நவராத்திரியில் ஏழுமலையானின் நாச்சியார் திருக்கோலம்!

நவராத்திரியில் ஏழுமலையானின் நாச்சியார் திருக்கோலம்!
nalam tharum Navarathiri
nalam tharum Navarathiri

திருமலையில் உள்ள ஏழுமலையானுக்கு பிரமாண்டமாக  நவராத்திரி ப்ரஹ்மோற்சவ விழா நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் காலை இரவு என இரு வேளையும் நான்கு மாட வீதிகளில் திரு உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து கொண்டிருக்கிறார், அகிலாண்ட கோடி ப்ருஹ்மாண்ட நாயகன். ப்ரஹ்மோற்சவ வைபத்தின் ஐந்தாம் நாள் காலை எம்பெருமான் நாச்சியார் திருக்கோலத்தில் உலா வந்தார். தாயாரை போல அலங்காரம் செய்து கொண்டு வருவதை தான் நாச்சியார் திருக்கோலம் என்றும் மோகினி அவதாரம் என்றும் சொல்லுவோம்.

ஸ்ரீரங்கத்தில் ஒரு முறை இப்படி ஸ்ரீ ரங்கநாதர் நாச்சியார் கோலத்தில் திரு வீதி உலா வருவதற்காக, சகல விதமாகவும் தன்னை அலங்கரித்து காத்துகொண்டிருந்த போது அங்கே பராசர பட்டர் வந்தாராம். பெருமாளின் அலங்காரத்தை பார்த்து விட்டு பட்டர் ஒன்றுமே சொல்லாமல் போவதை பார்த்து பெருமாளுக்கு வருத்தமாகி விட்டதாம். “என்ன பட்டரே, நான் எவ்வளவு அழகாக அலங்காரம் செய்து கொண்டிருக்கிறேன். என்னை பார்த்து ஒரு வார்த்தை கூட சொல்லாமல் போகிறீர்களே? இது நியாயமா?” என கேட்டாராம் பெருமாள். அதற்கு பட்டரோ, “அலங்காரம் எல்லாம் பிரமாதமாகத்தான் இருக்கிறது. ஆனால், பெருமாளே நீர் என்ன தான் தாயாரை போல அலங்காரம் எல்லாம் செய்து கொண்டாலும், தாயாரின் கண்களில் தானாகவே ஒட்டி இருக்கும் அந்த கருணை, தயை என்பது உம்மிடத்தில் வரவே வராது. தாயாரின் அழகுக்கே அழகு செய்வது அவளது தயை தான்.” என்று சொல்லி விட்டு போய் விட்டாராம்.

ஆம் அந்த தயை எனும் கருணையின் ஊற்று தாயார் தானே?  நவராத்திரி நாட்களை நாம் கொண்டாடி கொண்டு இருக்கும் இந்த வேளையில் தாயாரை அந்த சக்தி ஸ்வரூபத்தை தானே ஒன்பது நாட்களுமே கொண்டாடி கொண்டிருக்கிறோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com