பாற்கடல் அமிர்தமும் வெங்காயத்தின் தோற்றமும்!

rahu-ketu-story
rahu-ketu-story
ஆ.நர்மதா

வணக்கம்! என்னுடைய பெயர் ஆ.நர்மதா. நான் ஒரு முதுநிலை வேதியியல் பட்டதாரி. விருதுநகர் அருகில் இருக்கும் பாளையம்பட்டி என்னும் கிராமத்தில் இருந்து எழுதி வருகிறேன். நான் பள்ளியில் படிக்கும் போது இருந்தே எனக்கு தமிழின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. தமிழின் மீது இருந்த ஆர்வத்தினால் கவிதைகள்,கட்டுரைகள், சிறுகதைகள் எழுத கற்றுக் கொண்டேன்.இந்த சமுதாய சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் என்னுடைய எழுத்துக்கள் எப்போதும் வீரியத்துடன் இருக்கும். இல்லத்தரசியாக இருந்து கொண்டு என்னுடைய எழுத்தாற்றலை படைத்து வருகிறேன்.

Updated on

தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து அமிர்தத்திற்காகப் பாற்கடலைக் கடைந்தனர். அப்போது தன்வந்திரி பெருமாள் அமிர்த கலசத்துடன் பாற்கடலில் இருந்து வெளியே வந்தார். விஷ்ணு “மோகினி” அவதாரம் எடுத்து அந்த அமிர்தத்தைத் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பகிர்ந்து அளிக்கத் தொடங்கினார்.

“ஸ்வர்பானு” என்ற அசுரன் தேவர் வடிவத்தில் அமிர்தத்தை அருந்த தொடங்கினான். இதனை அறிந்த சூரிய பகவானும், சந்திர பகவானும் விஷ்ணு பகவானிடம் கூறினர்‌. இதனால் கோபமடைந்த விஷ்ணு பகவான் அமிர்தம் தொண்டையில் இருந்து வயிற்றுக்குள் செல்வதற்குள் ஸ்வரபானவின் தலையை சுதர்சன சக்கரத்தால் துண்டித்தார்.

அவன் கழுத்தில் இருந்து சிந்திய ரத்த துளிகளில் இருந்து வெங்காயமும், பூண்டும் பிறந்தன. இரு துண்டுகளாக அவன் உடல் பகுதிகள் சிதறின. அவற்றின் ராகு பாம்பின் தலை மற்றும் மனித உடலுடனும். கேது மனித தலை மற்றும் பாம்பின் உடலுடனும் பிறந்தனர்.

பூண்டும் வெங்காயமும் தாமச உணவு (ராட்சச உணவு ) என்று கருதப்படுகிறது. அமிர்தத்தை உண்டதன் காரணமாக உருவானதால் வெங்காயம், பூண்டின் அதிக அளவு சுவை உடையதாகவும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, செரிமானம் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கும், சளி இருமலுக்கு நிவாரணமாக பல நன்மைகளைக் கொண்டது.

மேலும் வெங்காயமும், பூண்டும் வாய், மார்பகம், வயிறு மற்றும் குடல் புற்றுநோய் உருவாவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. இவ்வாறு அமிர்தத்தை உண்டதன் காரணமாக உருவானதால் இவை மனிதனுக்கு பல நன்மைகளை தருகின்றனர். இருப்பினும் ஒரு அரக்கனின் ரத்தத்திலிருந்து உருவானதால் இந்த உணவை உட்கொள்வது அரக்க குணத்தையும், கோபம், ஆசை, சோம்பல், அமைதியின்மை, காமம், மற்றும் தெய்வீக சிந்தனையைக் குழைப்பதாகவும் இருந்தது.

அமிர்தத்தை அருந்தியதால் ராகவும், கேதுவும் சாகா வரம் பெற்றனர். மேலும் இவர்களுக்கு விஷ்ணு பகவான் நவகிரகங்களில் நிழல் கிரகங்கள் (சர்ப்ப கிரகங்கள்) என்ற அந்தஸ்தை வழங்கினார். சர்ப்ப கிரகங்கள் என்றால் பாம்பு கிரகங்கள் என்று அர்த்தம். இவை ஜோதிடத்தில் ஆன்மீக வளர்ச்சி மற்றும் முக்தி, கர்ம வினைகளைக் குறிக்கின்றனர். ராகு மனிதனின் பொருள்சார் ஆசைகளையும், கேது ஞானம் மற்றும் வைராக்கியத்தையும் தருவார்.

இதையும் படியுங்கள்:
தஞ்சை பெரிய கோவிலும் கருவூர் சித்தரின் அருளும்!
rahu-ketu-story

வெங்காயம், பூண்டும் ஒரு அசுரனின் ரத்தத்திலிருந்து தோன்றியதால் இவை புனித மற்ற உணவாக கருதப்படுகிறது. வெங்காயம் மட்டும் பூண்டில் இருக்கும் அதிகமான வாசனை கடவுளுக்கு படைக்கப்படும் நைவேத்யத்தில் புனிதத்தன்மை மற்றும் தூய்மையை குறைப்பதாகக் கருதப்படுகிறது. இன்றும் இந்து மதத்தில் கடவுளுக்கு படைக்கப்படும் உணவுகளில் வெங்காயம், பூண்டும் புறக்கணிக்கப்படுகின்றன.

logo
Kalki Online
kalkionline.com