முத்து மாலையைப் பக்தி மாலையாக மாற்றிய அனுமன்!

Muthu Malaiyai bhakthi Maalaiyaaka Matriya Anuman
Muthu Malaiyai bhakthi Maalaiyaaka Matriya Anumanhttps://healinginthewillows.com
Published on

ராமாயணத்தில் பதினான்கு ஆண்டுகள் போர் முடிந்த பின்னர் அயோத்தியில் இராமனுக்கு முடி சூட்டு விழா நடைபெறுகிறது. அப்போது இராமனுக்கும் சீதைக்கும் பல நாடுகளிலிருந்தும், பல ஊர்களிலிருந்தும் பல மக்கள் பரிசுப் பொருட்களைக் கொண்டு வந்து அவர்களுக்குத் தருகிறார்கள். அப்போது விபீஷ்னர் ஒரு முத்துமாலையை இராமனுக்குப் பரிசாகத் தருகிறார்.

விபீஷணன் கொடுத்த அந்த முத்து மாலையை இராமன் அனுமனுக்கு அளித்தார். அதனைப் பெற்ற அனுமன் அந்த முத்துமாலை வியந்து பார்க்கிறார். பின்னர் முத்து மாலையில் உள்ள ஒவ்வொரு முத்துக்களையும் பற்களில் கடித்தும், உடைத்தும் பார்க்கிறார்.

உடனே இராமர், '‘அஞ்சனை மைந்தனே ஏன் இப்படிச் செய்கிறாய்?'’ என்று அனுமனை நோக்கிக் கேட்டார். அதற்கு அனுமன் '‘இல்லை பிரபு நீங்கள் கொடுத்த இந்த முத்து மாலையில் உங்கள் திருவுருவமும் இல்லை, அன்னை சீதையின் திரு உருவமும் இல்லை. ஏன் அதில் உங்கள் திருநாமம் கூட எழுதவில்லை. உங்கள் திருவுருவம் அல்லது திருநாமம் இல்லாத எந்தப் பொருளும் எனக்குத் தேவையில்லை பிரபு. அதனால்தான் உடைத்தேன்” என்றார்.

ஆனால், சபையில் உள்ளவர்கள் இதனை நம்பாமல், “அனுமனுக்கு முத்துமாலை பிடிக்கவில்லை. அதனால்தான் அவன் இத்தகைய பொய் காரணங்களைக் கூறி தன்னை நியாயப்படுத்திக் கொள்கிறான்” என்றனர்.

இதனைக் கேட்ட இராமர், சபையில் உள்ளவர்களை அமைதிப்படுத்தி, '‘அஞ்சனை மைந்தனே, எங்கள் திரு உருவமும் திரு நாமமும் இல்லாத எந்த ஒரு பொருளையும் நீ ஏற்க மாட்டாய் என்றாயே அது உண்மைதானே'’ என்றார்.

“ஆம் பிரபு” என்றான் அனுமன்.

இராமன் மீண்டும், '‘நீ அனுதினமும் எங்களை நினைத்துக் கொண்டே இருப்பதாக எங்களுக்குக் கூறினாய் அல்லவா. அப்போது உனக்குள்ளும் நாங்கள் இருப்போம் அல்லவா. அதை உன்னால் காட்ட முடியுமா?” என்று கேட்டார்.

இதையும் படியுங்கள்:
நந்தியே கோபுரமாய் அமைந்த அதிசய ஆலயம்!
Muthu Malaiyai bhakthi Maalaiyaaka Matriya Anuman

சபையில் இருந்தவர்கள் அனைவரும், ‘அனுமன் தன் வாயைக் கொடுத்துத் தானே மாட்டிக் கொண்டான்’ என்று எள்ளல் செய்தனர். ஆனால் அனுமன் அதைப் பொருட்டாக எண்ணாமல் இதோ நிரூபித்துக் காட்டுகிறேன் என்று கூறி தனது நெஞ்சைப் பிளந்து அதில் இராமனும் சீதையும் அமர்ந்திருக்கும் கோலத்தை அனைவருக்கும் காட்டினார்.

இதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் திகைத்தனர். அனுமனின் பக்தியை அனைவருக்கும் அறிய வைக்கவே இந்த நாடகத்தை ஸ்ரீராமபிரான் நடத்தினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com