அதிகார நந்தி முதல் திருக்கல்யாணம் வரை: 2026 மயிலை திருவிழாவின் சிறப்பம்சங்கள்!

Mylapore Kapaleeswarar temple
Mylapore Kapaleeswarar temple Highlights
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் 2026 ஆம் ஆண்டு பங்குனிப் பெருவிழா மார்ச் 23ஆம் தேதி காலை 6:20 மணி முதல் 6.50 மணி வரை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. இந்த விழாவில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு வருடமும் பங்குனிப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

மார்ச் 22ஆம் தேதி திருமயிலையின் காவல் தெய்வமாக விளங்கும், கிராம தேவதையான கோலவிழி பத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் பூச்சொரிதல் சிறப்பாக நடைபெற்றது. மார்ச் 23ஆம் தேதி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை பங்குனி பெருவிழா வெகு விமர்சையாக நடைபெறும் இவ்விழாவில் மார்ச் 25 அதிகாலை 6:00 மணிக்கு அதிகார நந்தியின் வீதியுலாவும், அதைத் தொடர்ந்து கந்தர்வன், கந்தர்வி, மூஷிகம், வெள்ளி விடை வாகனங்கள் புறப்பாடும், திருஞானசம்பந்தர் திருமுலைப்பால் விழாவும் நடைபெறும்.

மார்ச் 29ஆம் தேதி தேரோட்டமும், மார்ச் 30ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற முக்கிய நிகழ்வான அறுபத்து மூவர் வீதி உலாவும் நடைபெறும். ஏப்ரல் 1ஆம் தேதி தீர்த்தவாரி நடைபெறும். அதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் இவ்விழாவில் தினமும் காலை, இரவு இரண்டு நேரமும் வாகன சேவைகள் நடைபெறும்.

திருமயிலை அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை அருள்மிகு கபாலீஸ்வரர் ஸ்வாமி வருடாந்திர பங்குனி பிரம்மோற்சவம் முதல் நாள் (23.3.2026) இரவு சுவாமி பிரியாவிடை அம்மனுடன் மயிலுருவில் சிவபூஜை செய்யும் திருக்கோலத்தில் புன்னை மர வாகனத்திலும், அம்பாள் கற்பக விருட்ச வாகனத்திலும், ஶ்ரீ சிங்கார வேலஸ்வாமி வேங்கை மர வாகனத்திலும், ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் ஆகியோர் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி புறப்பாடு நடைபெற்றது.

இதையும் படியுங்கள்:
சென்னையில் ஒரு சூரிய தலம்: கொளப்பாக்கம் அகத்தீஸ்வரர் கோவில் சிறப்புகள்!
Mylapore Kapaleeswarar temple

பங்குனித் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 24 காலை சூரிய வாகனம் மற்றும் பல வாகனங்களில் இறைவன் வீதி உலா, மயிலை மாட வீதிகளில் மிகவும் கோலாகலமாகத் தொடங்கியது. உலா நாட்களில் மாலை நேரங்களில் விடையாற்றி கலை நிகழ்ச்சிகளும் தினமும் நடைபெறுகின்றன.

தேரோட்டம் மற்றும் அறுபத்து மூவர் (63) விழாவின் பொழுது மயிலாப்பூர் 4 மாடவீதிகளில் கூட்ட நெரிசல் மிகவும் அதிகமாக இருக்கும். தேரோட்டத்தன்று தேர் ஒய்யாரமாக ஆடி அசைந்து வரும் அழகைக்காண லட்சக்கணக்கில் மக்கள் கூடுவார்கள். ஒவ்வொரு வருடமும் பங்குனித் திருவிழாவை காவல்துறை அதிகாரிகள் மிகச்சிறப்பாக முன்கூட்டியே திட்டமிட்டு, மாடவீதிகளில் போக்குவரத்து மாற்றங்களை செய்து சிறப்பாக பணியாற்றுவார்கள்.

logo
Kalki Online
kalkionline.com