆற்றலின் அடையாளமாகக் கருதப்படுகிறது. எனவே, ஒரு ஜோடி கிராம்பை பூஜை அறையில் வைத்திருப்பது நேர்மறை ஆற்றலைப் பரப்பும். மேலும், எதிர்மறையை நீக்கி சூழலை இனிமையாக்கும். ஜோதிடத்தில் கிராம்பு சனியுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில் கிராம்புகள் சுக்ரனின் பிரதிநிதிகள் என்று அழைக்கப்படுகின்றன. சில நம்பிக்கைகளின்படி கிராம்பு செவ்வாய் கிரகத்துடன் தொடர்புடையதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் ஒரு ஜோடி கிராம்புகளை பூஜை அறையில் வைத்திருப்பதால் சனி பகவான், சுக்கிரன், செவ்வாய் போன்ற கிரகங்களின் நல்ல பலன்கள் வீட்டில் இருக்கும். இவற்றுடன் ராகு, கேது தோஷங்களின் விளைவுகளையும் குறைக்கும்.

இதையும் படியுங்கள்:
கால பைரவர் கட்டுப்பாட்டில் காசி மாநகரம்: வியப்பூட்டும் புராணக் கதை!
puja room with positive energy

அகல் விளக்கு: வீட்டில் எவ்வளவு விலை உயர்ந்த  விளக்குகள் இருந்தாலும் ஒரே ஒரு மண் அகல் விளக்காவது இருக்க வேண்டும். அதில் நெய் விட்டு தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பு. தினமும் ஏற்ற முடியாவிட்டாலும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமாவது நெய் தீபம் ஏற்ற வேண்டும். வீட்டின் பூஜை அறையில் காலை, மாலை இரு வேளை விளக்கேற்ற வேண்டும். இது வீட்டில் உள்ள இருளை மட்டுமின்றி, மனதின் இருளையும் போக்கி ஞானத்தை தரும், ஆன்மிக வளர்ச்சி தரும். வாழ்க்கை ஒளிமயமாக அமைய வழி காட்டும்.

ஊதுபத்தி: வீட்டின் பூஜை அறையில் எப்போதும் சாம்பிராணி நறுமணங்கள் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இது வீட்டில் உள்ள தீய சக்திகளையும் எதிர்மறை ஆற்றல்களை, தேவையற்ற வாசனைகளையும் துரத்துகிறது. ஊதுபத்தி மற்றும் சாம்பிராணியிலிருந்து வெளிவரும் புகை காற்றையும், மனதையும் சுத்தப்படுத்தி அமைதிப்படுத்தும். தெய்வீகத்தை உணர வைக்கும். இதனால் மனம் ஒரு நிலைப்படவும் மனம் தெய்வத்துடன் ஒன்றி இருக்கவும் வைக்கும்.

மணி: வீட்டில் பூஜை செய்வதற்கான ஒலியும் புனிதமான சூழ்நிலையை ஏற்படுத்தும். பூஜை மணியிலிருந்து வெளிப்படும் ஒலி நம்முடைய காது வழியாக சென்று உடலில் உள்ள எதிர்மைறை ஆற்றல்களை நீக்கி, நேர்மறை ஆற்றல்களைக் கொண்டு வரும். வீட்டில் தெய்வீகத் தன்மையை தந்து நாம் செய்யும் பூஜைகளுக்கான பலனை பல மடங்காக மாற்றும்.

இதையும் படியுங்கள்:
பாவம் தீர்க்குமா கங்கை நீராடல்: சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல் மர்மம்!
puja room with positive energy

தீர்த்தம்: பூஜை அறையில் தாமிரம் அல்லது செம்பினால் ஆன சிறிய பாத்திரத்தில் கங்கை நீர் போன்ற புனித நதிகளின் தீர்த்தம் வைத்திருக்க வேண்டும். இது வீட்டில் தீய சக்திகள் அண்டாமல் பாதுகாப்பதுடன், வீட்டை புனிதத் தன்மையுடன் வைத்திருக்கும். வீட்டில் வெள்ளிக்கிழமை போன்ற முக்கியமான நாட்களில் புனித நீரை தெளித்து வருவதால் வீட்டில் தெய்வீகத் தன்மையும் சுபிட்சமும் நிறைந்திருக்கும்.

புனித நூல்கள்: வீட்டின் பூஜை அறையில் பகவத் கீதை, ராமாயணம் போன்ற தெய்வீகத் தன்மை வாய்ந்த புனித நூல்கள் வைத்திருப்பதால் வீட்டில் ஞானம் நிறைந்திருக்கும். இவற்றைத் தொடர்ந்து வாசிக்க வாசிக்க மனத்தெளிவும், தெய்வ சக்தியுடன் தொடர்பும் ஏற்படும். மனதில் தெளிவு, மனம் ஒருநிலைப்படுதல், ஆன்மிக வழி நடத்தல் போன்றவற்றை உணர முடியும்.

பூக்கள்: பூஜை என்ற சொல்லில் பூ என்பது மலர்களையும் ஜை என்பது மந்திர ஜபத்தையும் குறிப்பதாகும். இவை இரண்டும் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் அவசியம். புதிதாக மலர்ந்த மலர்கள் தெய்வீக சக்தியை வெளிப்படுத்தக்கூடியவை. இது செல்வ வளத்தையும் ஈர்க்கக்கூடியது. அழகு, தூய்மை ஆகியவற்றின் அடையாளமாக இருக்கும் பூக்களை தெய்வங்களுக்குப் படைக்கும்போது மன அமைதியும், வாழ்வில் செழிப்பும் ஏற்படும். அதேசமயம் காய்ந்த மலர்களை பூஜை அறையில் வைத்திருக்கக் கூடாது. இது எதிர்மறை சக்திகளை ஈர்க்கும். அதனால் சுவாமிக்கு வைக்கும் பூக்களை தினசரி மாற்றி விட வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com